சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு தமிழின வரலாற்றின் பெரும்பகுதியை நிர்ணயித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அண்ணா சாலையில் உள்ள திருவுருவச் சில��, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திருவுருவச் சிலை ஆகிய இடங்களில் மரியாதை செலுத்தினோம்.
#KalaignarForever
#Kalaignar103
சென���னை தெற்கு மாவட்டம், சைதை கிழக்கு பகுதி, 170ஆவது வட்ட @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் வி.சந்துரு - கு.பிரித்திஷா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினோம்.
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து மணமக்களின் இல்வாழ்க்கை சிறக்கட்டும்!
5 முறை தமிழகத்தின் முதல்வர்,
சட்ட மன்றத்தில் 50 வருடங்கள் கடந்த ஒரே உறுப்பினர்,பல இந்திய ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் நிர்ணயிக்கும் மகாசக்தியாய் வாழ்ந்து எங்கள் மனதில் வாழும் ��லக தலைவர்களில் ஓய்வறியா, ஒப்பற்ற எங்கள் தலைவரே வாழ்க உங்கள் புகழ்... வணங்குகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண��டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்!
#Youth4DMK2026 @dmk_youthwing
முக்கடல் சூழும் குமரிமுனையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் #StatueOfWisdom நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டமானது மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் 2024 டிசம்பர் 30, 31 ஆகிய நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
அதில் பெற்ற உத்வேகத்தின் வெளிப்பாடாக, 2025ஆம் ஆண்டில், தான் கலந்துகொண்டு உ���ையாற்றும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் வழியாகவும் குறள்நெறிகளை பரப்ப வேண்டும் என்று தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியெடுத்து, சிறப்பான முறையில் பின்பற்றி இருக்கிறார்.
365 நாளில் 344 உரைகளை நிகழ்த்தி, உரையின் தொடக்கத்தில் ஒவ்வொரு குறளாக மொத்தம் 344 குறளையும் கலைஞர் விளக்கத்தையும் சொல்லியுள்ளார் என்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகிறது. அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.
@Anbil_Mahesh
#பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவரே பெரியார் இன்று கழக இளைஞர் அணி செ���லாளர் பெரியாராக இம்மண்ணில் அவர் கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார் @Udhaystalin 🖤❤️🙏🏻
அறம்-பொருள்-இன்பம் எனத் தமிழர் வாழ்வியல் நெறியுரைத்த வள்ளுவத்திற்கு, குறளோவியம் கண்ட தலைவர் கலைஞர் எழுப்பிய ‘வள்ளுவர் கோட்ட’த்தில், கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் வழிநின்று செயல்படும் தமிழர்களின் தனிப்பெரும் தலைமை இயக்கமாம் @arivalayam-த்தின் #திமுக75_அறிவுத்திருவிழா!
நம் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டலில்,
தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்கள் குறித்து, கழக இளைஞரணி சார்பில் @muthamilarignar பதிப்பகம் வெளியிடும் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு, `இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை @dmk_youthwing `அறிவுத்திருவிழா’வாகக் கொண்டாடவிருக்கிறது.
🗓️நவம்பர் 8 அன்று கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, இருநாள் கருத்தரங்கத்தையும் முற்போக்குப் புத்தகக் காட்சியையும் தொடங்கிவைக்கிறார்.
🗓️நவம்பர் 8 மற்றும் 9-ல் நடைபெறும் இருநாள் கருத்தரங்கத்தில், கழக முன்னோடிகளும் தமிழின் முக்கியச் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கருத்துரை வழ��்குகின்றனர்.
🗓️நவம்பர் 8 முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சும் நடைபெறவுள்ளன.
🖤❤💙 நவீன தமிழ்நாட்டைச் செதுக்கி, செழுமைப்படுத்திய முற்போக்கு இயக்கங்களின் அரசியலை அறியவும்; அரசியல் உணர்வு பெறவும் அறிவுத்திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்! #DMK75
சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடி மதிப்பில் விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கும் பணிகளை அண்மையில் தொடங்கி வைத்திருந்தோம்.
அந்தப்பணிகளை இன்று காலை ஆய்வு செய்து, அதன் தற்போதைய நிலை மற்றும் பணியில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட���டறிந்தோம். #NEMonsoon
சென்னை புறநகரில் முக்கியமான இடமாகத் திகழும் மேடவாக்கம் ஜங்ஷன் பகுதிய��ல் மழை தொடர்பாக சற்று முன் ஆய்வு மேற்கொண்டோம். தாழ்வான பகுதிகளில் இருந்து மழை நீரை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினோம். #NEMonsoon
கனமழையை அடுத்து சென்னை மேடவாக்கம் ஏரியின் நிலை குறித்து இன்று ஆய்வு செய்தோம். அதிக மழைப்பொழிவால், ஏரியை ஒட்டியுள்ள கரையோர பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவற்றை வெளியேற்றிட ஆல��சனைகளை வழங்கினோம். அங்கிருந்த பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்களுக்குத் துணை நிற்போம் என உறுதியளித்தோம். #NEMonsoon