நேற்று அன்பிற்கினிய அண்ணன் @erakittuvck அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @mkstalin அவர்களை சென்னை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடி உயரம் (125 அடி சிலை+ 81 அடி பீடம்) கொண்ட #புரட்சியாளர்_அம்பேத்கர் சிலைக்கு சென்று இன்று வீரவணக்கம் செலுத்தினேன்!
உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை இது. 'சமூகநீதி சிலை' Statue of Social Justice என்றழைக்கப்படுகிறது!
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சென்னையில் தமிழ்நாடு முன்னாள் ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி ஆற்றிய உரை...
#Thiruma_Speech
“தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்”!
வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைப் பெறாவிடில், அதைவிட அறிவிலி தனம் வேறொன்றும் இல்லை. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபராக பொறுப்பேற்ற முகமது அலி ஜின்னா அவர்கள் செய்த பெரும் மாபெரும் தவறு உருது மொழியை அந்நாட்டின் தேசிய மொழியாக அறிவித்தது. அந்த மொழி ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து வங்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்கு பாகிஸ்தான் மக்கள், முஜிபுர் ரகுமான் தலைமையில் கிளர்ச்சியில் இறங்கினார்கள். பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவானதற்கு ஒரு மொழி கொள்கையும் பிரதான காரணம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டிய நேரம் இது.
பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி ஆகியன இந்திய ஒன்றியத்தின் தனித்த அடையாளங்கள். பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசத்தில் ஒருமொழி கொள்கை தேச நலனுக்கு எதிராக அமையும் என்கிற தொலைநோக்கு சிந்தனையிலேயே புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தில் பிராந்திய மொழிகளுக்கான உரிமையை சட்டரீதியாக வழங்கினார். இங்கு அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசு துடிப்பது ஒன்றிய தத்துவத்திற்கே ஊறுவிளைவிக்கும் செயல்.
ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ள 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்' என்கிற ஆதிக்க மனோநிலையில் பயணிப்பது கூட்டாட்சி தத்துவத்தையே உடைத்துவிடும் என்கிற புரிதல் இல்லை. உணர்வில் தமிழர்களாகவும், ஒற்றுமையில் இந்தியர்களாகவும் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பயணித்துவரும் நிலையில் ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பும், தமிழ்நாட்டு மக்களின் தனித்துவ அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியை வழிய காணாமல் செய்வதும் கண்டனத்திற்குரியது.
இதனை இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், இறையாண்மையையும் கேள்விக்குள்ளாகும் செயலாகப் பார்க்க வேண்டியுள்ளது. 'எல்லோரும் சமம்' என்கிற அரசியலே இங்குத் தேவை. வறுமையும், ஏழ்மையும் ஒழிந்து எல்லோருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவதே ஒரு அரசின் கடமை. அறிவியல் வழியில் அனைத்து வளர்ச்சியையும் முன்னோக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாடு மற்றும் அனைத்து மாநிலங்களின் தனித்துவம் காக்கப்பட வேண்டும்.
இதை ஒன்றிய அரசுக்கு நாம் உரக்கச் சொல்வோம்…
“தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு”!
ஆதவ் அர்ஜுனா
விசிக துணைப்
பொதுச்செயலாளர்
நிறுவனர்- வாய்ஸ் ஆஃப் காமென்ஸ்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களாகிய நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் மாண்புமிகு மேனாள் அமைச்சர் பொன்முடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்!
மக்களவை தேர்தலில் தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களால் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியின் தலைமை தேர்தல் வியூக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை பெரும் பொறுப்பாகக் கருதுகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துத்தந்த அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்து சனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய பெரும் பொறுப்பை இந்த தேர்தல் நமக்கு வழங்கியுள்ளது.
நாம் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் தனி சின்னத்தில் வெற்றிவாகை சூடி, இத்தனை ஆண்டுகள் விசிக தேர்தல் அரசியலில் இருந்ததற்கான ஒரு அங்கீகாரமாகவும், அடுத்த கட்ட பயணத்திற்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையும்.
40 தொகுதிகளிலும் களப்பணியாற்றி நம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய அயராது உழைப்போம். நாட்டை காக்க நாற்பதை வெல்வோம்!
I consider it a great responsibility to be appointed by Thalaivar Thol.Thirumavalavan as the Chief election strategist for Chidambaram and Viluppuram constituencies for the upcoming Lok Sabha elections. This election has given us the utmost responsibility to protect the constitution framed by Babasaheb Ambedkar and once again restore democracy.
Let us emerge victorious in our own symbol in both the constituencies that we are contesting, make this victory a proof of VCK's hard work over the years and sow the seeds for the next leap in our journey.
Together, let us relentlessly strive for our INDIA candidate's victory in each of the 40 constituencies. Let's win forty to protect the country!
எனது அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனை முடிந்தது. எத்தனைத் தடைகள் வந்தாலும் எனது பணிகள் தொடரும்.
The investigation by the enforcement department has concluded. Regardless of any obstacles that may arise, my work will persist.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக என்னைத் தேர்வு செய்த எழுச்சித்தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்!
இதை ஒரு பொறுப்பாகவும், கடமையாகவும் காண்கிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் விட்டுச்சென்ற பணியை, அவர்வழியில் தொடரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொடங்கும் இப்பயணம் மக்கள் சேவை, சமூக முன்னேற்றம் நோக்கியே இருக்கும் என்று உறுதியாக இருக்கிறேன்.
என்றுமே எனது அண்ணனாகவும், தலைவராகவும் இருந்து என்னை வழிநடத்தும் தலைவர் அவர்களுக்கும், பொதுச் செயலாளர்கள் திரு. து.ரவிக்குமார் அவர்களுக்கும், திரு. சிந்தனைசெல்வன் அவர்களுக்கும், கட்சியின் உயர்நிலைக் குழுவிற்கும் எனது மரியாதை கலந்த நன்றிகள்.
இன்றும் ஏழ்மை மற்றும் ஒருவரின் பிறப்பு போன்ற காரணிகளால் உயர்வு-தாழ்வு பார்க்கும் நம் சமூகத்தின் பகுதிகளைச் சீரமைக்கும் இந்தப் பயணத்தில் இளம் தலைமுறையோடு இணைகிறேன்!
@thirumaofficial #VCK
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற அகில இந்திய #காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சமூகத் துறை தலைவர் திரு.ராஜேஷ்லிலோதியா அவர்களின் மனைவி திருமதி.மது ராஜேஷ்லிலோதியா அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் இன்று ஆற்றிய உரை...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கும் துரை வைகோ உள்ளிட்ட #மதிமுக பொறுப்பாளர்கள் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர்.
#RSSRavi