இன்றைய தினம்,புதுதில்லியில் மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. @byadavbjp ஜி அவர்களை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினேன்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சாலஞ்சர் துரை அவர்களும் உடனிருந்தார்.
முந்தைய ஆட்சியில் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, @TVKPartyHQ ஆட்சியில் பேருந்துக் கட்டணம் அதிகரித்ததன் காரணம் என்ன முதல்வரே திரு.@TVKVijayHQ?
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள், கூட்டுறவு அமைச்சகம் 5 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
#SahkarSeSamriddhiKe5Saal
3 கோடியில் இருந்து 16 கோடி 👍
கடந்த 2014 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 16 கோடியாக உயர்ந்துள்ளது.
The Name is MoDi 🔥
Gen Z, Gen Alpha தலைமுறையை இப்படி ஈர்க்கவேண்டும்! வளர்ச்சி, தேசிய சிந்தனை, விஞ்ஞானம், சனாதனம் என👍
அதைவிட்டுவிட்டு ரீல்ஸ் போட்டு ஈர்க்க கூடாது 👎
Watched the historic, growth driven and people centric Union Budget presented by Hon’ble Finance Minister Smt. Nirmala Sitharaman Ji. The Budget focuses on inclusive development of all sections of society, with special emphasis on strengthening MSMEs, empowering youth, uplifting villages, and accelerating growth in Tier-II, Tier-III cities and temple towns through City Economic Regions (CERs) with an allocation of ₹5,000 crore per CER over five years.
The announcement of seven High-Speed Rail corridors—Mumbai–Pune, Pune–Hyderabad, Hyderabad–Bengaluru, Hyderabad–Chennai, Chennai–Bengaluru, Delhi–Varanasi and Varanasi–Siliguri—will act as major growth connectors.
Joined by Prof. Rama Srinivas, BJP Tamil Nadu General Secretary, Shri Mari Chakravarthy, District President, Shri Palani Narasingh Perumal, Zonal In-charge, Shri Murugeshwar Pandian, Secretary BJP Local Body Cell, and other senior leaders.
Under the leadership of Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, India is truly marching towards Viksit Bharat with the spirit of Atmanirbhar Bharat.
#Budget
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாநகர் மாவட்டம் சார்பாக மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. உடன் @ReddySudhakar21@ProfessorBJP மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்…..
தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாநகர் மாவட்டம் சார்பாக மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. உடன் @ReddySudhakar21@ProfessorBJP மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்…..
ஹிந்து விரோத திமுக அரசுக்கு நெத்தியடி. இனியாவது திருந்துமா திமுக?
திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அறநிலையத்துறையின் மூலமாகவே மேல்முறையீடு செய்தது திமுக அரசு.
144 தடையாணை, காவல்துறை என சகல அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்தி தீபம் ஏற்றுவதை தடுத்து நிறுத்தியது ஸ்டாலின் அரசு.
ஆனால், இன்றைக்கு திமுக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
திமுக அரசு இப்போதாவது தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்குமா? அல்லது ஹிந்து விரோத போக்கை தொடருமா?
@arivalayam@mkstalin@BJP4TamilNadu@NainarBJP
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள உயர்நீதிமன்றம்..!
முருக பக்தர்களின் உணர்விற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி..!
வெற்றிவேல்..! வீரவேல்..!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு நீதிபதி திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதிபடுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில், கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து தீபம் ஏற்றலாம் என்று, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் இந்து சமுதாய மற்றும் முருக பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டது அறநிலையத்துறை. மேலும், பக்தர்களின் மீதும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதும், காவல்துறையை வைத்து அராஜக போக்கினை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது தமிழக அரசு.
இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை வைத்துக்கொண்டு, கடந்த சில காலமாக இந்து சமய மக்களுக்கு எதிரான அறமற்ற துறையாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழக அரசிற்கும் அறநிலையத்துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது. தீபத்தூண், தர்காவிற்கே சொந்தம் என்ற அறநிலையத்துறையின் அறமற்ற வாதம் சிறுப்பிள்ளைத் தனமானது என்று கூறியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை அபத்தம் என்றும் கடுமையாக சாடியுள்ளது.
முருக பக்தர்களுக்கும், இந்து சமுதாய மக்களுக்கும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தீவிர முருக பக்தரான அமரர் பூரணச்சந்திரன் அவர்களின் தியாகத்திற்கும் உரிய நீதியை இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்குப் பிறகாவது ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை விடுத்து, வருடந்தோறும் கார்த்திகை தீப நாளன்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#வெற்றிவேல்
#வீரவேல்
சமீபத்தில், மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டுமென்பதை கோரிக்கையாகக் கொண்டு, தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட திரு.பூரணச்சந்திரன் அவர்களது இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மேலும், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டேன்.
ஓம் சாந்தி..!
முன்னாள் பாரதப் பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல் பிகாரி வாஜ்பாய் அய்யா அவர்களின் பிறந்த தினம் இன்று.
பாரத தேசத்தை ஆட்சி செய்த தலைசிறந்த பிரதமர்களில் ஒருவரான அய்யா வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில், தேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது அளப்பரியதாக விளங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவித்தவர், போக்குவரத்துப் பரிமாற்றங்கள் எளிதாக அமைந்திட வேண்டுமென்பதற்காக, தங்க நாற்கரச் சலைகளை அமைத்துக் காட்டினார்.
அணுசக்தி நாடுகளுக்கு இணையாக இந்தியாவையும் உருவாக்கும் வகையில் ‘பொக்ரான்’ அணு ஆயுத சோதனை நிகழ்த்திக் காட்டிய, நமது முன்னாள் பாரதப் பிரதமர் அய்யா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினத்தில், அவர் நம் தேசத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றி வணங்குவோம்..!
#GoodGovernanceDay
#AtalBihariVajpayee
#AtalSmritiVarsh
Madurai, Tamil Nadu: BJP members staged a protest at the mortuary of Poorna Chandran, who died by self-immolation over the Thiruparankundram issue. Security tightened ahead of BJP State President Nainar Nagendran’s expected arrival
A devoted follower of Lord Muruga, Thiru Poorna Chandran, deeply anguished by the DMK Government’s anti-Hindu stance, particularly its refusal to allow devotees to light the sacred Karthigai Deepam on the Deepa Thoon atop the Thiruparangundram Hill, tragically ended his life today in Madurai by self-immolation.
This heartbreaking news has left me profoundly saddened. I extend my heartfelt condolences to his bereaved family and pray that they find the strength to endure this irreparable loss.
I earnestly appeal to all devotees of Lord Muruga to remain calm and exercise patience. We repose complete faith in the judiciary and are confident that justice will prevail and that our rightful claims will be upheld.
I also humbly urge devotees not to take such extreme steps; your life is precious, and your family depends on you.