@ChanakyaaTv உரத்த குரலில் ஊருக்கு செய்தியை உரைத்து உதிரும் வரை🔥
உயிர் விட மறுத்த உறுதியை கொண்டாடும் மாரத்தான் மரபை🔥
திருத்தி எழுதி திரும்பி பார்த்து கையசைத்து😜 மந்தகாச புன்னகையோடு மந்த கதியில் நகருவதை படம் பிடித்து காட்டி நாசுக்காக கலாய்க்கும் சாமார்த்தியத்திற்கு பெயர் தான் சாணக்யாவா😜
சற்றுமுன் கிடைத்த தகவல் ..சூப்பர் ஸ்டார் அவர்களை அடுத்த முதல்வராக திமுக மற்றும் அதிமுக சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் ..இது உண்மை செய்தி இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநர் சந்திக்கிறார் @tweeterPill @RrRajagopalan
திருப்பரங்குன்றம் தீர்ப்பு: இந்துக்களின் வெற்றி!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் கார்த்திகை தீப திருவிழாவில் மலை உச்சியில் தீபம் ஏற்றும் உரிமையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை மனமார வரவேற்கிறேன். நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை உறுதிப்படுத்தி, கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்து பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் மகத்தான தீர்ப்பு, கடந்த 2025 டிசம்பரில் நடந்த போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத சர்ச்சைகளுக்கு நீதி வழங்கியுள்ளது.
முந்தைய தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த இந்தத் தீர்ப்பு, தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது. அரசு சார்பில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற வாதம் "நகைப்புக்குரியது" என்று நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. அத்தகைய பிரச்சினை அரசே திட்டமிட்டால் மட்டுமே உருவாகும் என்று கூறியது, அரசின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இது கடந்த உத்தரவுகளை அமல்படுத்தாத அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது.
இந்தத் தீர்ப்பு, திமுக அரசின் இந்து விரோத போக்கையும், அமைதியான அரசியலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்துக்களின் பாரம்பரிய விழாக்களை தடுப்பதன் மூலம், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. இந்து உணர்வுகளை அவமதிக்கும் இத்தகைய செயல்கள், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க பாஜக தொடர்ந்து போராடும்!
#Tirupparankundram