தைத்திங்களில் தமிழர்களின் மாபெரும் பண்பாட்டுத் திருவிழாவினைக்கூட கொண்டாட முடியாமல் தமிழ்நாடே போர்க்களம்போல காட்சியளிக்கிறது.
உலகிற்கு உணவளிக்கும் வேளாண் பெருங்குடி மக்கள் உரிய கொள்முதல்விலையும், மழையில் மூழ்கி வீணான பயிர்களுக்கு உரிய இழப்பீடும் கேட்டு போராடுகின்றனர். வெயிலிலும் மழையிலும் வெம்பாடு பட்டு குருதியை வியர்வையாக சிந்தி விளைவித்த விளைப்பொருட்கள்
வீதியில் கொட்டப்படுவதைக் கண்ணீர் சிந்தும் விவசாயிகள், சேமிப்பு கிடங்குகள் அமைத்து பாதுகாக்க கோரி
போராடுகின்றனர்.
அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம் கேட்டுப்போராடுகின்றனர்.
உயிரைக் காக்கும் மருத்துவர் - செவிலியர்கள் உரிய ஊதியம், பணிநிரந்தரம் கோரி போராடுகின்றனர்.
ஊரைத் தூய்மையாக்கி உடல் நலத்தை காக்கும்
தூய்மைப்பணியாளர்கள் நிரந்தரப் பணி கேட்டுப்போராடுகின்றனர்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் போராடுகின்றனர்.
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை
கொண்டு போகவோ? நாங்கள்-சாகவோ? என்று பாட்டன் பாரதி வருந்திப் பாடியதற்கேற்ப நாளும் கொள்ளை போகும்
கனிமவளங்களை காக்க சமூக ஆர்வலர்கள் போராடுகின்றனர்.
இரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் முதல் தொகுப்பூதிய பேராசிரியர்கள் வரை
பழைய ஓய்வூதியம் கேட்டு ஓய்வின்றி போராடுகின்றனர்.
இவற்றையெல்லாம் காணும்போது பெருந்துயரம் நெஞ்சை சூழ்கிறது. புத்தாண்டு கூட தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு திண்டாட்டமாக உள்ளது. பெருவிழா கூட தமிழர்களுக்கு பெருந்துயரமாக உள்ளது மிகுந்த மனவேதனையளிக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் பழந்தமிழர் கூற்றுக்கு இணங்க
இக்கொடுமைகளுக்கு எல்லாம் விரைவில் முடிவு ஏற்பட்டு நல்விடிவு பிறக்கட்டும்.
கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது – மத போதை, நிலவளச் சுரண்டல், கனிமவள கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்ணடிமைத்தனம் இவைகளுக்கு எதிரான மாபெரும் அரசியல் புரட்சி இம்மண்ணில் பூக்கட்டும்!
வையம் போற்றும் தைத்திருநாளில் தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!
எம் மக்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!
தமிழ்மொழி மீட்க,
தமிழர் நலன் காக்க,
தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,
தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,
தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட
தை மகளே வருக!
தமிழர் நலம் பெருக!
உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!
அன்பின்
வாழ்த்துகளுடன்...
உங்கள் சீமான்
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற சூலை 10ஆம் தேதி மதுரையில் விராதனூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
ஆடு-மாடுகளின் மாநாடு!
'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது.
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்!
ஆடும் மாடும் நம் செல்வங்கள்!
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று நமது வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய மறைமொழியில்,
கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் மாடும் நம் செல்வங்கள் என்பதை வலியுறுத்தி பாடுகிறார்.
அந்த நம் செல்வங்களைப் பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம்!
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; ஆடும் மாடும் அற்ப உயிர்கள் அல்ல; நம் அருமைச் செல்வங்கள்!
அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்!
மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு
என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்!
நன்றி வணக்கம்!
அந்தமான் மற்றும் நிக்கோபார் மாநிலத் தலைநகரான ஸ்ரீ விஜயபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் அந்தமான் மாநிலத் தலைவர் அமுதன் மற்றும் மாநிலச் செயலாளர் சரவணன் முன்னிலையில் இன்று 30.03.2025 புலிக்கொடி ஏற்றப்பட்டது
#அந்தமானில்_நாம்தமிழர்
தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை மதுபானக்கடை மது விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை கூறுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு இலட்சம் கோடிகளுக்கும் மேல் இமாலய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில், பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசைக் காப்பாற்றும் நோக்கில் 1000 கோடிகள் என குறைத்துக்கூறி விசாரணையைச் சுருக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரசு மதுபானக்கடை சில்லறை விற்பனையில் போத்தலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்தது தொடங்கி, மதுபான கொள்முதல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, டாஸ்மாக் வாகன போக்குவரத்து உரிமம், மதுபானக்கூட உரிமம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் என பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. அதைத்தவிர டாஸ்மாக் மதுபான விற்பனையில் 50% மேல் கணக்கில் காட்டப்படாமல் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக திமுக அரசின் முதன்மை அமைச்சர்களில் ஒருவரான ஐயா பழனிவேல் தியாகராஜன் ஆங்கில நாளிதழ் நேர்காணலில் அளித்துள்ள வாக்குமூலமும் திமுக அரசின் மதுபான ஊழலுக்கு மறுக்க முடியாத சான்று பகிர்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இல்லாமல் திடீரென திமுக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதும், மக்களவை தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, அனைத்துக்கட்சி கூட்டம் என திமுக அரசு ஆடும் அரசியல் ஆட்டங்கள் அனைத்தும் தன் மீதான பல்லாயிரம் கோடி மதுபான ஊழலை மறைக்க நடத்தும் நாடகமேயாகும்.
ஆம் ஆத்மி அரசின் மதுபான ஊழலில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு பல மாதங்கள் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, தெலுங்கான மாநில மதுபான ஊழலில், ஆட்சியின் அதிகார மையமாக இருந்த அன்றைய முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் அன்புமகள் அம்மையார் கவிதா அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆனால், 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் விசாரணையை விரிவாக்கி அப்படி எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்?
மற்ற மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல்களில், அம்மாநிலங்களின் துறைசார்ந்த அமைச்சர்கள் முதல் முதலமைச்சர், முதல்வரின் குடும்பத்தினர் வரை ஊழலில் பங்குபெற்ற அனைவரும் பாகுபாடின்றி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஆளும் திமுக அரசிற்கு ஆதரவாக அமலாக்கத்துறை தொடர்ச்சியாக செயல்படுவது ஏன்? அப்படியென்றால எதிர்க்கட்சிகள் செய்யும் ஊழல் முறைகேடுகளை அமலாக்கத்துறை மூலம் வெளிப்படுத்துவதை வெறும் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே பாஜக அரசு பயன்படுத்துகிறதா? அதனால்தான் திமுக அரசு செய்துள்ள ஊழல்களை அமலாக்கத்துறை மூலம் குறைத்துக்காட்டி மூடி மறைக்க முயல்கிறதா பாஜக அரசு? திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? முழுமையாக விசாரணை நடத்தாமல் 1000 கோடிகள் மட்டுமே ஊழல் என்று அவசரமாக அறிவித்தது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு என்று அமலாக்கத்துறை அறிக்கை அளித்தது எப்படி? மக்களின் வரிப்பணத்தை மீட்க வேண்டும் என்ற அக்கறை உண்மையிலேயே அமலாக்கத்துறைக்கு இருக்குமாயின், மற்ற மாநில மதுபான ஊழலில் காட்டிய வேகத்தையும், தீவிரத்தையும் திமுக அரசின் மதுபான ஊழல் விசாரணையில் காட்ட தயங்குவது ஏன்? இதன் மூலம் பாஜக - திமுக இடையேயான மறைமுக உறவு மீண்டுமொருமுறை வெளிப்படுகிறது.
ஆகவே, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்ட இமாலய மதுபான ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள், உயர் அதிகார மையத்தில் உள்ளவர்கள் வரை அனைவரையும் கைது செய்து விசாரணை வளையத்தை விரிவு செய்து, பாகுபாடற்ற நேர்மையான விசாரணை நடத்தி, பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு நடைபெற்றுள்ள ஊழலை முழுமையாக வெளிப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை முழுவதுமாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இயக்கதிடமிருந்து நேரடியாக அறிக்கை பெற உதவிய சங்ககிரி ராஜ்குமார் அவருக்கு ஆலோசனை வழங்கி பொய் சொல்லவைத்த கோயபல்ஸ் மணி கூட்டம் அதை வைத்துகொண்டு அவதூறு கிளப்பிய திமுக இணைய கூலிகள் என அனைவருக்கும் நன்றி..
உண்மை ஒருநாளும் உறங்காது...