TVK government didn't rename the schemes. They expanded their scope, funded them properly, and removed political branding!
Let's analyse scheme by scheme.👇
1. உலகம் உங்கள் கையில் → வெற்றி மடிக்கணினி திட்டம்
DMK's scheme:
Launched January 5, 2026 - just before elections as a vote-gathering exercise. Only for final year college students.
TVK's scheme:
TVK's Vetri Laptop Scheme covers all college students. Additionally paired with Vetri Skill Training Scheme covering 12 lakh students with industry internships and monthly stipends.
2. கலைஞரின் கனவு இல்லம் → வெற்றி வீடு திட்டம்
DMK's scheme:
Named after their own party founder. Kalaignar - a DMK name on a public welfare scheme.
TVK's scheme:
70,000 permanent houses to be constructed - ₹3,500 crore allocated. Financial assistance for upgrading temporary houses increased from ₹3.10 lakh to ₹5 lakh.
3. முதலீர் படிப்பகம் → டிஜிட்டல் நூலகம்
DMK's scheme:
Physical study centers limited to a few urban hubs, accessible only to select populations.
TVK's scheme:
Opens free digital libraries in every district so all students can easily access fast internet, online study materials for competitive exams, and AI learning tools.
4. அன்புச்சோலை திட்டம் → மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்
DMK's scheme:
Limited day-care facilities with minimal social or recreational focus for senior citizens.
TVK's scheme:
Community centers for older adults that provide health check-ups, fun activities, and support, helping seniors stay active and connected with others.
5. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் → பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்
DMK's scheme:
Breakfast served only up to Class 5 in government primary schools.
TVK's scheme:
Expanded the scheme to cover Classes 6 to 8 with an additional ₹217 Crore allocation, extending meals to over 4.38 lakh additional students, and named it after educational pioneer Kamarajar unlike DMK.
6. நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் → மண்ணின் மகள் திட்டம்
DMK's scheme:
The restrictions were so tight that most women couldn't qualify:
TVK's scheme:
₹20 crore specifically allocated in first budget. Prioritises Adi Dravidar and Tribal women agricultural labourers becoming landowners - with modern farming training included alongside land ownership.
7. விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் → நவீன மிதிவண்டி திட்டம்
DMK's scheme:
Basic standard bicycles distributed without safety gear or modern upgrades.
TVK's scheme:
Modernized cycles for Class 11 students, upgrading frame designs and adding safety features like helmets and bottle holders to improve student safety during commutes.
தன் இல்லத்தில் வேலை செய்பவர்களுக்கு VIP வரிசையில் இடம் கொடுத்து, தான் முதல்வர் ஆவதைக் கண்டு ரசிக்கச் செய்த முதல்வர் விஜய்...! ♥️ ❤️ அந்த எண்ணம் கடவுளுக்கு சமம் 🙏
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ@INCIndia@cpimspeak@tncpim@thirumaofficial@IUMLTNOfficial
வெற்றி பெற்ற
விஜய் அவர்களே!
கலை உலகின்
சகபயணி என்ற முறையில்
உங்களை வாழ்த்துகிறேன்
உலகத் தமிழர்கள்
உற்றுப் பார்க்கும் வெற்றி
உங்களுடையது
வெற்றி - தோல்வி
இரண்டுமே பாரங்கள்
தோல்வி என்பது
முதுகில் சுமக்கும் பாரம்;
வெற்றி என்பது
தலையில் சுமக்கும் பாரம்
சமூகம்
உங்களிடம் எதிர்பார்க்கிறது
மக்கள் உங்களுக்கு
வாக்களிக்கும் முன்பே
மக்களுக்கு நீங்கள்
வாக்களித்து விட்டீர்கள்
அந்த வாக்குகளை
நிறைவேற்றுவதில் இருக்கிறது
உங்கள் ஆட்சியின் மாட்சி
உங்கள்
கட்சிக்கும் ஆட்சிக்கும்
வாழ்த்துக்கள்
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
From ruling the screen to winning the hearts of the people congratulations to Vijay sir on your first election victory. This is just the beginning.🔥🔥🔥🔥
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ