படத்துல பேர் வச்சதுக்கே அவர ராம பக்தர்னு சொல்றீனா அப்ப தன் பேரே ராமசாமி னு வச்சிருந்த பெரியார எல்லாம் என்ன சொல்லுவ பைத்தியம்.. அவரு சாதிய புடிச்சு ஊ...ம வேற ஏதாவது யோசி.
Kamal has used the name Ram a lot in his films.
HeyRam - Saket Ram
Panchatantram -
Ramachandramurthy
Kaathala Kaathala - Ramalingam
Vasool Raja MBBS- Rajaraman
Per Sollum Pillai - Ramu
Japanil Kalyanaraman - Raman
“என்னை வெறுக்கலாம்... ஆனால் தவிர்க்க முடியாது!”
திரையுலகின் தவிர்க்க முடியாத அடையாளம் திரு. கமல்ஹாசன்
“You can hate me, but you can't avoid me”
இந்த வரி ஒரு மனிதரின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, பல தசாப்தங்களாக தனது திறமை, உழைப்பு மற்றும் புதுமையால் ஒரு துறையை மாற்றிய கலைஞரின் பயணத்தையும் பிரதிபலிக்கிறது. அந்த மனிதர் தான் இந்திய திரையுலகின் பெருமை, உலக அரங்கில் தமிழின் முகம், கலைஞர்களின் கலைஞர் டாக்டர் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் கமல்ஹாசனைத் தவிர்த்து எந்த அத்தியாயத்தையும் முழுமையாக எழுத முடியாது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (RKFI), திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன ஆசிரியர், சமூக சிந்நதனையாளர் என பல பரிமாணங்களைக் கொண்ட கலை ஆளுமையாக அவர் திகழ்கிறார்.
1959 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது பயணம், காலப்போக்கில் இந்திய சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக வளர்ந்தது. கதாநாயகன் என்ற எல்லைக்குள் தன்னை அடைத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு படத்திலும் புதிய சவால்களைத் தேடி சென்றார். கதாபாத்திரங்களுக்காக உடல், குரல், தோற்றம் அனைத்தையும் மாற்றிக் கொண்டார். நடிப்பு என்பது வசனம் பேசுவது மட்டுமல்ல அந்த மனிதராக வாழ்வது என்பதை நிரூபித்தார்.
நாயகன்
அபூர்வ சகோதரர்கள்
குணா
தேவர் மகன்
மகாநதி
குருதிப்புனல்
இந்தியன்
ஹே ராம்
விருமாண்டி
தசாவதாரம்
விக்ரம்
போன்ற படைப்புகள் அவரது திறமையின் வெவ்வேறு முகங்களை உலகிற்கு காட்டின. ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சிந்திக்கும் படைப்பாளியாகவும் அவர் தனித்துவம் பெற்றார்.
சினிமா தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கமல்ஹாசனின் பங்களிப்பு முக்கியமானது. மேக்கப் கலை, ஒலிப்பதிவு, திரைக்கதை அமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு போன்ற பல துறைகளில் புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தினார். தமிழ் சினிமா உலகத் தரத்தில் பேசப்பட வேண்டும் என்ற அவரது கனவு, பல படைப்புகளில் வெளிப்பட்டுள்ளது.
தேசிய விருதுகள், சர்வதேச அங்கீகாரங்கள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல உயரிய விருதுகள் அவரை வந்தடைந்துள்ளன. ஆனால் அவற்றை விட பெரிய அங்கீகாரம், தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் நிலையான இடம்தான்.
கமல்ஹாசனின் பயணத்தை சிறப்பாக்குவது அவரது வெற்றிகள் மட்டுமல்ல. தோல்விகளைக் கூட கற்றலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் தான். பலருக்கு தோல்வி ஒரு முடிவாக இருக்கலாம், ஆனால் கமல்ஹாசனுக்கு அது அடுத்த முயற்சிக்கான தொடக்கமாக இருந்தது. அதனால்தான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இன்னும் பேசப்படுகிறார், கொண்டாடப்படுகிறார்.
இன்று நடிகராக வேண்டும் என்று கனவு காணும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர் ஒரு பாடப்புத்தகம். இயக்குநராக வேண்டும் என்று விரும்பும் பலருக்கு அவர் ஒரு பல்கலைக்கழகம். சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், கலை மற்றும் சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்.
அவரது கருத்துகளை அனைவரும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. சிலர் ஆதரிக்கலாம், சிலர் எதிர்க்கலாம். ஆனால் அவரது பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் சினிமா, இந்திய சினிமா, நடிப்பு கலை எதைப் பற்றிப் பேசினாலும் கமல்ஹாசனை தவிர்த்து செல்ல முடியாது.
அதனால்தான்
“என்னை வெறுக்கலாம்... ஆனால் தவிர்க்க முடியாது!” “You can hate me, but you can't avoid me”
என்ற வரி அவரது வாழ்க்கைப் பயணத்திற்கு மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது.
ஒரு நடிகராக அவர் தவிர்க்க முடியாதவர். ஒரு படைப்பாளியாக அவர் தவிர்க்க முடியாதவர். ஒரு சினிமா சிந்தனையாளராக அவர் தவிர்க்க முடியாதவர். ஒரு தலைமுறையின் ஊக்கமாக அவர் தவிர்க்க முடியாதவர்.
காலங்கள் மாறலாம். தொழில்நுட்பங்கள் மாறலாம். தலைமுறைகள் மாறலாம். ஆனால் கலை மீது தீராத காதலுடன், புதுமை மீது அணையாத ஆர்வத்துடன், சினிமாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் கமல்ஹாசன் என்ற பெயர், இந்திய திரையுலகின் வரலாற்றில் என்றும் தவிர்க்க முடியாத அத்தியாயமாகவே நிலைத்திருக்கும்.
பிடித்திருந்தால் Repost & Support பண்ணுங்க ✊🏽
நன்றி!!
#KamalHaasan #Ulaganayagan #YouCantAvoidMe #IndianTamilCinema #MaiamNews
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja#HBDIlaiyaraaja
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
பாலுமகேந்திரா சார் #KamalHaasan கிட்ட கால்ஷீட் கேட்கறாரு. சாரி சார் அப்போ நான் ஒரு புதுமுக இயக்குனர் கூட படம் பண்றேன்
அங்கதான் உங்க free timeல அங்க வந்து நடிச்சு குடுங்க. அப்படி நடிச்ச படம் கோகிலா. அந்த புதுமுக இயக்குனர் பாரதிராஜா அந்த படம் 16வயதினிலே
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
ரஜினி, கமல் கிட்ட விஜய் முதலமைச்சரானது பத்தி ஊடகங்கள் கேட்டாங்க .....
ரஜினி பதில் பேசாம போயிட்டாரு,
கமல் எங்கள் துறையிலிருந்து வந்தது எங்களுக்கு சந்தோசமே னு சொல்லிட்டு போறாரு......
கமல் எதிர்தரப்பு கூட்டணியா இருந்தாலும்,
பாராட்டுறதுல பாரபட்சம் பாக்குறதில்ல....
பெரிய மனுஷனுக்கான சிறந்த எடுத்துக்காட்டு கமல்...
Q: An actor from the cinema came into politics.. What’s your advice..❓
#KamalHaasan: You should not look at him as just a cinema actor.. He has other responsibilities as well. Anybody can come from any industry. I feel proud that he’s from our industry.
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
@ikamalhaasan@TVKVijayHQ மதியாதார் தலைவாசல் மிதியாதே.
..முதல்ல திமுக விட்டு வெளியே வாங்க ஆண்டவரே. திமுகவுல நரி வேலை பார்க்கரவங்களுக்கு இருக்கிற மதிப்பு நேர்மையான ஆளுக்கு கிடையாது.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி இறுதியில் நிகழ்ச்சியை முடிக்கும் போது தேசிய கீதம் பாடுவதே நம் வழக்கம்!
'வந்தே மாதரம்' பாடி ஆரம்பிக்கிறார்கள்! என்ன மொழி என்று தெரியவில்லை! சமஸ்கிருதம் போல் ஒலிக்கிறது!
தொடக்கத்திலேயே இத்தனை ஆண்டு வழக்கத்தை மாற்றி இருக்கிறீர்கள்!
#CMJosephVijay