தமது சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும், சமூகச் சீர்திருத்த வேட்கை கொண்ட எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
பெண்கள் முன்னேற்றம், சகோதரத்துவம், சாதி-வேற்றுமை ஒழிப்பு என முற்போக்குச் சிந்தனைகளை தமது எழுத்துக்களால் விதைத்தவர். தம் கவிதைகளை, சமூக மாற்றத்திற்கான போர்க்கருவிகளாக்கியவர்.
தமிழையும், தாய்நாட்டையும் உயிராகக் கொண்டு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக விளங்கும் நம் மகாகவியின் காலத்தை வென்ற பாடல்கள் என்றும் நமக்கு உத்வேகத்தை அளிப்பவை.
தேசிய உணர்வை விதைத்து, சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதையை அமைத்த, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கான சமுதாய அடையாளம் பெற உழைத்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினம் இன்று.
தமது வாழ்நாளையே சமூக விடுதலைக்காக அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, சுயமரியாதை மற்றும் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்த அவரது சமூகப் பணியும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்க போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வணங்குகிறோம்.
சிறந்த தமிழறிஞரும், பட்டிமன்றங்கள் மூலம் சமூகம் சார்ந்த நல்ல கருத்துக்களை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவருமான, பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடி, தங்கள் அன்பையும், ஆதரவையும், சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று மாலை, நமது @WTLFoundation சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்த சகோதர சகோதரிகளுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பித்த, சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் விவேக் அவர்களின் மனைவி திருமதி. அருள்செல்வி அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் திட்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.
கடந்த 16 நாட்களில் நமது @WTLFoundation சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக் அவர்களின் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம்.
தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.
இன்றைய இளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேசும் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
நீர்நிலைகளை காப்போம்; மரங்களை வளர்ப்போம்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்! (1/3)
பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, எனது அரசியல் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்துத் தான் இருந்து வருகிறது. ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம். தமிழக தவெக அரசு திருத்திக் கொள்கிறது. வழக்கமான எதிர்கட்சி அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை.
நமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசும் தலைவர்கள், அந்தந்த களத்தில் இருந்து உருவாக வேண்டுமே தவிர, டெல்லியிலோ அல்லது வேறு எங்கோ இருக்கும் தலைவர்கள் முடிவெடுக்கக் கூடாது.
தமிழக பட்ஜெட்டில், சுமார் ₹15,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும், ஒவ்வொரு ஆண்டும் அந்த ₹15,000 கோடியிலிருந்து ₹5,000 கோடி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ₹5,000 கோடி கிராமப்புற வளர்ச்சிக்கும், ₹5,000 கோடி நீர்நிலைகள் மற்றும் நீர்வளப் பாதுகாப்பிற்கும் ஒதுக்க வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய, அண்ணன் திரு @thirumaofficial அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @thirumaofficial அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது மக்கள் பணிகள் மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இந்தியாவில் தற்போது சுமார் 80 லட்சம் பேர், டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார்கள். நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டு முடிவில், சுமார் இரண்டரை கோடி பேராக இந்த எண்ணிக்கை உயரும். வரும் ஆண்டுகளில், இந்தப் பணிகளை ரோபோட் மூலம் மேற்கொள்ளும்போது, இந்த இரண்டரை கோடி பேரின் வேலை வாய்ப்பு என்ன ஆகும் என்பதைக் குறித்து, மத்திய மாநில அரசுகள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இவர்களுக்கான அரசியலையே நான் பேச விரும்புகிறேன்.
தமிழக பா.ஜ.க
முன்னாள் மாநிலத் தலைவர்,
தன் அன்பால் மக்களின் பேராதரவை பெற்ற தென்னகத்து சிங்கம், இளைஞர்களின் எழுச்சி நாயகன், அன்பும் பாசமும் கொண்ட ஸ்ரீ.@annamalai_k
அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
வணங்கி வாழ்த்துகிறேன்..!🙏
#HBDThalaivarAnnamalai#HBDAnnamalai
அரசு முறைப் பயணமாக இத்தாலி சென்றுள்ள பிரதமர் திரு. @narendramodi அவர்கள் அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில்,இந்தியாவிற்கு பயனளிக்கும் வகையில், உயர்கல்வி வாய்ப்புகள், பொருளாதார குற்றங்களை தடுப்பதற்கான ED ஒப்பந்தம், ஆயுர்வேதம் மற்றும் விவசாயம் என பல துறைகளில் அதிரடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன..!
அரசு முறைப்பயணமாக ஸ்வீடன் சென்ற நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அந்நாட்டு அரசுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.இந்த ஒப்பந்தங்களால் தேசம் பல நன்மைகளை அடையவுள்ளது..!
இந்துக்கள் குறித்தும் இந்து மத நம்பிக்கைகள் குறித்தும் இழிவாக பேசி வந்த விசிகவின் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது கடும் கண்டத்திற்குரியது!
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.
- தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் மத்திய அமைச்சர் திரு.@PiyushGoyal அவர்கள்