07/06/2026 - இன்று #மதுரை#சிம்மக்கல் பகுதிக்கு வருகை
தந்த மதுரை மாவட்ட மத்திய
சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு #முஸ்தபா அவர்களிடம் மதுரை மைய மாவட்டம் சார்பில்..
மதுரை சிம்மக்கல் MMC - காலணியின் பல ஆண்டுகளாக
இடியும் நிலையில் உள்ள வீடுகளை மாற்றி புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என்ற #விசிக-வின் நீண்ட கால கோரிக்கையை..
மதுரை மையம் மாவட்ட
செயலாளர் வழக்கறிஞர்
ப. இரவிக்குமார் அவர்கள்
தலைமையில் மனு அளித்தோம்..
விரைவில் தமிழக முதல்வர்
Chief Minister of Tamil Nadu அவர்கள் கவனத்தில் கொண்டு சென்று பரிசீலனை மனுவை செய்வதாக உறுதி அளித்தார்..!
@CMOTamilnadu@thirumaofficial@VCKofficial_TN@vckitwingoffi
07/06/2026 - இன்று மதுரை
சிம்மக்கல் பகுதிக்கு வருகை
தந்த மதுரை மாவட்ட மத்திய
சட்ட மன்ற உறுப்பினர்
மாண்புமிகு #முஸ்தபா
அவர்களிடம் மதுரை
மைய மாவட்டம் சார்பில்..
புரட்சியாளர் #அம்பேத்கர்
முழு உருவ சிலை வைத்திட
கோரிக்கை வைத்தோம்..
விரைவில் அதற்கான முழு
பணியையும் விரைவில்
தொடங்குவதாகவும் சிலை
அமைக்க #விசிக-விற்கு
முழு ஒத்துழைப்பும்
வழங்குவதாக உறுதி
அளித்தார்..!
@thirumaofficial@VCKofficial_TN@vckitwingoffi
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து எண்.21 செல்லாமல் இருந்தது. 06.06.2026 சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
@VanniTamizhVCK
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
-------------------------------
1) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
2) கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து கட்சிக்குள்ளேயே பேசவேண்டிய முரண்களைப் பொதுவெளியில் பேசி, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார் .
3) தேர்தலுக்கு முன்பு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போதும் கருத்து மாறுபாடுகளைக் கடந்து பேணவேண்டிய தோழமைக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும் வகையில், ஊகமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
4) கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முன்னணி பொறுப்பாளர் என்கிற முறையில், அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி, உரிய நேரத்தில்- உரிய வகையில், 'கடிந்தும் -கண்டித்தும்' அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை.
5) வாய்மை, நேர்மை என்னும் பெயரில் உட்கட்சி முரண்களை பொதுவெளியில் பேசுவது, கட்சியின் கட்டுக்கோப்பான வலிமையை அசைத்துப் பார்க்கும் ஆபத்தான முயற்சியாகும். அத்துடன், கட்சியைப் பின்பற்றி அரசியல் சக்தியாய் அணிதிரளும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மிகவும் தீங்கான போக்காகும்.
6) கட்சியை விட, கருத்தியலை விட, களம் காணும் மக்களைவிட, 'தானே முதன்மை' என தன்னை முன்னிறுத்தும் இத்தகையபோக்கு, ஒரு 'தவறான முன்மாதிரியாக' அமைந்து கட்சியிலுள்ள பிறரையும் இவ்வாறு செயல்படத் தூண்டுவதாக அமையும்.
7) இந்நிலையில், கட்சியின் நலன்களைக் கருத்தில்கொண்டு பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள், "கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார்."
😎 இந்த நடவடிக்கை தொடர்பாக இவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கமளிக்கவும் அல்லது கட்சித் தலைமையிடம் மேல்முறையீடு செய்யவும் இவருக்கு உரிமையுண்டு.
9) இடைநீக்க காலத்தில் இவர் கட்சியின் விதிமுறைகளை மதித்து, மேலும் முரண்பாடான செயல்களில் ஈடுபடாமல், கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பதன் மூலமே, இவரது மேல்முறையீடு ஏற்கப்பட்டு, இடைநீக்க நடவடிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
10) ஒழுங்கு நடவடிக்கைக்குரிய காலத்தில் இவர் கட்சியின் நிகழ்வுகளில், போராட்டங்களில், கட்சி சார்ந்த இன்னபிற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டியது இவரது இன்றியமையாத அரசியல் கடமையாகும்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
``அட்சதை போட்டு
அரிசியை வீணாக்காதீர்கள்’’
``நூத்துக்கு 99 திருமணங்களில் அரிசியை மணமக்கள் மீது வீசி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ஒரு கல்யாணத்துக்கு 2 கிலோ அரிசி பயன்படுத்தினால் கூட, 1 லட்சம் திருமணங்களில் 2 லட்சம் கிலோ அரிசி வீணாகிறது. அந்த அரிசியும் மணமக்கள் மீது விழுவது இல்லை. அது இன்னொருவர் தலையில் தான் விழுகிறது. ஆகவே இனி உங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அரிசியை வீணாக்காமல் உதிரிப்பூக்களை பயன்படுத்துங்கள்’’
- திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேச்சு
#cpmShanmugam #Dontwasterice #thanthitv
Nobody can do better job than this. Kudos to @VanniTamizhVCK anna. Scheduled caste wellfare ministry became tokenism in dravidaian rule. But in current government vanni annan doing fantastic job💙
கட்சி கட்டுப்பாட்டுக்கும் கட்டுப்பட மாட்டேன் தலைவர் சொல்லுக்கும் கட்டுப் பட மாட்டேன்னு தான்தோன்றி தனமா பைத்தியக்காரன் போல பேசிட்டு இருக்கும் @sangathamizhanM இந்தாள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா @thirumaofficial தலைவர் அவர்களே
கட்சியில் இருப்பவர்களை குறி வைத்து அவதூறு பரப்பி
என்றும்
உங்கள் நினைவோடு
உங்கள் உழைப்பால் விளைந்த
தமிழ்நாட்டின் பெருவளர்ச்சிக்கும்
தந்திட்ட தமிழின உணர்ச்சிக்கும்,
சமத்துவ, சமூகநீதி சிந்தனைக்கும்
நன்றியோடு வணங்குகிறோம்!