குழந்தைகளை பெற்றோர்கள் காதில் போய் விசிலடித்து வாக்கு போடச் சொன்ன விஜய் இன்று உங்களுக்கு அரசியல் தேவையில்லை என்கிறார் !
வெல்லும் வரை ஒரு பேச்சு
வென்ற பிறகு ஒரு பேச்சு !
What Bro ! @TVKVijayHQ
தூயசக்தியின் தீபாவளி பரிசு!
விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிற சூழலில் தொகுதி மக்களுக்கு விசிலோடு சேர்த்து வெற்றிக் கிண்ணம் வழங்கி வரும் விராலிமலையின் செல்லப்பிள்ளை விஜயபாஸ்கர் !
@ECISVEEP@dir_ed@IncomeTaxIndia@Vijayabaskarofl
போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து, வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சர் அவர்களே?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது.
திரைப்படம் என்பது அறிவியலின் அழகான குழந்தை; ஆகச்சிறந்த கலை வடிவம்; அது மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஊடகம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படக் கலைஞர்களின் உழைப்பையும், திரைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா?
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த திரைப்படக் காட்சி நேரங்களில் என்ன குறை இருந்தது? வார இறுதி நாட்களிலும், விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் காட்சிகளைத் திரையிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதானே? அதில் என்ன சிக்கல்? அவ்வாறு திரையிடப்பட்டபோதுதானே பல திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் குவித்தன? இப்போது புதிதாக அதிகாலை 6 மணிக்கே காட்சிகளைத் தொடங்க வேண்டிய தேவை என்ன வந்துவிட்டது? ஒரு வாரத்திற்கு இரண்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவதற்குள் அடுத்தடுத்த திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் அதிகாலை முதலே காட்சிகளைத் தொடங்கினால், மக்கள் எப்போது படிப்பார்கள்? எப்போது உழைப்பார்கள்? எப்போது தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்? எப்போது தங்களது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வார்கள்? நாள் முழுவதும் திரையரங்குகளிலேயே அமர்ந்திருந்தால் ஒரு சமூகம் எப்படி முன்னேறும்?
அதிகாலை எழுந்து படியுங்கள்! உடற்பயிற்சி செய்யுங்கள்! நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள்! அறிவை விரிவாக்குங்கள்! உடலையும் உள்ளத்தையும் உறுதிப்படுத்துங்கள்! உழைத்து உயருங்கள்! என்று இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சிமுறையா? 'காலை எழுந்தவுடன் படிப்பு' என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு தவெக அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தவெக அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது தவெக அரசு? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத தவெக அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?
மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? கல்வித்தரம் உயர்ந்துவிடுமா? அறிவாற்றல் வளர்ந்துவிடுமா? நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா? ஏற்கனவே, தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திரைப்படங்களின் வசூலைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டின் மக்கள் பெற்றுள்ள கல்வி, அறிவு, உடல்நலம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவற்றைக் கொண்டுதான் அளவிட முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆகவே, புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நூலகங்களை மேம்படுத்துவதிலும், விளையாட்டுத் திடல்களை உருவாக்குவதிலும், புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் காட்டி மக்கள் நலனையும், சமூக முன்னேற்றத்தையும் முதன்மைப்படுத்தி ஆட்சி நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விமர்சனம் செய்துவிட்டு,
எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கம்யூனிஸ்ட், IMUL போன்ற கட்சிகளின் அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டு நாக்கத்தொங்கப்போட்டு போனது விஜய் தான்.. @TVKVijayHQ
நாங்க திமுக, அதிமுக அலுவலகத்திற்கு போய் ஆதரவு கொடுங்கன்னு எங்கேயும் கேட்கவில்லை மரிய வில்சன்..
@MarieWilson_TVK
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குதற்கு @VigneshTvkCbe
விளக்கம் கொடுத்துள்ளார்
ஆனால் ஒரு விஷயத்தை மிக லாவகமாக மறைத்துள்ளார்
ஒரு குவார்ட்டர் பாட்டிலின் மொத்த அடக்க விலை ரூ.140 என்றால்,
கூடுதலாக ரூ.10 ம் வாங்கப்போகிறோம்
அந்த தொகை அரசாங்க கணக்கிற்கே வரப்போகிறது என்பதே விக்னேஷ் கொடுத்துள்ள விளக்கம்
1)
வாடிக்கையாளர்கள் வாங்குவது மதுவை மாத்திரமல்ல..பாட்டிலுக்கும் சேர்த்த தொகையே ரூ.140
அப்படியிருக்க எதற்காக அரசு கூடுதலாக
ரூ.10 வாங்க வேண்டும்
2)
06-10-25 அன்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் மிகத்தெளிவாக
பழைய பாட்டில்கள் குறித்து புலனாய்வில் கண்டறிந்த விபரங்களை கூறியுள்ளது
அதாவது,
டாஸ்மாக் கடைகளில் இருந்து பழைய பாட்டில்களை வாங்கும் நிறுவனங்கள்
என்ன விலைக்கு வாங்குகிறதென்றால்
பாட்டில் விலை+சுத்தப்படுத்த ஆகும் செலவு+லாபம் என அனைத்தும் சேர்த்து
மதுபான ஆலைகள் பழைய பாட்டில்களை
கீழ்கண்ட விலைக்கே வாங்குகிறதென
ED உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது
180 ML -ரூ.2.25 பைசா
375 ML -ரூ.3.75 பைசா
750 ML - ரூ.5.65 பைசா
அதாவது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய
மதுபான பாட்டில்களை இவ்வளவு
குறைவான தொகைக்கே ஆலைகள் வாங்கும் பொழுது
@TasmacOfficial நிறுவனம் எதற்காக
ரூ.10 -ஐ கூடுதலாக வசூலிக்க வேண்டும் ?
குறைந்தபட்சம் 2.25 பைசா முதல் அதிகபட்சம் ரூ.5.65 வரை மட்டுமே மதிப்பு கொண்ட பலதரப்பட்ட பாட்டில்களுக்கு
ஒரே மாதிரியான விலையாக ரூ.10 நிர்ணயிக்க என்ன காரணம் ?
உண்மை என்னவென்றால்,
பாட்டிலுக்கும் சேர்த்தே பணம் கொடுத்து மதுபானத்தை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களிடம் இருந்து
கடை ஊழியர்கள் ரூ.10 கூடுதலாக வாங்குவதே தவறு…
அப்படியிருக்க MRP-ஐ விட
QR Scan ஸ்டிக்கரோடு
இனி அரசாங்கமே ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் என்று நியாயம் கற்பிப்பது எப்படி சரியான வாதமாக இருக்க முடியும் ?
கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக!
@CMOTamilnadu@TVKVijayHQ
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவர்களிடம் முறையாகக் கருத்துகளைக் கேட்டறியாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் அழைத்துக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் முயன்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் வாழ்வுரிமை தொடர்பான விவகாரத்தில்கூட வெளிப்படைத்தன்மையின்றிச் செயல்படும் தவெக அரசின் அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியது.
பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே அப்பகுதி மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதா என்று கேள்வி எழுப்பிக் கருப்புக்கொடி ஏந்திப் போராடியிருக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும், அங்கேயே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியே தீருவோம் எனத் தவெக அரசு பிடிவாதம் காட்டுவது மீனவ மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள 12 மீனவ கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அந்தக் கிராமங்களுக்கும், தொடர்ந்து போராடிவரும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவதுதானே முறையான அணுகுமுறை?
அதைவிடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, “கிராமத்திற்கு ஒருவர் வந்தால் போதும்” என்று கூறியதாக மீனவர் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு கடுமையானது! ஒரு கிராமத்தின் சார்பாக யார் பேச வேண்டும் என்பதை அந்தக் கிராம மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர, அதிகாரிகள் எப்படி முடிவுசெய்யலாம்? போராடும் சங்கப் பிரதிநிதிகளை அழைக்காமல் நடத்தப்படும் கூட்டத்தில் யாருடைய கருத்தைக் கேட்கப் போகிறீர்கள்?
அரசுக்குச் சாதகமானவர்களை மட்டும் அழைத்துக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழும் அளவிற்கு நடந்துகொண்டது ஏன்? மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான கூட்டமா இது? அல்லது மக்கள் ஏற்றுக்கொண்டதாகக் கணக்குக் காட்டுவதற்கான ஏற்பாடா?
12 கிராமங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுக்க வேண்டுமென்று மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கடிதம் கொடுத்த பின்னரே கூட்டம் நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி தெரிவிக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்திற்கும் அழைப்புக் கடிதம் வரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கான முறையான அழைப்பைக்கூட மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா? இதுதான் மக்களை மதிக்கும் ஆட்சியின் இலட்சணமா?
“கருத்துக்கேட்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; எங்கள் கருத்துகளை வலுவாக எடுத்துவைப்போம்; அந்த இடம் மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்பதை ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்று மீனவப் பிரதிநிதிகள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். இவ்வளவு பொறுப்புடன் பேசும் மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
கடலை நம்பி வாழும் மக்களுக்குக் குடியிருப்பும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் வாழ்விடத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குவது கொடுமையானது. புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், போக்குவரத்து நெரிசல், கடலுக்குச் சென்று திரும்புவதிலான இடையூறுகள் குறித்த அச்சங்களுக்கு என்ன பதில்? தங்கள் சொந்த மண்ணிலேயே உரிமைகளை இழந்துவிடுவோமோ என்று மக்கள் அஞ்சும் நிலையை ஏன் உருவாக்குகிறீர்கள்?
தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வேறு இடமே இல்லையா? மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்று மக்கள் ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில், அந்த இடத்தில்தான் கட்டுவோம் என்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதம்? வாக்குக் கேட்கும்போது தேவைப்பட்ட மீனவ மக்களின் குரல், ஆட்சிக்கு வந்த பிறகு கேட்கவில்லையா?
எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தையும் அதற்கான தொடர் நடவடிக்கைகளையும் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். 12 மீனவ கிராமங்களுக்கும், அக்கிராம மக்கள் தேர்வுசெய்யும் பிரதிநிதிகளுக்கும், போராடிவரும் மீனவர் சங்கங்களுக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு விடுத்து, வெளிப்படையாகக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். மக்கள் முன்வைக்கும் கருத்துகளையும் ஆவணங்களையும் முழுமையாகப் பதிவுசெய்து, அவற்றிற்கு அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடம் என்ற அவர்களின் கோரிக்கையையும் ஆதாரங்களையும் உரிய முறையில் பரிசீலித்து, அம்மக்களின் குடியிருப்பு உரிமையையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அண்ணன் சீமான் ஒரு இடத்தில் பேசியிருப்பார்.
வார நாட்களில் 2 காட்சிகளுக்கு மட்டும்தான் அனுமதி என்று.
காரணம், உனக்கு பொழுதுபோக்கிற்கே நேரம் இருக்காது, வேலை கொடுத்திடுவேன் என்று
ஆனால் இங்கே நடப்பது..
மக்களை பொழுதுபோக்கிலே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்
பேசத் துணியாத கதையைப் பேரழகுத் திரைக்காவியமாக்கிய ‘டோரதி’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில், இசை இறைவன் இளையராஜா இசையில் வெளிவந்திருக்கும் டோரதி திரைப்படத்தை கண்டேன். 1990களில் சாதிய வன்முறை நிலவும் கிராமப்புற தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டு சமூகம் பேசத் தயங்குகிற, பலரும் சொல்லத் துணியாத இயற்கையின் பாலியல் மாற்றத்தை பற்றிய கதையைக் கையில் எடுத்து, அதனை உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த அழகிய திரைப்படைப்பாக உருவாக்கியிருக்கும் அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
மனிதர்களை அவர்களது இயல்போடும் உணர்வுகளோடும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை வளர்ப்பதே கலையின் உயர்ந்த பணி. புறக்கணிக்கப்படும் மனிதர்களின் வலியை உணரவும், அவர்களது அன்பையும் வாழ்வுரிமையையும் மதிக்கவும் வைக்கிற படைப்புகள் காலத்தின் தேவையாகின்றன. புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக கலை மாறும்போது அது புனிதமாகிறது. அந்த வகையில், பார்வையாளனின் மனச்சாட்சியோடு உரையாடும் படைப்பாக ‘டோரதி’யைப் படைத்திருக்கும் தம்பி கார்த்திக் சுப்புராஜின் படைப்புத் துணிவுக்கும் மனிதநேயத்திற்கும் எனது அன்பும் பாராட்டுகளும்!
ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதற்குரிய திரைமொழியை உருவாக்குவது வரை, படைப்பாளனின் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும். சொல்ல வந்த கருத்தின் ஆழமும், அதைச் சொல்லும் விதத்தின் அழகும் ஒன்றிணையும்போதுதான் சிறந்த திரைப்படம் பிறக்கிறது. அத்தகைய அக்கறையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கும் தம்பியின் கலைப்பயணம் மேலும் பல உயரங்களைத் தொடட்டும்!
இப்படம் இசை இறைவன், எங்கள் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா இளையராஜா அவர்களின் அளப்பரிய இசைப்பேராற்றலால், திரையில் சொல்லப்படும் உணர்வுகளுக்கு உயிரூட்டி, ஒரு சிறந்த திரைப்படத்தைக் காவிய அனுபவமாக உயர்த்துகிறது! காலங்கள் மாறலாம்; தலைமுறைகள் மாறலாம்; இசையை ரசிக்கும் முறைகளும் மாறலாம். ஆனால், மனித மனத்தின் ஆழத்தை தொட்டு உணர்வினை உசுப்பும் எங்கள் இசை இறைவனின் இசை வலிமை என்றும் மாறுவதில்லை. இன்றைய தலைமுறையும் ரசித்து மகிழும் பாடல்களை வழங்கியிருக்கும் இசை இறைவனின் படைப்பாற்றல் நம்மை மீண்டும் வியக்க வைக்கிறது. தலைமுறைகளைக் கடந்து தமிழர்களின் உணர்வுகளோடு பயணிக்கும் அவரது இசைக்கு தமிழினம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.
தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை உள்வாங்கி, அதற்கு உயிர்கொடுத்திருக்கும் அன்புத்தம்பி சனத் நடித்திருக்கிற விதம் பெரிதும் பாராட்டத்தக்கது. ஒரு மனிதரின் அக உலகத்தைப் பார்வையாளனிடம் கொண்டுசேர்ப்பதற்கு நுட்பமான நடிப்பும் ஆழமான புரிதலும் வேண்டும். ஒவ்வொரு காட்சியாக நகரும் திரைக்கதையில் பாலின மாற்றத்தை படிப்படியாக தனது ஆகச்சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் தம்பிக்கு எனது பாராட்டுகள். இயல்பான நடிப்பின் வழியே தனது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையையும் உணர்வுச் செறிவையும் அளித்திருக்கிறார் அன்புத்தம்பி ரிஷிகாந்த். கதையோடு ஒன்றிப்போகும் அவரது நடிப்பும், உணர்வுகளை வெளிப்படுத்தும் நேர்த்தியும் அவரது திறமைக்கு சான்று. தனது அனுபவமும் நடிப்பாற்றலும் அசாத்திய உடல் மொழியும் கொண்டு கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து விசில் வீரைய்யாவாக வாழ்ந்திருக்கிறார் அன்புத்தம்பி முத்துகுமார். ஒரு பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்குரிய அழுத்தத்தைத் திரையில் கொண்டுவரும் அவரது திறன் பாராட்டுக்குரியது. டோரதியாக வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கு முதன்மையளித்துத் தனது நடிப்பால் படைப்பிற்கு மேலும் அழகுசேர்த்திருக்கிறார். ஒளியையும் நிழலையும் உணர்வுகளின் மொழியாக்கி, கதையின் சூழலுக்குள் நம்மையும் அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் திரு கதாபாத்திரங்களின் மனவோட்டத்தையும், சொல்லப்படாத வலிகளையும் காட்சிகளின் வழியே உணர்த்தி, படைப்பிற்கு மேலும் உயிரூட்டியிருக்கிறார். அத்தோடு இப்படைப்பைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர்கள், படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், வன்முறை , ஆவணக் கொலைகள் போன்ற சகிக்க முடியாத கொடூரங்களும் அநீதிகளும் பெருகி , ஆழமாகப் பதிந்துள்ள ஓர் உலகில், சிறுவயதிலிருந்தே பிரிக்கமுடியாத நண்பர்களாக வளரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஊடாக அனைத்தையும் காட்டி பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை என மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், இதுவரை தமிழ்த்திரையில் விரிவாக பேசப்படாத மூன்றாம் பாலினத்தவரின் உலகை பொதுச் சமூகம் நேர்மையாக அறிந்து கொள்ளவும், எல்லாவற்றையும் தாண்டி நம்மோடு சரிசமமாக வாழும் சக மனிதரை உளப்பூர்வமாக நேசிக்கவும், துயர் சூழ்ந்த அவர்களது வாழ்வை ஏற்று மதிக்கவும் துணைநிற்கும் இதுபோன்ற மதிப்பு மிகுந்த படைப்புகள் தமிழ்த்திரையில் மேலும் பெருகட்டும்!
ஏற்கனவே திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "டோரதி" இப்போது தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அனைவரது பெரும் வரவேற்பிற்கு உள்ளாகி வருவது எனக்கு நெகிழ்வை தருகிறது.
'டோரதி’ மக்களின் பேரன்பைப் பெறட்டும்!
அற்புதமான கலைப் படைப்புகள் மூலம் தன்னை தமிழ்த் திரையின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒருவராக நிலைநிறுத்தி வருகிற தம்பி கார்த்திக் சுப்புராஜின் முயற்சிகள் என்றும் வெற்றியால் மிளிரட்டும் !
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Dorothy @karthiksubbaraj@ilaiyaraaja@iam_rishikanth@Sananth__@KeerthyOfficial
வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,
வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு.
இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் அழுகி வீனாகி வருவதாக செய்திகள் தெரிய வருகிறது.
250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த 3 நாட்களாக 10 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி, #NAFED மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று #NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை!
குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்த திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான்!
இது என்ன சினிமாவா, Take சரியில்லை என்றால் Cut சொல்லிவிட்டு அடுத்த Take-ல் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி ! மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது!
அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் Seriousness புரியாமல், Lethargic-ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.
விலைவாசி கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தான் வாழ நினைப்பவன் எப்படியும் சம்பாதித்துவிடலாம். தன் மக்களுக்காகப் போராட நினைப்பவனுக்குத்தான் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நிதி தேவைப்படுகிறது. அதுதான் திரள் நிதி!
#திரள்நிதி
நாம் தமிழர் கட்சியின் அரசியல் எதிரிகளும், எம்மை வெறுப்பவர்களும் தமிழ் தேசியத் தத்துவப் பேராசான் நமது ஐயா பெ மணியரசன் அவர்களின் ஒரு பதிவை தீவிரமாகப் பரப்பிக்கொண்டு, “இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குச் சொல்ல வேண்டிய பதில் ஒன்றுதான்.
ஐயா பெ மணியரசன் அவர்கள், தேர்தல் அரசியலில் வாக்களிப்பதையே புறக்கணித்து வந்த ஒரு அரசியல் அமைப்பின் கொள்கைப் பின்னணியைக் கொண்டவர். அத்தகையவர், ஒரு சிறப்புத் தீர்மானத்தை இயற்றி, நாம் தமிழர் கட்சிக்காக வாக்குகளைச் சேகரித்து, நமது கட்சிக்கு வாக்களித்தவர்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியிலும், நமது அரசியல் முன்னேற்றத்திலும், அண்ணன் சீமான் அவர்களின் நலனிலும் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே ஐயா அவர்கள் வாழ்ந்து வருகிறார்.
எங்களது துன்பகரமான காலகட்டங்களில் எங்களோடு தோள்நின்று வழிகாட்டி துணைநின்றவர் ஐயா பெ மணியரசன் அவர்கள்.
எனவே, அவர் எங்களை விமர்சிப்பது என்பது ஒரு தந்தை தனது மகனை விமர்சிப்பதைப் போன்றது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னால் உள்ள அக்கறையையும், அறிவார்ந்த நோக்கத்தையும் நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம்.
அவர் முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்வோம். அவற்றை எங்களுக்குள் ஆய்வு செய்து, எங்களது அரசியல் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம்.
ஆனால், அவரை எதிர்த்து விமர்சிப்பதோ, இழிவுபடுத்துவதோ நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எவரும் செய்ய வேண்டிய செயலல்ல. அப்படி நாம் தமிழர் கட்சியின் முகமூடி மாட்டிக் கொண்டு புரிதலற்ற எதிர்வினைகள் செய்வோர் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் அல்லர்.
எங்கள் ஐயா பெ.ம எங்களுக்கு வெறும் அரசியல் விமர்சகர் அல்ல; எங்களது பெருந்தகப்பன். எங்களது அறிவுலக வழிகாட்டி.
ஐயா மணிரசன் அவர்களை நாங்கள் உளப்பூர்வமாக நேசிக்கிறோம்.அவரது கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறோம். அவரது விமர்சனங்களை மதிக்கிறோம்.
எப்போதும் எங்களது பெருந்தகப்பனாகவும், தமிழ் தேசியத் தத்துவப் பேராசானாகவும், எங்களது உள்ளத்திலும், அரசியல் களத்திலும் ஐயா மணியரசன் அவர்கள் உயர்ந்து வீற்றிருப்பார்.
அவரது ஒரு பதிவைக் காரணம் காட்டி எங்களை இழிவுபடுத்தலாம் என்றும், எங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடலாம் என்றும் எண்ணுகின்ற அரசியல் எதிரிகளுக்கும், எங்களை வெறுப்பவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்:
ஐயா பெ மணியரசன் அவர்களுக்கும் எங்களுக்குமான உறவு தமிழ் தேசிய தத்துவார்த்த கோட்பாடு வழியாக எழுந்த தந்தை மகன் உறவு. அதை தற்குறிகளாலும், தற்குறிகளுக்கு விலை போன ஊடக வியாபாரிகளாலும் புரிந்துக் கொள்ள முடியாது.
எங்கள் மீது கொண்டிருக்கின்ற அக்கறையை எங்களைப் பிரித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்!
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எங்களது உறவும், நன்றியுணர்வும், கொள்கைப் பற்றும் உங்கள் அவதூறுகளால் சிதைக்கப்பட முடியாதவை!
நாம் தமிழர்!
❤️
மணி செந்தில்.
@Tamizhdesiyam
@Arunan22 நீர் எந்த லட்சனத்தில் கம்யூனிசத்தை படித்திருப்பீர் என்று இந்த பதிவின்னூடே தெரிகிறது. முழு காணொளியையும் காணாமல், ஊடகங்கள் வெட்டி ஒட்டி எடுத்து பரப்பும் அவதூறை கையில் எடுத்துக் கொண்டு ஏன் திரிகிறார்கள்?
@Arunan22 அப்படியே துரைமுருகன் பேத்தி கல்யாணத்தில் என்ன நடக்குதுன்னு பாருங்க போராளி சார்? . உங்க பயம் புரியுது, திமுக கூட்டணிக்கு திரும்ப வந்தா, கிடைக்கிற ஒன்னு இரண்டு சீட்டும் கிடைக்காது.
லஞ்சத்தை ஒழித்து விட்டதாக
CM விஜய் பேசி வரும் சூழலில்
2 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ள செய்திகள் வசூல் வேட்டையில்
தவெக-வினர் ஜெக ஜோராக இறங்கிவிட்டதை வெளிப்படுத்துகிறது
Times of india கனிமங்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க
லஞ்சம் கேட்டு தொல்லை செய்வதை கண்டித்து லாரி ஓட்டுநர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது
DT Next
ஊரக வளர்ச்சிப்பணிகளில் ஒதுக்கப்படும் ஒப்பந்தத்திற்காக சிவகங்கை தவெக MLA 20% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளது
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி தொகுதி, மேலப்பனையூர் ஊராட்சி, மேலமருதூரைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர், கட்சியின் மாவட்டத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ம.கோதண்டராமன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த ஐயா ம.கோதண்டராமன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் ஐயாவின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ம.கோதண்டராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!