We The Leaders க்கு யார் பணம் பட்டுவாடா என்று கேட்கும் சொந்தங்களுக்கு அண்ணன் அண்ணாமலை அவர்கள் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் 🤝
"மாறுவோம் மாற்றுவோம்"
- அண்ணாமலை வழியில்...
Join : 📌https://t.co/s3Htbtn2S9 இன்றே இணைவோம்...
#ANNAMALAI#wetheleaders#Thirumangalam#madurai
தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்துள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நிதிநிலைமை காரணம் கூறி, ஆசிரியப் பெருமக்களைப் பணிநீக்கம் செய்துள்ள திமுக அரசின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 153 ல், பத்து ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிகப் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களைப் பணிநீக்கம் செய்து, பெரிய துரோகம் செய்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே, சுமார் 45.44% ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது, கடந்த டிசம்பர் மாதம் வெளியான செய்திகளில் தெரியவந்தது. இந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது திமுக அரசு.
கடந்த 2024 - 2025 ஆண்டில் மட்டும், சுமார் 110 கோடி, விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது திமுக அரசு. இந்த ஆண்டு, ஊரக உள்ளாட்சித்துறைக்கு மட்டுமே, ₹500 கோடி, விளம்பரச் செலவுக்கு ஒதுக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே பல நூறு கோடி செலவு செய்து வரும் திமுக அரசுக்கு, ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யவோ, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவோ நிதி இல்லை என்றால், இந்த கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு @mkstalin எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?
உடனடியாக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கும் பணி வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பல மாதங்களாக வெயிலிலும் குளிரிலும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களுக்கு கைதுகளையும் அடக்குமுறைகளையும் மட்டுமே பரிசாக கொடுத்த திமுக அரசு, தற்போது தனது அடுத்த தேர்தல் நாடகத்தை கையில் எடுத்திருப்பது வெட்கக்கேடானது.
இன்றைய தினம் மாலை, சென்னை மயிலாப்பூரில், உடுப்பி ஸ்ரீ கணியூர் மடத்தின் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ வித்யா வல்லப தீர்த்த சுவாமிஜி அவர்களின் 34வது சாதுர்மாஸ்ய நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றியதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
தானம், தவம், சந்நியாசம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த பெருமை நமது பாரத நாட்டிற்கு உள்ளது. இவை மூன்றும் நமது நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இதனை நமது இளைஞர்களுக்கும் நாம் கற்பிக்க வேண்டும். ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் 700 ஆண்டுகளாக எந்தவித பிரச்சினைகளும் இன்றி குருமார்கள் பதவியேற்று இறைப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். ஜனநாயக சேவைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்கமுடியாது. இறைவனின் பேரருளால் உடுப்பி கிருஷ்ணர் மடத்தின் ஆன்மீக மற்றும் மக்கள் சேவை இன்னும் பல நூறாண்டுகள் தொடர வேண்டும்.
இந்நிகழ்வில், புகழ்பெற்ற பாடகி திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் “குறையொன்றும் இல்லை” பாடலை கேட்ட போது ஆன்மிகம் நிரம்ப மனம் இலகுவானது. உடன், திருக்குடந்தை பிரவசன திலகம் டாக்டர் திரு.வெங்கடேசன் அவர்கள், தத்துவ பேச்சாளர் திரு.லட்சுமிபதிராஜா அவர்கள் ஆகியோர் இருந்தனர்.
#விடியலே.... #1கோடியாமாமே🤔⚫🔴
தமிழகத்தில் ஆங்காங்கே மழை நீரை சேகரித்து ஏரிக்கு அனுப்பும் திட்டத்தின் சிறப்பம்சம்.... பட்டர் பிஸ்கட் ரோடு...
இடம் :- ஆர் கே நகர் மேற்கு 41 வது வட்டம் எழில் நகர் பகுதி
தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது!
₹170 கோடி செலவில் நடைபெற்றதாகக் கணக்கு காட்டப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மூன்றாண்டுகளாகியும் முறையாக நடைமுறைக்கு வராதது துவங்கி, குண்டும் குழியுமான சாலைகள், சேறும் சகதியுமான சந்தைகள், குப்பைக் குளமான தெருக்கள் எனப் பல்வேறு சீர்கேடுகளில் சிக்கித் தவித்து வருகிறது பொள்ளாச்சி. ஆனால், இவற்றையெல்லாம் தனது அலட்சியத்தால் கண்டுகொள்ளாததோடு, வரிகளை உயர்த்துவது, வரிவசூலில் முறைகேடு புரிவது என்பது போன்ற அராஜகப் போக்கில் ஈடுபடும் திமுக அரசைக் கண்டித்து நமது @BJP4TamilNadu மற்றும் @AIADMKOfficial சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
திராவிட மாடலின் திறனற்ற நிர்வாகத்தை எதிர்த்தும், பொள்ளாச்சி வாழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் விதமாகவும் சிறப்பாக போராட்டத்தை முன்னெடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களான பொள்ளாச்சி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. ஜெயராமன் அவர்கள், கிணத்துகடவு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. தாமோதரன் அவர்கள், அஇஅதிமுக நகரத் தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள், நமது பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. சந்திரசேகர் அவர்கள், முன்னாள் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. வசந்தராஜன் அவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!
தமிழகத்தை சீர்குலைக்கும் திமுக அரசை எதிர்த்து இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்பாட்டம் வெறும் ஆரம்பப் புள்ளியே! இதே போன்று தொடர்ந்து பல அறவழிப் போராட்டங்களின் வழி தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக அரசால் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் வெளிக்கொணரப்படும். மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும். முன்னேற்றத்தைத் தடுக்கும் மக்கள் விரோத திராவிட மாடல் அரசை ஒட்டுமொத்தமாக அகற்றும் வரை எங்கள் கூட்டணி அயராது!
இந்தியாவில் பிறக்காத எவருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை.,
ராகுல் காந்தி அவர்களே நீங்கள் அரசியலமைப்பு புத்தகத்துடன் சுற்றித் திரிகிறீர்கள் குறைந்தபட்சம் அதைத் திறந்து படியுங்கள்..!!
இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்பவர்களுக்கு இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க எந்த உரிமையும் இல்லை..!!🔥
ராகுல் காந்தியை சாடிய திரு. @AmitShah ji's அவர்கள்!
கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பர நாடகமாடிக் கொண்டிருந்து விட்டு, ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது.
கல்விக் கொள்கை வடிவமைப்பில், திமுக அரசு ஐந்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதை இனியாவது முதலமைச்சர் திரு. @mkstalin உணர வேண்டும். உங்கள் அரசியலுக்காக தமிழகப் பள்ளி மாணவர்கள் கல்வியில் விளையாடுவதை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். (1/2)
இன்று உசிலம்பட்டியில் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் திரு.கு.சிவலிங்கம் அவர்கள் தலைமையில் மாவட்ட பார்வையாளர்
திரு.எம். ராஜரத்தினம் அவர்கள் முன்னிலையில் மாநிலச் செயலாளர் பேராசிரியர் திரு. கதலி நரசிங்கப் பெருமாள் அவர்களும்,மதுரை பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் திரு.ராமசேகர் அவர்களும்
இந்தியா தனது விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர் சகோதர சகோதரிகளின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. இந்த நிலைப்பாட்டை எடுத்தற்காக நான் தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். நான் இதற்கு தயாராக இருக்கிறேன் - இன்று நடைபெற்ற பாரத் ரத்னா டாக்டர் MS சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
நமது தேசம் எப்பொழுதும் விவசாயிகளின் நலனிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் ஒருபோதும் சமரசம் மேற்கொள்ளப் போவதில்லை. இதற்காக நான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறிவேன். இருப்பினும், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்.
இந்த தேசம், மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் இந்த நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் சேவை புரிவதற்கு தயாராக உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், சாகுபடி செலவைக் குறைப்பதற்கும், புதிய வருவாய் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்த அரசாங்கம், விவசாயிகளின் வலிமையை நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாகக் கருதுகிறது. அதனால்தான் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கொள்கைகள், அவர்களுக்கான உதவிகளைப் பற்றியது மட்டுமல்லாமல், விவசாயிகளிடையே நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
-மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள்.
#MSSwaminathan
आज NDA संसदीय दल की बैठक में सभी सांसदों ने ‘ऑपरेशन सिंदूर’ की सफलता पर प्रधानमंत्री श्री @narendramodi जी को बधाई दी और उनका अभिवादन किया। ‘ऑपरेशन सिंदूर’ न सिर्फ दृढ़ राजनीतिक इच्छाशक्ति, बल्कि भारत और भारतीयों पर हुए किसी भी हमले के कठोर जवाब का प्रतीक है। भारतीय सेनाओं व सुरक्षा बलों के इस अद्भुत पराक्रम पर पूरा देश गौरवान्वित है।
நான் 40 வருடங்களாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறேன். எதிர்க்கட்சியில் எப்படி உட்காருவது, எப்படி நடந்துகொள்வது என்று என்னிடம் பயிற்சி எடுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்னும் 20-40 ஆண்டுகள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்..!😂
-திரு.ஜெ.பி நட்டா
உத்திர பிரதேசம் வாரணாசியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் மற்றும் இராஜேந்திர சோழன் குறித்து கூறிய அருமையான தகவல்.
@narendramodi
மதுரை உயர்மறைமாவட்டத்தின் 7 ஆவது பேராயராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.
இந்த நிகழ்விற்கு, திருத்தந்தையின் இந்தியத் தூதுவர் மேமிகு பேராயர்.லியோபோல்டோ ஜிரெல்லி அவர்கள் தலைமை தாங்கினார்.
பேராயர் மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களது இறைபணிகள் சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
இந்த நிகழ்வில், @BJP4Tamilnadu மாநில செயலாளர் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.@AKNPerumal அவர்களும், மதுரை நகர பாஜக தலைவர் திரு. @marichakkarava அவர்களும், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் திரு.சிவலிங்கம் அவர்களும் கலந்துகொண்டனர்.
தீபாவளி மற்றும் திருமண சீசனின் போது,இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்று சபதம் எடுப்போம்..! 🇮🇳
இது நீங்கள் தேசத்திற்கு செய்யும் உண்மையான சேவை. நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்!
இந்தியாவின் செல்வத்தை வெளிநாடுகளுக்குப் போக விடாதீர்கள்..!
-திரு.@narendramodi ஜி
தமிழகத்தில் அழிந்து கொண்டு வரும் நீர் நிலைகளை பாதுகாக்க நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள் மேற்கொண்டுள்ள "நீர்வளம் காப்போம்" பிரச்சாரத்தின் பிரத்தியேக பாடல்..!
நீர் நிலைகளை பாதுகாக்க "நீர்வளம் காப்போம்" பிரச்சாரத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்..! #நீர்வளம்_காப்போம்