மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைப் பரப்புவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் கேபிளைத் திருடி வளர்ந்த சன் தொலைக்காட்சி.
கேந்திர வித்தியாலயா பள்ளிகள் அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம் பெறும்போது, அவர்கள் குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவே. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதால், வெவ்வேறு மொழிகள் அங்கு கற்றுக் கொடுக்கப்படுவது இயல்பு. அங்கு பயிலும் மாணவர்களின் விருப்ப மொழிக்கேற்ப, தமிழ் உட்பட, அனைத்து மொழிகளுக்கும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். இத்தனை ஆண்டு காலமாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கேந்திர வித்தியாலயா பள்ளியில் இடம் கோரி பரிந்துரைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களே இல்லை என்று பொய்யான செய்தி வெளியிட்டிருந்த கேபிள் திருட்டு சன் தொலைக்காட்சி, தற்போது, 31 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்ற உண்மை வெளிவந்ததும், அவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், சுமார் 10,000 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சன் தொலைக்காட்சியின் கூற்றின்படி, அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் இல்லையா? அவர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையா? திமுக கூறும் தமிழகத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில், இவர்கள் இல்லையா?
தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வகுப்பறையில் தமிழில் பேசினாலே அபராதம் விதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் போலியான தமிழார்வத்தைக் காட்டி, யாரை ஏமாற்ற முயல்கிறது இந்தத் திருட்டு கும்பல்?
@teakkadai1 உண்மை தான்...
தனி நபரான உதயநிதியை அவரது அம்மாவின் வலுகட்டாயமாக திணித்தன் விளைவே இன்று திமுக மூழ்கி கொண்டிருக்கிறது.
கனிமொழி வர வேண்டிய இடத்தில் கள்ளி செடிகள் வளர்தால் என்னவாகும்.!
கிறிஸ்துமஸ் பத்தி நேத்து ஒரு செக்யூலரிஸ போஸ்ட் போட, அது ஷேர் ஆக..... என்னோட இன்பாக்ஸ்ல ஊருப்பட்ட மெசேஜ்.
போடா சங்கி, இப்படி மதவாதம் பேசாத, ஆரியன்தானே நீ, போடா பாப்பான் 😀😀 இப்படி மெசேஜ்கள்.
நான் என்ன சொல்றேன்.... நீங்க எங்க வீட்டுக்கு வந்து பிரேயர் பண்ணுங்க, தொழுகை நடத்துங்க, பிளம் கேக் குடுங்க, ஒயின் குடுங்க, நோம்பு கஞ்சி குடுங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்க கூட சேந்து நல்லா சாமி கும்பிட்டு, பிரசாதாம் சாப்பிட நான் ரெடி.... அதே மாதிரி நானும் உங்க வீட்டுக்கு வந்து ஒரு பஜனை வச்சு, ஐயப்ப சாமிக்கு ஒரு அன்னதான பூஜை வச்சு, சாமிக்கு படச்ச பிரசாதம், பழனி பஞ்சாமிர்தம் எல்லாம் தர்றேன் நீங்களும் சாப்பிடுங்க.
எல்லோரும் ஜாதி, மதம் கடந்து ஒன்னா இருக்கலாம், எல்லோரும் செக்யூலரிஸம் ஃபாலோ பண்ணலாம்ன்னு சொல்றேன்.
அது எல்லாம் முடியாது, உங்க சாமி எல்லாம் நாங்க கும்பிட மாட்டோம், சாமிக்கு படச்சதை நாங்க கைல கூட தொடமாட்டோம்ன்னு சொல்ற நீங்க மதவாதியா இல்லை நானா ?
எந்த மத வேறுபாடும் இல்லாம எல்லோரும் ஒன்னா இருக்கலாம்ன்னு சொல்ற நான் செக்யூலரிஸட்டா இல்ல நீங்களா ?
டேய் பரமா டெம்ப்ளேட்தான்டா உங்களுக்கு, போ போய் படி போ.
போஸ்ட் இதோ 👇👇👇👇
https://t.co/5CSXqa3Cal
இவன் வெறும் மனித பிறவியல்ல,தேஜோமயக் கவிஞன்
காலத்தின் தேவைக்காக பாரத பூமிக்குக் கிடைத்த அவதாரப் புருஷன்
பாரத தாயின் ஆன்மாவைத் தொட்டு,அடித்தள மக்களின் விடுதலை வேட்கையைத் தூண்டிய ஒரு தீவிர ஆன்மீகக் கனல்.
தொலைநோக்கு சிந்தனையுடன்,அறிவியலையும்,சமூக சீர்திருத்தத்தையும் சொன்னவன்.
மது பழக்கத்தால் உடலில் ஏற்படும் நன்மைகள்..!
இரண்டு நிமிடம் செலவிட்டு மதுப்பழக்கத்தால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் உடல் நலத்தை கருத்தில் கொள்ளுங்கள்.
மதுப்பானத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் உடலில் பல முக்கிய சத்துகள் குறைவதற்கு காரணமாகிறது.
இதை சுலபமாகப் புரிந்துகொள்ள கீழே முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
1. உடல் சத்துகளை உறிஞ்சும் திறன் குறைவு
• மதுபானம் குடலின் சுவர்களை பாதிக்கிறது.
• அதன் காரணமாக விடமின்கள், கனிமச்சத்துகள், புரதம் போன்றவை சரியாக உடலால் உறிஞ்சப்படவில்லை.
• குறிப்பாக Vitamin B1, B6, B12, Folate மிகவும் குறைவாகிறது.
2. கல்லீரல் (Liver) சத்துகள் சேமிக்கும் திறன் குறைவு
• கல்லீரல் (liver) சத்துகளை சேமித்து உடலுக்கு அனுப்பும் பணி செய்கிறது.
• அதிக மதுபானம் காலேயை பலவீனப்படுத்தி,
• சத்துகள் சேமிக்க முடியாமை
• சத்துகளை மாற்றி பயன்படுத்த இயலாமை
ஆகிய பிரச்சனைகளை உருவாக்குகிறது.
3. உணவு விருப்பு குறைவு
• அதிகமாக குடிப்பவர்கள் பொதுவாக சரியான உணவு உண்ணாமல் இருப்பார்கள்.
• இது தானாகவே சத்து குறைவிற்கு வழிவகுக்கிறது.
4. முக்கிய சத்துகள் குறைவதால் ஏற்படும் விளைவுகள்
(1) Vitamin B1 (Thiamine) குறைவு
• பலவீனம்
• நரம்பு கோளாறு
• நினைவுத்திறன் குறைவு
• Wernicke–Korsakoff Syndrome போன்ற ஆபத்தானநிலை
(2) புரத குறைவு
• உடல் எடை குறைவு
• தசை சுருங்குதல்
• நோய் எதிர்ப்பு திறன் குறைவு
(3) இரும்புச்சத்து (Iron) குறைவு
• இரத்தசோகை
• சோர்வு, தலைச்சுற்றல்
(4) கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் குறைவு
• தசை வலி
• இதய துடிப்பு மாற்றம்
• எலும்பு பலவீனம்
5. நீண்ட கால விளைவுகள்
• குடல் பிரச்சனைகள் (gastritis)
• கல்லீரல் நோய்கள் (Fatty liver, Cirrhosis)
• நோய் எதிர்ப்பு திறன் குறைவு
• மனநிலை பாதிப்பு
6. தடுக்கும் வழிகள்
• மதுபானத்தை கட்டுப்படுத்துதல் / நிறுத்துதல்
• சத்தான உணவு (முக்கியமாக புரதம், காய்கறி, பழம்)
• B-complex, folic acid, multi-vitamin supplements (மருத்துவர் ஆலோசனையுடன்)
• கல்லீரல் செயல்பாட்டை பரிசோதனை செய்வது
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பொழுது ஏற்படும் விபத்துகளால் தங்களுக்கும் சாலையில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதையும் கருத்ததில் கொள்ள வேண்டும்.
உடல் நலனையும் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு உடல் நலத்தை பேணிக்காப்பீர்.
#SayNoToAlcohol #Liquor #Injuries #HealthyLiving
இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.
நேற்று உச்ச நீதி மன்றத்தில்
ராதாபுரத்தில் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக தமிழக அரசுக்கு அபராதம்.
நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில்
தமிழக அரசின் PRO பணிகளுக்கு முறைகேடான முறையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆட்களை நியமிக்க முயல்வதற்கு எதிராக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர் அந்த நியமனங்களை செய்ய மாட்டோம் என வாக்குறுதி கொடுத்ததன் பேரில் அவ்வழக்கு முடித்து வைப்பு.
இந்த செய்தியையெல்லாம் பெரிய அளவில் எந்த ஊடகங்களிலும் பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஆனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத இந்த செய்தியை நேற்றும் இன்றும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் இது முக்கியம்மான செய்தி என நம்பும் மக்கள் உள்ளனர் இங்கே.
சிறப்பான தரமான சம்பவம் பண்ணி இருக்காரு டைரக்டர்.
செகண்ட் ஹாஃப் லாஜிக்லாம் பெருசா எடுத்துக்காம இந்த டீமோட தைரியத்துக்காகவே படத்தைப் பார்க்கலாம்.
ராபின்ஹூட் கதைன்னாலும் அதிகார மையங்களை வச்சு செஞ்சிருக்காங்க. ஸ்டேட் சென்ட்ரல் இரண்டையும் உரிச்சு விட்ருக்காரு டைரக்டர். உணர்ச்சி வசப்பட்ட போது வெளிவரும் அமைச்சரின் தாய்மொழி ஹைலைட். எல்லா கேரக்டர்களிலும் பார்த்த அரசியல் முகங்கள் தெரிவது இன்னொரு ப்ளஸ்.
படத்தின் தலைப்பு ‘நந்தன்’ என்றபோது, எங்கள் குழுவிலேயே எதிர்ப்பு. பலரும் அந்தத் தலைப்பு வேண்டாமெனச் சொன்னார்கள். பழைய தலைப்பாகத் தெரிவதாகவும், பாலா சார் ஏற்கெனவே ‘நந்தா’ எனத் தலைப்பு வைத்துவிட்டதாகவும் சொன்னார்கள். ‘நந்தன்’ தலைப்பை அழுத்தமாக வலியுறுத்திய ஒரே நபர் எழுத்தாளர் வெய்யில்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த புரட்சிக்கவிதாசன் (முன்பு தலித் மக்களுக்காகத் தனி இயக்கம் நடத்தியவர். இப்போது பா.ஜ.க.வில் இருக்கிறார்) அண்ணனிடம் பேசியபோது, தலைப்பு குறித்துக் கேட்டார். ‘நந்தன்’ எனச் சொன்னேன். சட்டென யோசித்தவர், “இந்தத் தலைப்பு வேண்டாமே…” என்றார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கதைன்னு சொல்றீங்க. எங்க சமூகத்தில்கூட பெரும்பாலும் யாரும் ‘நந்தன்’னு பெயர் வைக்க மாட்டாங்க. அப்படியே வைத்தாலும் நந்தகோபால், நந்தகுமார் என இன்னொரு பெயரோடு சேர்த்துத்தான் வைப்பார்கள். ‘நந்தன்’ நெருப்பில் விழுந்து இறந்ததாலோ என்னவோ… அந்தப் பெயரை வைக்கத் தயங்குவாங்க. அதனால், வேறு தலைப்பு வையுங்கள்… அதுதான் படத்தை வெளிவர வைக்கும்…” என்றார். அப்போது தீர்க்கமாக முடிவெடுத்தேன்… படத்திற்கு ‘நந்தன்’தான் தலைப்பு என்று.
படத்தின் பிசினஸ் பேசப்பட்ட நேரம்… சிலர் படத்தைப் பார்த்தார்கள். “எல்லாம் சரி… ‘நந்தன்’ டைட்டிலை மட்டும் மாற்றுங்கள்” என்றார்கள். “படத்தில் சில காட்சிகள் மட்டுமே வருகிற துணை கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘நந்தன்’. படத்தில் கதாநாயகனை மையப்படுத்தி தலைப்பு வைப்பதுதான் வழக்கம். சசிகுமார் சார் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார்?” என்றார்கள்.
படத்தின் ஓ.டி.டி மற்றும் ஸாட்டிலைட் விஷயங்களுக்கான பேச்சுவார்த்தையில், ‘நந்தன் தலைப்பை மாற்றி ‘ஜெயஹே’ என வைத்தால் இந்திய அளவில் கவனத்தைத் திருப்பும்’ என்றார்கள்.
‘நந்தன்’ தலைப்பில் நான் மிக உறுதியாக நின்றேன். நூற்றாண்டுகள் கடந்தும் தகிக்கிற தலைப்பு அது. குறிப்பாக, தம்பி யுவராஜ் ‘நந்தன்’ தலைப்பையும் வடிவமைப்பையும் செய்த விதம் என்னை இன்னும் உறுதியாக்கியது.
இரவு ஒரு மணிக்கு க்யூப்பில் படத்தைப் பார்க்கப் பறந்தோடி வந்தேன். படத்தின் எல்லா காட்சிகளும் சிறப்பாக இருந்த நிலையில், டைட்டில் மட்டும் ஓப்பனாகவில்லை. ‘நந்தன்’ என்கிற எழுத்துகளே திரையில் தெரியவில்லை. டி.ஐ.யில் செக் பண்ணினால், ‘இங்கே டைட்டில் தெரியுதே…’ என்றார்கள். மறுபடி க்யூப்புக்கு வந்தால், அங்கே தலைப்பு ஓபனாகவில்லை. அங்கேயும் இங்கேயுமாகப் பறக்க, தியேட்டர்களுக்கு கன்டன்ட் அனுப்ப தாமதமானது. பல தரப்பிலிருந்தும் நெருக்கடி. முதலில் கன்டன்ட் அனுப்பிவிட்டு பிறகு ஒவ்வொரு தியேட்டருக்கும் தனியே டைட்டிலை சரி செய்து அனுப்ப எவ்வளவு செலவாகும் எனக் கேட்டேன். தோராயமாக இரண்டரை லட்சமாகும் என்றார்கள். எங்கிருந்து தைரியம் வந்ததோ… ‘நந்தன்’ என்கிற தலைப்பு இல்லாமலே அனைத்து தியேட்டர்களுக்கும் கன்டன்ட் அனுப்பச் சொல்லிவிட்டேன். அடுத்த சில மணி நேரங்களில் ‘நந்தன்’ டைட்டில் க்யூப்பில் சரியானது. பிறகு அனைத்து தியேட்டர்களுக்கும் திருத்தம் அனுப்பப்பட்டது. அப்படியும் எனக்கு திக்கென்றுதான் இருந்தது. அடுத்த நாள் செப்டம்பர் 20-ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் ‘நந்தன்’ டைட்டில் தெரிகிறதா என விசாரித்து உறுதி செய்த பிறகே உயிர் வந்தது.
‘நந்தன்’ வெற்றிகரமாக வெளியாகி, ஒரு வருடமாகிறது. இன்றைக்கும் ‘நந்தன்’ குறித்த விவாதம், விமர்சனம், விழா என ஏதோவொன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஓர் எளிய படைப்பை இந்தளவுக்குப் பேசுபொருளாக்கி, நிஜ நந்தன்களாக வாழும் அத்தனை பேருக்குமான விடிவாக, தீர்வாக மாற்றுகிற எல்லோருக்கும் நன்றி.
‘நந்தன்’ நன்றிக்குரியவன்!
#OneYearofNandhan
#nandhan #நந்தன்
இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,
140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் @narendramodi அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிரேன் . @PMOIndia@DrLMurugan https://t.co/7d6ctcXxcD
என்னை எத்தனை போஸ்டில் நீங்கள் டேக் செய்தாலும் நான் தெரு நாய்களின் வாழ்வுரிமைக்காக பேசுவேன். அவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசை கேள்வி கேட்க திராணியில்லாமல் இங்கு வந்து புலம்பி அழுதுகொண்டிருப்போர் யாரும் புனிதர்களல்ல. உங்கள் பொதுநலன் சற்று அரசுபக்கம் திரும்பட்டும், பிராடு NGOக்களுடன் சேர்ந்து அரசு விலங்குநலத்துறை சுருட்டிய பணத்தில் 20% நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க அல்லது காப்பகத்தில் வைத்து பாதுகாக்கச் செய்திருந்தால் கூட இந்த பிரச்சனை இவ்வளவு பூதாகாரமாக வெடித்திருக்காது. இப்பொழுது அந்த ஊழலை திசைத்திருப்ப ஏவிவிடப்பட்ட நவீன நாய் வெறுப்பாளர்கள்தான் இந்த ஓநாய்க்கள். உங்களுக்கு பதில் சொல்லவேண்டியது சக பொதுமக்களல்ல. அரசு. அங்கு போய் ஊளையிடுங்கள். ஒவ்வொரு தடுப்பூசியிலும் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனிலும் பொய்யான கணக்கு காண்பித்து, பல முனிசிபாலிட்டிக்களிலும் பஞ்சாயத்துகளிலும் தனக்கு வேண்டிய NGOக்களுக்கு காண்டிராக்ட் கொடுத்து, விலங்கு நல வாரியம் என்ற பெயரில் வருடத்திற்கு 20 கோடி ஒதுக்கி என்ன செய்தது? உங்கள் வெறுப்பு இன்று உங்கள் தெருவில் இருக்கும் நாய்கள் மேல் பாய ஆரம்பித்திருக்கிறது. ஆங்காங்கே அவை அடித்துக்கொல்லப்படுகின்றன. பாவம், அவர்களுக்கு ஓட்டு இல்லை. இருந்திருந்தால் இன்று அவற்றில் ஒன்றை மந்திரியாக்கி நாய்கள் மேம்பாட்டு சங்கம் ஆரம்பித்து அவர்களுக்கும் பீரும் பிரியாணியும் போடப்பட்டிருக்கும்.
சுதந்திரப் போராட்டத்தில், இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் கடும் சித்திரவதைக்குள்ளாகியும், தனது சுதந்திர வேட்கையை கைவிடாத, செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று
சிறந்த வழக்கறிஞராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தவர். தேச விடுதலைக்காக, தனது உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்து, சுதேசி வேள்வி ஊட்டியவர். மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக விளங்கியவர். புரட்சி மனப்பான்மையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாகச் செயல்படும் திறனும் பெற்றிருந்தவர்.
ஆங்கிலேய கப்பல் போக்குவரத்துக்கு மாற்றாக, சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவி, கப்பலோட்டிய தமிழர் என்ற புகழ் பெற்ற ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.