கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
AI and Cloud data engineeering ன்னு எவ்ளோ டெக்னாலஜி improve ஆகி போயிட்டு இன்னும் பெயருக்கு பின்னால் சாதி பெயரை கூட மாற்றாத இந்த மாநிலத்தை சேராத ஒரு தொழிலதிபரை முதலமைச்சருக்கு ஆலோசகராக போடுவதற்கு எல்லாம் முட்டு கொடுக்குறாங்குங்க…
கடந்த 5 வருசமா திமுககாரணுங்க எப்படி அகராதியா பேசினாங்களோ அப்படியே இவனுங்களும் பேசுறாங்கே…
@KanimozhiDMK துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை அளித்தும், முந்தைய திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்ட சைலேஷ்குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்காது, பதவி உயர்வு கொடுத்தது ஏன்?
ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம்.
கிராமப்புற மருத்துவமனைகளை நவீனம் ஆக்குவோம்
இதுவெல்லாம் தவெகவின் தேர்தல் வாக்குறுதி.
அதனைச் செய்யாது 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு எதற்குத் தற்காலிக அனுமதி?
@arunraajkg
இன்று VCK மற்றும் IUML சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஆனால் அதை பற்றியெல்லாம் VCK மற்றும் IUML கட்சிகளுக்கு கவலை இல்லை.
சிலர் கூறலாம் ,"லோக் பவன்" ஆளுநர் கட்டுப்பாட்டில் இருக்கிறது ஆதலால் ஒன்றும் செய்ய முடியாது என்று....
விசிக அலுவலகத்தில் பதவியேற்பு வைத்து அங்கே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் விசிக இப்போது ஒன்றும் கண்டுக்கொள்ளாது.
காரணம் "பதவி பத்தும் செய்யும்"
#shame
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மண்ணின் மக்கள் மீது அன்றைய அதிமுக அரசு அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றிய நாள் இன்று.
அதிமுக துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. திமுக அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது, 5 ஆண்டுகளும் பாதுகாத்தது.
புதிதாக வந்திருக்கிற தவெக அரசாவது நடவடிக்கை எடுக்குமா? இல்லை! இதுவும் துப்புக்கெட்டுக் கிடக்குமா?
தமிழ்நாட்டின் உட்சபட்ச சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் திருமாவளவன்.
ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி சென்னையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை 18 ஆம் தேதி முடித்துக் கொண்டார். உண்ணாவிரதப் போராடத்தை முடித்துக் கொண்ட பின்னர் திருமாவளவன் பேசுகையில்,
காங்கிரசுடன் இனி எந்தவிதமான உறவையும், எக்காலத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வைத்துக்கொள்ளாது. காங்கிரஸ் கட்சியை விட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 மடங்கு பலமானது என்றார், காங்கிரசை ஒழிப்பேன் என்றும் ‘வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவேன்’ என்று சபதமிட்டார். ஆனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே காங்கிரசோடு கூட்டணி வைத்து மேடையில் மைக் பிடித்து 'அன்னை சோனியா வாழ்க' என காங்கிரஸ் தொண்டரை விட விசுவாசமான அடியாளாய் மாறி கூவினார்.
ஒரு பக்கம் ஈழ ஆதரவு வேஷம் போட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் ஈழ எதிர்ப்பாளர் ஹிந்து ராமுக்கும், கே.எஸ். அழகிரிக்கும் விருது கொடுப்பார். ஒரு பக்கம் அணு உலை எதிர்ப்பு பேசுவார் இன்னொரு பக்கம் அணு உலை திறக்க முழு வேலை செய்த காங்கிரஸ் அமைச்சர் நாராயணசாமியை தன் பிறந்தநாளுக்கு தலைமை தாங்க வைப்பார். பெரியார் திடலுக்கு போய் வீரமணியோடு உறவாடுவார் அப்படியே போய் ஈஷா சத்குருவோடு பேட்டியில் இருப்பார். அந்நிய முதலீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன் என்பார். மூவர் தூக்கு ரத்து செய்ய போராட்டத்தில் ஒரு பக்கம் கலந்துகொண்டு இன்னொரு பக்கம் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு பிரச்சாரம் செய்வார். இல்லாத திராவிடத்திற்கு மாற்று தமிழ்த்தேசியம் என்பார் அப்படியே யூடர்ன் அடித்து தமிழ்தேசியம் என்று ஒன்று இல்லை என்பார். விஜயகாந்திற்கு அம்பேத்கார் பற்றி என்ன தெரியும் என்று பேசியவர் சில வருடம் கழித்து வாழும் அம்பேத்கராக விஜயகாந்த் தெரிகிறார் என்றார். இப்படி இன்னும் ஓராயிரம் இருக்கிறது அவரின் சந்தர்ப்பவாத அரசியல்..
இப்படியான திருமாவிற்கு திகவினரும் திமுகவினருக்கு விட்ட ஃபயரும் சிதறவிட்ட சில்லறைகளும் கொஞ்ச நஞ்சமில்லை. இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு திருமாவை சந்தர்ப்பவாதி என பதிவிடுகிறார்கள். இதையே நாங்கள் சொல்லும் பொழுது சாதிவெறியன் என்று பட்டம் கட்டிய இந்த வெங்காயங்கள் இன்று அதே பட்டத்தை வாங்க லைனில் நிற்கிறார்கள்.
உபிஸ்... வாழ்க்கை ஒரு வட்டம் டே..
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!