தொலைந்தது குப்பையாக இருந்தாலும்,
கொட்டிய இடத்தில் இருந்தால் அள்ளிவிடலாம்.
ஆனால், கெட்டுப்போன இடத்தில் இருந்தால்,
விலகிச் செல்வதுதான் அறிவு.
— Hishalee ✍🏻
எல்லா மழைத்துளியும் இனிப்பதுபோல்
எல்லோரின் மனதிலும் நம்மால் இனிமையை விதைக்க முடியாது...
சில தருணங்களில், கடலின் உப்பைப் போல நம் வார்த்தைகளும் கசக்கலாம்...
ஆனால் உண்மையும் நேர்மையும் என்றும் அதன் மதிப்பை இழப்பதில்லை."..
- Hishalee ✍🏻
ஒருவர் நம்மிடம் சிரித்துப் பேசி பழகுகிறார் என்பதற்காக, அவர் நம் மீது அக்கறையுடன் இருக்கிறார் என்று அர்த்தமில்லை.
அக்கறை என்ற அரிதாரம் பூசி நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் காலம் உணர்த்திவிடும்...
Hishalee ✍🏻
ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் அவர்களிடமே உள்ளது.
வாழ்க்கைப் பயணத்தில் சில நேரங்களில் துன்பம் என்னும் நிறுத்தமும் வரும்
சிக்கல் என்னும் நிறுத்தமும் வரும்.
ஆனால் இறுதியில் நம்மை வரவேற்பது இன்பம் என்றால், அந்தப் பயணம் அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் மாறிவிடும்....
Hishalee ✍🏻