ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வாகனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை முழுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டாமா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.
திமுகவினர் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்ச கூட்டணிக் கட்சிகளை திருடிக் கொண்டு வந்தும்,
அதிமுகவின் 25 MLA-க்களிடம் உங்களை மந்திரியாக்கறேன் என ஆசை வார்த்தை கூறி, இறுதியில் ஒரு ஆறு பேரை ராஜினாமா செய்ய வைத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அசிங்கப்படுத்திக்கிட்டிருக்கும்,
இந்த இழிவரசியல், விஜய், யோக்கியனாம், தூய சக்தியாம், மாடர்ன் மனுநீதிச் சோழனாம்.
இதுல அதிமுக, இந்த ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுதுன்னு வாய்க்கூசாம அதிமுகவை குற்றம்சாட்டுகிறார் நிர்மல் குமார்.
மக்கள் உங்களின் அனைத்து அரசியல் அசிங்கத்தையும் கவனிக்கிறார்கள் மிஸ்டர் விஜய். வருகிற எந்தத் தேர்தலாக இதற்கு இருந்தாலும் தக்க தண்டனை உண்டு.
அதிமுக MLA-க்களை நீங்கள் விலை கொடுத்து வாங்கிவிட்டு, அதிமுக, உங்க ஆட்சியை கவிழ்க்க சதி நடத்துதுன்னு பித்தலாட்டம் செய்வது பச்சை அயோக்கியத்தனம்.
ஒவ்வொரு வாக்காளரும் உங்க பச்சைப் பொய்யைக் கண்டும் அதிர்ந்து போயுள்ளார்கள். திமுகவின் அட்டூழியத்திற்கு சற்றும் சளைத்ததல்ல உங்கள் அட்டூழியம்.
இருக்கட்டும். பார்த்துக்கலாம்.
மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தில் திருத்தம் செய்வது குறித்து அவையில் அறிவிக்காமல் திருத்தியது சட்டசபை விதிகளுக்கு முரணானது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
வணக்கம் @tn_factcheck…
3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம்.
அது என்ன தொழில்நுட்பக் கோளாறு?
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா?
இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே?
அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள்.
அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்?
கட்சி மாறுவதால்,
ஆட்சி அதிகாரம் வருவதால்,
Constitutional Status மட்டும் மாறுமா?
“தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சத்தியமா புரியல...என்ன தான் ஆச்சு தமிழக மக்களுக்கு??? 🤔
எதுக்கு இந்த தமிழக மக்கள் தங்களை தாங்களே இப்படி மீண்டும் மீண்டும் தண்டனை கொடுத்து கொள்கிறார்கள்?
நல்லா தானே அதிமுக ஆட்சியில் இருந்தாங்க??? மின்சாரம், குடிநீர் வசதி, சட்டம் ஒழுங்கு, விவசாய திட்டங்கள் என அடிப்படையில் ஒரு நல்ல ஆட்சி தானே இருந்தது..?
ஸ்டாலின் ஆட்சியை பார்த்தாவது புரிந்திருக்கும் அப்படின்னு பார்த்தா அதை விட கொடுமையான ஆட்சியை தேர்ந்தெடுத்து இப்போ ஒவ்வொரு ராத்திரி நடு தெருவுல உக்காந்து போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க 😲
Seriously, something unusual going on in the minds of the people of TN. FEELING SORRY 😓
அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா இப்போதே தனது தேர்தல் பணிகளைப் படுவேகமாகத் தொடங்கிவிட்டார்.
விளையாட்டுப் போட்டிகள், சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் அவரே முன்னின்று கலந்து கொள்கிறார்; ஊரெங்கும் அவரது பெயரில் நோட்டீஸ்களும் பறக்கின்றன.
இவ்வளவு நடக்கும்போதும் அண்ணா திமுக இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறது?
தேர்தல் நெருங்கும் வரை காத்திருக்காமல், தொகுதிக்கு நன்கு அறிமுகமான, மக்கள் செல்வாக்குள்ள ஓர் உள்ளூர் முகத்தை இப்போதே வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துக் களப்பணிகளைத் தொடங்கினால் என்ன?
தலைமை முன்கூட்டியே திட்டமிட்டால் தொகுதிக்குள் இருக்கும் குழப்பங்களைத் தவிர்த்து, ஆரம்பத்திலிருந்தே தேர்தல் களத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
வெறும் விளம்பர அரசியலுக்குப் போட்டியாக மாறாமல், அதிமுக இப்போதிருந்தே அடிமட்ட அளவில் வியூகங்களை வகுக்க வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துடிப்பான இளைஞர்களைக் கொண்டு பூத் கமிட்டிகளைப் பலப்படுத்துவதுடன், நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையில் எடுத்து மக்களுக்காகப் போராட வேண்டும்.
எதிர்த்தரப்பு விழா மேடைகளில் கவனம் செலுத்தினால், நாம் வீடு வீடாகச் சென்று "திண்ணைப் பிரசாரம்" மூலம் வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும்; முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனைகளைச் சமூக வலைத்தளங்கள் வழியே இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இந்த முற்போக்கான திட்டமிடலும், தொடர் களப்பணியும் மட்டுமே அம்பாசமுத்திரத்தில் அண்ணா திமுகவின் வெற்றியைச் சாத்தியமாக்கும்.
As per intelligence reports emerging @TVKPartyHQ has already lost 50% of their 35% vote share. So, my earlier sishya @CTR_Nirmalkumar, who was spitting venom along with me, now wants to grab muslim votes by talking about the Thiruparankundram issue.
TVK expects to lose all by-election seats now after erosion of atleast 15% votes.
Muslims can believe me but not this fellow.
அட ஆச்சரியக்குறிகளே…
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர்.
தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் @AIADMKOfficial-ஐ தோற்றுவித்தவர்.
மாண்புமிகு அம்மா அவர்கள் கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா.
வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.
உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது?
அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே?
8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில்,
பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில்,
தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில்,
உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் @actorvijay ?
அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு?
ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்?
நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன?
“கோட் சூட் போட்டோஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம்.
விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க.
@TVKHQITWingOffl
அதிமுக தொண்டனாக சொல்கிறேன்…
தமிழகத்தின் “முதலமைச்சர்” விஜய் அவர்களுக்கு முதலில் நன்றி! 🙏
பல வருடங்களாக அதிமுக மார்க்கெட்டில் விலை போகாமல் கிடந்த சில “முத்துன கத்திரிக்காய்களை” தூக்கி உங்கள் தோட்டத்தில் நட்டுக் கொண்டதற்கு சிறப்பு நன்றி.
இன்னும் விலை போகாமல் நிறைய கத்திரிக்காய்கள் இருக்கின்றன. அவற்றையும் களையெடுப்போடு சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அப்போதுதான் புதிய செடிகள் முளைத்து, புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதனால் இனிமேல் உங்கள் கட்சி “தமிழக வெற்றி கழகம்” இல்லை…
“தமிழக முதியோர் இல்லம்” என்று பெயர் மாற்றம் செய்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்! 😂
முக்கிய குறிப்பு:
இன்னும் 20 மாவட்ட செயலாளர்கள் இணையப் போகிறார்களாம்.
Hint: கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறாதவர்களின் பட்டியலை ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்! 😉
#TVK #ADMK #Vijay #அதிமுக
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தீர்ந்துபோன கட்சி அல்ல… மக்கள் குறைகளை தீர்த்த கட்சி!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#என்றென்றும்_அஇஅதிமுக
"அம்மா மறைவிற்குப் பிறகு 2016-லிருந்து நான் சும்மா பெயரளவிற்குத்தான் இருந்தேன்". சொன்னது மா.செ வாக இருந்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
"அம்மாவிற்கு எப்படி விசுவாசமா இருந்தேனோ அதே மாதிரி தளபதிக்கும் விசுவாசமா இருப்பேன்". சொன்னது கடலூர் மா.செ வாக இருந்த MC சம்பத்
"2011 அதிமுக வெற்றிக்கு உதவியவர் விஜய்". சொன்னது மா செ வாக இருந்த கடம்பூர் ராஜூ
இவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பெரிய பதவிகளைப் பார்த்தவர்கள் தெரியுமா? எவ்ளோ பெரியக் கட்சிப் பொறுப்புகளில் இருந்தவர்கள் தெரியுமா..?
'சும்மா பெயரளவிற்கு' இருந்தவரை வைத்துக் கொண்டு தான் எடப்பாடியார் கட்சி நடத்தியிருக்கார். அப்பறம் எப்படி நம் கட்சி உருப்பிடும்..? இதுக்கும் இவர் ஒரு மாவட்டச் செயலாளர். இவர் கீழ் செயல்பட்ட மாவட்டம் எந்த லட்சணத்தில் செயல்பட்டிருக்கும்..?
இவரை அன்னிக்கே எடப்பாடியார் தூக்கியிருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்..? இப்படி எல்லாரையும் நீக்கிட்டு இவர் யாரைத்தான் வச்சி கட்சி நடத்தப்போறார்ன்னு ஒரே வரியில் முடித்திருப்பார்கள்.
சரி, இன்னிக்கு என்ன சொல்லுவார்கள் .? இப்படி கேவலமான செயல்பாட்டை கொண்டிருந்த இவரை நீக்கக் கூட முடியாதா இவரால், 'அம்மாவா இருந்திருந்தால்' என்று முடிப்பார்கள்.
உண்மையில் கட்சி ஜெயிக்க வேண்டும் எனத் தொண்டர்கள் நாம் தான் கத்தினோம் கதறினோம் ஓடினோம் உழைத்தோம்.
ஆனால்,
ஒரு 30% மாவட்டச் செயலாளர்கள், கட்சி அதுவா ஜெயிச்சா ஜெயிக்கட்டும், ஜெயிச்சிட்டா ஓடிப்போயி மந்திரி பதவி வாங்கிக்கலாம், நாம ஏன் நம்ம கைக்காசை செலவு பண்ணனும்ன்னு அமுக்கமாக கமுக்கமா இருந்திருக்காங்க. இதோ இந்த உடுமலை ரா கி, கடம்பூரார், சம்பத் போன்றோர் இவ்வகை.
இன்னும் ஒரு 30% மா.செக்கள் (தேர்தலுக்கு முன்பே சதித் திட்டம் தீட்டி), இந்தத் தேர்தலில் நாம் வேலை செய்யாம இருந்துட்டா, எடப்பாடியார் தோற்றுவிடுவார். உடனே மக்கள் எடப்பாடியாரை ஏற்கலன்னு சொல்லி, அந்தத் தோல்வியத் தூக்கி அவர்மேல சுமத்திட்டா, தொண்டர்கள் அவர் மீது நம்பிக்கை இழப்பார்கள்.
உடனே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றி விடலாம் எனத் தீர்க்கமான தெளிவான தேர்தலுக்கு முன்பே ஒரு குழு நீண்ட நெடியத் திட்டமிடலுடன் இந்தத் தேர்தலைச் சந்தித்து கட்சியைத் தோற்க வைத்துள்ளனர்.
தான் மட்டும் ஜெயிச்சிக்கலாம், மற்றத் தொகுதிகள், வந்தா அதுவா வரட்டும், இல்லாட்டி போவட்டும் என சதித் திட்டத்தோடே செயல்பட்டு நம் கட்சியைத் திட்டமிட்டே, ஓட்டுக்கள் கேட்கக் கூட தன் மாவட்டச் செயலளாளர் அதிகாரத்திற்குட்பட்ட தொகுதிக்குள் கூடப் போகாமல், தோற்கடித்துள்ளனர்.
வெளில போய்ட்டு வந்துச்சே ஒரு குரூப், அவர்கள் இந்த வகையினர்.
அதாவது, 60% மாவட்டச் செயலாளர்கள், நம் கட்சி உறுதியாய் ஜெயித்தே தீரணும், எடப்பாடியார் முதலமைச்சர் ஆகிய தீரணும், என்று வேலை செய்யவே இல்லை.
இதுதான் உண்மை. இந்த 60% பேரை மா.செ பதவியிலிருந்துத் தூக்கியடிக்காமல் கழகம் மீண்டும் வெல்லவே வெல்லாது. In fact, வெல்ல விடமாட்டாய்ங்க இவைங்க.
இவர்களைக் கட்சியிலிருந்தே தூக்கியிருக்க வேண்டும் தார்மீகப்படி. ஆனால் அத செஞ்சா ஒடனே, இப்படி எல்லாரையும் நீக்கிட்டு யாரை வச்சித்தான் கட்சி நடத்துவாரு எடப்பாடியார்ன்னு ஒப்பாரி வைப்பானுக இவனுகளோட அல்லக்கை முண்டங்கள்.
ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களும், தன் அதிகாரத்திற்குட்பட்ட, தொகுதியை வெல்ல வைக்க வேண்டும் வைராக்கியத்துடன், முழு மூச்சாக, 100% உழைப்பைக் கொடுத்திருந்தால், சர்வ நிச்சயமாக அண்ணாதிமுக ஆட்சியையேப் பிடித்திருக்கும்.
தலைமைக்கே தெரியாமல் தலைமைக்கு எதிராகவே நீண்ட நெடிய தெளிவான திட்டமிடலுடன் சதித்திட்டம் தீட்டி கட்சியைத் தோற்கடித்துள்ளார்கள் சதிகாரர்கள்.
ஒழிந்து போகட்டும் நாசக்காரர்கள். தொண்டர்களின் சாபமும் வயிற்றெரிச்சலும் இவர்களைச் சும்மா விடாது என்பது மட்டும் உண்மை.
இந்த மனுஷனத் தோற்கடிக்க எப்படிடா உங்களுக்கு மனசு வந்துச்சி..? இவரென்ன இன்னுமொரு 150 வருசத்துக்கா அந்தப் பதவில இருந்திடப் போறாரு..? கொஞ்ச வருடம் கூட பொறுத்துக்க முடியாத அளவுக்கு அப்படியென்னடா உங்களுக்கு பதவி அரிப்பு..?
ஒத்தப் பைசா சம்பாதிக்காம, ஒத்தப் பதவி கூட இல்லாத ஒரு கோடி தொண்டர்கள் இருக்காங்க, உங்களுக்கு லாம் பதவி இல்லாம ஒரு நிமிடம் கூட, இருக்க முடில ல்ல..?