Toughest part of election is this 10 day gap between polling date and counting. Too many analysis and too many thought processes.
Hope we win Colachel for Thalapathy!
Thanks to all who traveled all over the globe to vote! We will not disappoint you!
#tvkcolachel#TVKVijay
கடந்த 13 தேர்தலில் வெற்றிபெற்று, கிட்டத்தட்ட 65 வருடங்களாக குளச்சல் தொகுதியை ஆண்ட #DMK#ADMK#Congress#BJP கட்சிகளின் பித்தலாட்டம் தொடரவேண்டுமா?
1. குளச்சல் ஆழ்கடல் துறைமுகம் திட்டம் தாமதம் / நிறுத்தம்:
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு. சாகர்மாலா திட்டத்தின் கீழ் பெரிய துறைமுகமாக (ரூ.21,000 கோடி அளவில்) உருவாக்க திட்டமிடப்பட்டது. வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மீன்பிடி துறை விரிவாக்கம் ஆகியவற்றுக்கு இது முக்கியம்.
பல ஆண்டுகளாக திட்டம் தாமதமாகி/நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகுகள் எண்ணிக்கை அதிகரித்தும் துறைமுக விரிவாக்கப் பணிகள் நடக்கவில்லை. அரசியல் காரணங்கள் (வாக்கு வங்கி அரசியல், மத அரசியல்) காரணமாக தடைபட்டதாக உள்ளூர் புகார்கள் உள்ளன. சுற்று சூழலை பாதிக்காத வண்ணம், மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் இந்த திட்டத்தை நடத்த என்ன முயற்சி எடுக்கப்பட்டது?
இவங்க MLA க்களும், MP க்களும் என்னத்த பண்ணிட்டாங்க ? ஒரு மயிலும் இல்ல !!
1990 ல் இருந்து ஆய்வு பணிசெய்து, 2017 ல் இருந்து இப்போ கட்டுறோம், அப்போ கட்டுறோம் என கூறி கிட்டத்தட்ட 65 வருசமா டேக்கா கொடுத்துக்கிட்டு இருக்காங்க.
இவர்கள் அரசியல் செய்துகொண்டிருந்த நேரத்தில் அருகாமையில் கேரளா விழிஞ்ஞம் துறைமுகம் கட்டி முடிந்துவிட்டது. இது எவ்வளவு பெரிய நஷ்டம் நமக்கு?
2 . ஹெலிகாப்டர் தளம்: கடலில் காணாமல் போகும் மீனவர்களை தேட, குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்து தருவோம் என வாக்குறுதி அளித்து , இன்று வரை அமைத்து தராமல் மீனவர்களின் உயிரோடு விளையாடுவது தான் அரசியலா? துரதிர்ஷ்ட வசமாக இறந்து விட்டால் , உடல் கிடைக்காமல் 7 வருடம் காத்திருந்து தான் அரசு உதவி பெரும் அவலம். வசந்த் & கோ விளம்பரம் போடுற ஒரு நாள் செலவு ஆகுமா , இதை செய்ய ??
3 . கடலரிப்பு: கன்னியாகுமரி மேற்குக் கடற்கரை கிராமங்களில் (குளச்சல் உட்பட) 20 ஆண்டுகளாக கடலரிப்பு தீவிரமாக உள்ளது. வீடுகள், நிலங்கள் இழந்து மக்களும், மீனவர்களும் படும் கஷ்டம் என்று குறையும்?
வெள்ள சட்ட , வெள்ள வேட்டி பேட்டுட்டு , கையாடிட்டு கை சின்னத்துக்கு ஓட்டு கேக்கறவங்க கண்ணும் , காதும் இதை கண்டும் காணாமலும், கேட்டும் கேட்க்காமலும் இருக்கிறார்கள்.
4 . நீர் ஆதாரங்கள் பராமரிப்பின்மை:
வெள்ளியாகுளம் குளம் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது. இப்போது அதன் நிலை பராமரிப்பு இல்லாமல் மோசமாகி உள்ளது. இதை செய்வது எவ்வளவு பெரிய அடிப்படை தேவை, வேலை, சேவை?? புகார் வரும்வரை காத்திருக்க வேண்டுமா, புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்வதில்லை.
MLA உங்களுக்கு இதன் அருமை புரிந்திருக்க வாய்ப்பில்லை.
2004 சுனாமிக்குப் பின் நீர் மாசுபாடு பிரச்சனை தொடர்கிறது. கனமழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது வழக்கமாகி உள்ளது. இதை பற்றி சட்ட சபையில் பேசி இருக்கோமா #DMK ஆதரவு MLA சார் ? துதி பாடவே நேரம் போதவில்லை !!
5 . அரிசி கடத்தல்: ஏமாத்து வேலை பாத்து, டெண்டர் எடுத்து கிறிஸ்டி டிரான்ஸ்போர்ட், ரேஷன் அரிசி கொண்டுவந்தது கொஞ்சமா குடுக்கற ரேஷன் அரிசியும், கேரளாவுக்கு வாக்கிங் போகுது.. வாய் திறக்க மாட்டோமே !!
6 . குளச்சல் நகராட்சி பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. குழந்தைகள் விளையாட உதவுதோ இல்லையோ , சரக்கு அடிக்க ஏற்ற மாதிரி குப்பையும் , புதருமா இருக்கு. இது சப்ப மேட்டர் இல்ல .. கண்டுக்காம போய்டணும் அப்படித்தானே ??
மாத்தி மாத்தி ஓட்டு போட்டு நாசமா போனது போதும் மக்களே !!
நல்ல மனுஷங்கள, உணர்வு பூர்வமா மக்களை நேசிக்கற #TVK #Vijay க்கு #விசில் சின்னத்தில் ஓட்டு போடுவோம்.
Dr.பிரேம் லாரென்ஸ் அவர்களை தேர்ந்தெடுப்போம் 🙏
Dr. Prem Alex Lawrence, TVK candidate for Colachel constituency, actively participated in the public meeting. He met people directly and listened to their needs and grievances with great enthusiasm. The event received massive public support and created an energetic political atmosphere.
@drprem_lawrence
#TVK
What can I do for all the love that we get because of Thalapathy ! Mind boggling support in Mondaikadu and Pudhoor Area! Colachel is Tvk Fort..!
#TVKVijay@TVKPartyHQ@BussyAnand
முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் பகுதியில் வாழும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 136 பேர் ஈரானில் சிக்கி, தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் கடும் அவதியில் உள்ளனர்.
அவர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தும் இதுவரை எந்தத் தீர்மானமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இந்த நிலையை மனதில் கொண்டு, மத்திய மாவட்ட இணைச் செயலாளர் டாக்டர் பிரேம் லாரன்ஸ் அவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து, அவர்களின் துயரத்தை கேட்டறிந்து, ஆறுதல் கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.