விஜய்யால் தமிழ் இனி மெல்லச் சாகும்
இவர்கள் பட்ஜெட் என்ற பெயரில் திமுக கொண்டு வந்த பெயர்களை மாற்றுகிறோம் என்கின்ற அடிப்படையில் எங்கள் தலைவர் தேடி தேடி தமிழில் வைத்த பெயர்களை எல்லாம் ஆங்கிலம் கலந்த பெயர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ் என்ற அடிப்படையில் கணிணியில் தமிழை கொண்டு வந்தார் கலைஞர்.
தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது போல் தமிழில் இருந்த பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
Super clean
Super campus என்பதெல்லாம் எந்த விதத்தில் தமிழாகும்.
தமிழை எந்த விதத்தில் அழிக்க நினைத்தாலும் அதை எதிர்த்து போரிடும் கடமை தமிழருக்கு உண்டு .
தமிழ்நாட்டில்
தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியில்
தமிழ்நாடு மக்களுக்காக கொண்டு வரும் கிட்டங்கி மின் பெயர் ஏன் தமிழில் இல்லை என்ற கேள்வி வராதா ?
இதை தமிழ் பேச்சு
எங்க மூச்சு என்ற துவங்கி தமிழை மூலதனமாக வைத்து அமைச்சராக உயர்ந்திருக்கும் ராஜ்மோகன் அவர்களுக்கு தெரியாதா
திரைபடத்தில் கூட தமிழ் பெயர் வைத்தால் வரி சலுகை என்று கலைஞர் கொண்டு வந்தாரே அதன் மூலம் பெயர் பெற்ற விஜய் தானே இன்று முதல்வர் அவர் அறிவிக்கு எட்டவில்லையா ?
அறத்தின் பக்கம் நிற்கும் கூட்டணி கட்சிகள் இதை கண்டிக்காதா ?
மேடை தோறும் தமிழில் பெயர் வைக்கும் இவர்கள் தமிழ்நாடு அரசு கொண்டு வருகிற திட்டத்தில் தமிழ் பெயர் இல்லை என்றால் தமிழ் எப்படி வாழும்....?
என்ன ஒரு Roller Coaster நாள்! 🎢
தமிழ்நாட்டை நேசிக்கும் ஒருவராகவும், அதனால் வலுவான திமுகவை விரும்புபவராகவும் இருந்தால், இன்று எல்லா உணர்வுகளையும் ஒரே நாளில் அனுபவித்திருப்பீர்கள்!
காலை, உதயநிதிக்கு எதிராக TVK தொண்டர்களை மாநிலம் முழுவதும் திரட்டப் போவதாக Bussy Anand அறிவித்ததோடு தொடங்கியது. ஆரம்பத்தில் அதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றியது.
பிறகு ஆரம்பமானது Narrative Machine. 🙄
தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதள பரபரப்பு, கைது கோரிக்கைகள்… அடுத்ததாக கைது பற்றிய பேச்சு.
அப்போதும், இது உண்மையிலேயே நடக்கும் என்று பலருக்கும் தோன்றவில்லை.
ஆனால்…
காவலில் எடுத்துச் செல்லப்பட்டார்!
அதுதான் திருப்புமுனை! ⚡️
காவல் வாகனத்திற்குள் இருந்தபடியே உதயநிதி ஊடகங்களை சந்தித்த அந்த சில நிமிடங்களே நாளின் போக்கை மாற்றின.
🔅அந்த புன்னகை.
🔅அந்த நிதானம்.
🔅அந்த தன்னம்பிக்கை.
🔅அந்த நக்கல்.
🔅எதுவும் அவரை அசைத்ததாகத் தெரியவில்லை.
அது தொண்டர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. அதே நேரத்தில் நடந்ததை அநீதியாக உணர்ந்த கோபத்தையும் இன்னும் அதிகப்படுத்தியது.
அதன்பிறகு, நீண்ட நாட்களாக பார்க்காத ஒரு காட்சி! 🔥
தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் தெருக்களில் இறங்கினர். நீண்ட காலமாக அமைதியாக இருந்த OG DMK மீண்டும் விழித்தெழுந்தது போல இருந்தது. 🖤❤️
நாள் நகர நகர, FIR-லும் வேறு ஒரு பரிமாணம் வெளிப்பட்டது. இது கூட்டத்தில் எழுந்த முழக்கங்களை மட்டுமல்ல, விவசாயிகள், காவிரி மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து அவர் பேசிய உரையையும் உள்ளடக்கியதாக இருந்தது. 😱
விசாரணை நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். 🔥
பிறகு மறக்க முடியாத காட்சிகள்…
🔅விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த உதயநிதியை கடல் போல திரண்ட தொண்டர்கள் வரவேற்றனர்.
🔅இதுபோன்ற தருணங்கள் வெறும் செய்திகளை மட்டுமல்ல, அரசியல் பயணங்களையும் உருவாக்கும்.
இறுதி அத்தியாயம்… திருச்சி விமான நிலையம்.
அவரின் பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாமே இருந்தது.
🔅மனப்பூர்வமான விளக்கம்.
🔅தெளிவு.
🔅உண்மையை சரிபார்க்காமல் கருத்து கூறிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீது வருத்தம்.
🔅முதலமைச்சரை நோக்கிய கூர்மையான நக்கலும் அரசியல் விமர்சனமும்.
அனைத்திற்கும் மேலாக, அந்த தருணத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு தலைவராக அவர் தோன்றினார். 🔥🔥
சில நாட்கள் செய்திகளை மட்டும் மாற்றும்.
சில நாட்கள் அரசியல் வரலாற்றையே மாற்றும்.
இன்று அப்படிப்பட்ட ஒரு நாளாகவே உணரப்படுகிறது!
#Udhayism
#DMK4TN #Dravida_Senai
இவரை நினைவு இருக்கிறதா? இப்போது சென்னை கமிஷனர் அமுல் ராஜ், உதயநிதியை இவர் தலைமையில் சென்ற குழு தான் எல்லா திமுக தொண்டர்களையும் தள்ளிவிட்டு கைது செய்து அழைத்து போனது.
சரி அவரது பணி பாராட்டலாம்.., கோவையில் சசிகுமார் என்ற இந்து முன்னணி ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 14 கிலோ மீட்டர் கோவை பொது மருத்துவமனையிலிருந்து துடியலூர் வரை பேரணி சென்றார்கள். அப்போது இருபுறமும் இருக்கும் கடைகளை அடித்து நொறுக்கிக்கொண்டே போனவர்கள். உள்ளே இருந்த பொருள்களை எல்லாம் களவாடிப்போனார்கள். இவை எல்லாம் "இந்த சார்" கண்முன்னே நடந்தது.
அதைவிட கொடுமை ஃபைனல் டச்சாக போலீசு ஜீப் ஒன்றை கருப்பான் பூச்சியை குப்புற கவிழ்த்து போடுவது போல கவிழ்த்து ஜோராக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்கள். எரிக்கும் ஜீப்புக்கும் அவருக்கும் 10 அடி இடைவெளி அப்போது ஒருவன் வந்து கேட்டான் "செம்மையா எரியுது இல்ல சார்" என்று ஏகத்தாளம் பேசிப் போனான். ( வீடியோ இன்னும் இணையத்தில் இருக்கு) சார் அவ்வளவு ஸ்ட்ரீட் ஆபீசர்... அந்த கலவரக்காரர்களை அவர் தடுத்து ஓட ஓட விரட்டும் காட்சி வருவதற்குள் நான் தூங்கிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது அந்த சீன் படத்தில் இல்லையாம்.
இப்போ எதுக்கு இதை சொல்கிறேன் என்றால் அதுக்கு தான்...
குறிப்பு: சாம்பார் சாதத்தில் பஞ்சாமிர்தம் கலந்து சாப்பிட்டால் ருசி பிரமாதமாக இருக்கும்.
மற்றொரு குறிப்பு: தோழர் என்றால் பொறுக்கி என்ற முத்தான வாசகத்தை இவர் தான் உதித்தார்..
- Kareem Aak
https://t.co/S3vU4rmPPI
வருடத்திற்கு தமிழகத்தில் திருமணமாகும் தம்பதிகள் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம்..
இவர்களுக்கு ஒரு சவரண் தங்கம் கொடுப்பது என்றால் ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ₹6,864 கோடி கூடுதல் செலவு ஆகும்... அத்தோடு பட்டுப்புடவை ஒன்று என்றால் அதற்கு ஒரு 600 முதல் 800கோடி தேவை...
இதை நடுத்தர மற்றும் ஏழை தம்பதிகளுக்கு என்றால் கூட பட்ஜெட் கூடுதலாக 6000 கோடி எப்படியும் தேவை...
இப்படி இருக்க இந்த திட்டத்திற்கு 812 கோடி ஒதுக்கப்படுவதாக விஜய் அரசு அறிவிக்கிறது.
அதாவது கூட்டல் கழித்தல் கூட தெரியாத முட்டாள்கள் மக்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் தான் இப்படி அடிச்சு விட முடியும்.,....
நண்பர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார்.
ஒருவர் ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென கால்தவறி கீழே விழுந்துவிட்டாராம்.
நம்ம ஊரில் இப்படியொரு சம்பவம் நடந்தால் என்ன செய்வோம்?
"ஐயோ... அம்மா!" என்று கத்துவோம்.
ஆனால் அந்த மனிதர் விழுந்தவுடன் சொன்ன முதல் வார்த்தை...
"Please... don't call the ambulance. I can't afford it."
அந்த ஒரு வாக்கியம் என்னை ஆழமாக யோசிக்க வைத்தது.
உலகின் பல நாடுகளில் மருத்துவச் செலவுகள் மிக அதிகம். சில நாடுகளில் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்கே நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை வேறு.
எந்த நேரத்திலும் அரசு மருத்துவமனையை மக்கள் நம்பிச் செல்ல முடிகிறது.
108 ஆம்புலன்ஸ் சேவை உயிர்களைக் காப்பாற்றுகிறது.
ஏழை, எளிய மக்கள் கூட மருத்துவச் செலவை நினைத்து சிகிச்சையைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களையும், வலுவான பொதுச் சுகாதார அமைப்பையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது
அந்த அமைப்பின் ஒரு முக்கியமான தூண் என்ன தெரியுமா?
மருத்துவர்கள்.
அந்த மருத்துவர்களை உருவாக்கும் வாய்ப்பை சமமாக வழங்கிய கல்விக் கொள்கையே தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம்.
அந்த சம வாய்ப்பை சிதைத்ததுதான் NEET.
இன்று நான் டாக்டர் கோகிலாமணி
நான் படித்த காலத்தில் NEET இருந்திருந்தால், இன்று நான் டாக்டர் கோகிலாமணி அல்ல... வெறும் கோகிலாமணி தான்.
உடனே சிலர் கேட்பார்கள்...
"அப்படியென்றால் உங்களுக்குத் திறமை இல்லையா?"
திறமை இல்லாததால் அல்ல... வாய்ப்பு இல்லாததால்.
லட்சக்கணக்கில் செலவு செய்து NEET Coaching செல்லும் வசதி இல்லாததால்.
இன்று யதார்த்தம் என்ன?
NEET என்பது ஒரு Coaching தேர்வு.
திமுக அரசு அமைத்த A.K. ராஜன் குழுவின் ஆய்வு என்ன சொல்கிறது?
MBBS Admissions in Tamil Nadu- Before(2016-17) vs After NEET(2020-2021)
📚 Tamil-medium students
• Before NEET: 14.94%
• After NEET: 1.99%
🏡 Students from villages
• Before NEET: 65.17%
• After NEET: 49.91%
👨👩👧 First-generation college students
• Before NEET: 24.94%
• After NEET: 14.46%
🔁 Repeaters
• Before NEET: 12.47%
• After NEET: 71.42%
📌 2019–20 Academic Year 99% of students who secured MBBS admissions had received prior private coaching before appearing for the NEET examination.
NEET-ல் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் Coaching மையங்களில் படித்தவர்கள். கிராமப்புற, ஏழை, முதல் தலைமுறை மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
எல்லோராலும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து Coaching செல்ல முடியாது.
ஒரு விவசாயியின் மகன், ஒரு தினக்கூலி தொழிலாளியின் மகள், ஒரு கிராமப்புற மாணவன், ஒரு அரசு பள்ளி மாணவி - இவர்களின் கனவை குடும்பத்தின் பொருளாதாரம் தீர்மானிக்கக் கூடாது.
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் மருத்துவர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் தங்கள் மண்ணுக்குத் திரும்பி, தங்கள் மக்களுக்குச் சேவை செய்ய முடியும்.
ஆனால்...
அந்த வாய்ப்பைத்தான் NEET பறித்துக் கொண்டிருக்கிறது.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் கூறியதுபோல்:
"You cannot have both fairness and NEET. NEET is fundamentally unfair, and it should be abolished."
சிலர் சொல்வார்கள்...
"இப்போது அரசியல் செய்வதற்காகத்தான் NEET-ஐ எதிர்க்கிறீர்கள்."
அவர்களுக்கு வரலாறு தெரியாது.
NEET-ஐ எதிர்ப்பது இன்று தொடங்கிய போராட்டமல்ல.
2010-லேயே, NEET கொண்டு வர முயற்சி செய்யப்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதனை உறுதியாக எதிர்த்தார்.
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு.
அந்தக் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டின் உரிமை என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் சமரசம் செய்யவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுத்தார்
அதுதான் திராவிட மாடல் அரசியல்.
பதவிக்காக அமைதி காக்கும் அரசியல் அல்ல...
மக்களின் உரிமைக்காக, தேவைப்பட்டால் கூட்டணியிலிருந்தே எதிர்க்கும் அரசியல்.
NEET-ஐ எதிர்ப்பது அரசியல் அல்ல.
இது சமூகநீதிக்கான போராட்டம்.
இது கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புக்கான போராட்டம்.
தமிழ்நாட்டிற்கு NEET விலக்கு வேண்டும்!
(படம்: 26/07/2026 அன்று நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வற்புறுத்தி தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நடந்த பேரணி மற்றும் மாநாடு)
1. VB-G Ram G திட்ட ஒப்புதல்
2. ஜல்சக்தியில் தனியாருக்கு குடிநீர் விநியோக உரிமை
3. வேந்தராக ஆளுநரே தொடர ஒப்புதல்
4. துணைவேந்தர் தேடுதல் குழுவில் UGC உறுப்பினருக்கு ஒப்புதல்
5. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை நிராகரிப்பு
6. NEETக்கு எதிரான போராட்டத்தில் கள்ள மௌனம்
7. போராடிய மாணவர்களை கல்வி வளாகங்களுக்குள் புகுந்து அடித்து கைது செய்தது
8. விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்துதல்
9. காவிரியில் தண்ணீர் இல்லை, கவலையும் இல்லை
10. 717 மதுபான கடைகள் மூடியதாக பச்சை பொய்
11. அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்த்தல்
12. மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களை முட்டாளாக்கியது
13. தொடர் லாக்அப் மரணங்கள், எண்ணிலடங்காத பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…..
மூனு மாசம் தான் ஆச்சுங்க! இதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும். காலால நடக்குறாரு, cuteஆ இருக்குறாரு…எவ்வளவு முக்கியமில்ல? 😡💦
#வேசிஊடகங்கள்
#கதாநாயகவழிபாடு
#நாசமாகும்தமிழ்நாடு
திராவிட முன்னேற்றக் கழக அரசு அனைவரும் படிக்க வைப்பதற்காக "நான் முதல்வன்", "புதுமைப்பெண் திட்டம்" போன்ற எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்து அனைவரையும் படிக்க வைத்தது, ஆனால் தற்போது இருக்கும் கவர்ச்சி நடிகர் அரசு படித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற அளவில் வந்து நிற்கிறது.
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails