Responsible Citizen with ethics & integrity.
Rationalist, Centrist & Neo Polity Culturist.
No Religion & No caste.
சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி
My Remaining Life is for People & will stay in Politics.
-- Leader #KamalHaasan
My Remaining Life is for Leader & will stay in #MNM party.
-- Followers #MakkalNeedhiMaiam
Together, we will face the challenges and bring the Change in Politics!!
#மக்கள்நீதிமய்யம்#கமல்ஹாசன்
காவிரியின் கதை..
- செந்தில் ஆறுமுகம்
பகுதி 1:
1892 மற்றும் 1924 ஒப்பந்தம்:
FLASH BACK : 136 ஆண்டுகளுக்கு முன்பு...
1890களில் மைசூர் சமஸ்தான அரசு தங்களுடைய பாசனப் பகுதிகளை விரிவாக்க சில முயற்சிகள் எடுத்தபோது அது தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு, பாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை மாகாணம் எதிர்ப்பு தெரிவித்தது. இரு அரசுகளுக்கும் இடையே இரண்டாண்டு பேச்சுவார்த்தை நடந்தது. 1892ல் ஒரு ஒப்பந்தம் உருவானது. இதன்படி மைசூர் அரசு, பாசனத்தை விரிவாக்க விரும்பினால் அதற்கு சென்னை மாகாண அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும். இந்த விரிவாக்கத்தால், தங்கள் பகுதிக்குப் பாதிப்பு இல்லையெனில் சென்னை அரசு அனுமதி தரவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.
20 ஆண்டுகள் உருண்டோடின. 1910 வாக்கில் மைசூர் மன்னரான கிருஷ்ணராஜ உடையார் கண்ணம்பாடி என்ற கிராமத்தில் ஒரு அணை(கிருஷ்ணராஜ சாகர் - KRS Dam) கட்டத் திட்டமிட்டார்.சமஸ்தான திவானும், புகழ்பெற்ற பொறியாளரு மான விஸ்வேஸ்வரய்யா இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். இதற்கு சென்னை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 1892 ஒப்பந்த விதிமுறைகளின் படி இரு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை 8 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. 1924 ஒப்பந்தம் உருவானது. இதன் அடிப்படையில், கண்ணம்பாடி அணைகட்ட அனுமதி வழங்குவது என்றும்; அதேபோல் சேலம் அருகே மேட்டூர் அணை கட்ட சென்னை அரசுக்கு அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், இரு அரசுகளும் தங்களுடைய பாசனப்பரப்பை அப்போதைய நிலையிலிருந்து அதிகரிக்கக் கூடாது என்றும் முடிவானது. ( அப்போது மைசூர் அரசின் பாசனப் பரப்பு 1,10,000 ஏக்கர். சென்னை அரசின் பாசனப் பரப்பு 3,01,000 ஏக்கர்) இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்றும், அதற்குப் பிறகு அப்போதைய நிலவரங்கள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் ஒப்பந்தத்தை மறுவரையறை செய்துகொள்ளலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது.
What Bro it's Very Wrong Bro @TVKVijayHQ 🫢💯.
சட்டசபை நேரலை மக்கள் பார்ப்பதற்காகத் தான், ஆட்சியாளர்கள் விரும்பியதை மட்டும் காட்டுவதற்கல்ல.
பிடிக்காத விவாதம் வந்தவுடன் Live Telecast-ஐ Cut செய்வது ஜனநாயகமா?
Current Cut பண்ணுற மாதிரி இப்போ Live-க்கும் Cut போடுற நிலை வந்துவிட்டது.
இதெல்லாம் ஒரு பொழப்பா? இதெல்லாம் ஒரு அரசாங்கமா?
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#TVKVijayFails #CMVijayFails #TVK
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலுடன்,
பெரம்பூர் மநீம மாவட்டத்தில் கோடைக்கால தாகம் தீர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் திரு. V. உதயகுமார் @udayakumarmnm அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவிற்கு,
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் @sentharu அவர்களும், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்களும் தலைமை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் மாவட்டச் செயலாளர்கள் (இராயபுரம்) திரு.மாறன், (R.K. நகர்) திரு. பூ.கோவிந்தராஜ்,
மாவட்ட அமைப்பாளர்கள் திரு. இராஜபுத்திரன் (சமூக ஊடக அணி), திரு. ரகு (தொழிலாளர் அணி),
திருமதி. அம்ருதா மோகனா (விவசாய அணி), திரு. T.R.சதிஷ் (நற்பணி அணி),
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. K.T.வெங்கடேசன் (திரு.வி.நகர்), மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், கொளத்தூர் நகரச் செயலாளர் திரு.ராஜேந்திரன், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ் ஆகியோருடன் பெரம்பூர் - திரு.வி.க நகர் மநீம மாவட்டங்களின் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
🎬 Lights, camera, diplomacy! “Thrilled to meet acclaimed actor and filmmaker @ikamalhaasan!” — Canada’s Minister-Counsellor Geoffrey Dean discussed unlocking new opportunities in creative collaboration and co-productions with #KamalHaasan in #Chennai.
"பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"?
என்ற மகாகவி பாரதியாரின் வரிகள், மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசனின் அரசியல் பயணமும் விடாமுயற்சியும் சவால்களையும் விமர்சனங்களையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் முன்னேறும் மனநிலையை பிரதிபலிக்கின்றன. இந்த வரிகளை சமகால அரசியல் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் அரசியல் பயணம் நினைவுக்கு வருகிறது.
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக உயர்ந்தவர் கமல் ஹாசன். கலை, தொழில்நுட்பம், சமூக சிந்தனை, மனிதநேயம் ஆகியவற்றை தனது படைப்புகளில் தொடர்ந்து முன்னிறுத்திய அவர், பொதுவாழ்வில் நேரடியாக பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்குள் நுழைந்தார்.
அரசியலுக்குள் நுழைந்த தருணத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
"சினிமா பிரபலங்களுக்கு அரசியலில் இடமில்லை"
"இது நீண்ட நாள் நீடிக்காது"
"இது ஒரு தற்காலிக முயற்சி"
என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அந்த விமர்சனங்களின் மத்தியில் கூட தனது கொள்கைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து முன்வைத்து வந்தார் திரு. கமல்ஹாசன்.
அரசியல் என்பது ஒரு தேர்தல் வெற்றியால் மட்டும் அளவிடப்படும் பயணம் அல்ல. அது ஒரு நீண்டகால சமூகப் பங்களிப்பு. அந்த வகையில், கமல்ஹாசன் தனது அரசியல் வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அவற்றை கடந்து முன்னேற முயன்றுள்ளார். தேர்தல் தோல்விகள், கடுமையான விமர்சனங்கள், அரசியல் எதிர்ப்புகள் இவை அனைத்தும் ஒரு பொதுவாழ்வு மனிதரின் பயணத்தில் இயல்பானவை. ஆனால் அவற்றுக்குப் பிறகும் அரசியல் அரங்கில் தொடர்ந்து செயல்படுவது ஒரு உறுதியான மனநிலையைக் காட்டுகிறது.
அவரது அரசியல் உரைகளில் அடிக்கடி இடம்பெறும் கருத்துக்கள் நிர்வாகத் திறன், ஊழல் எதிர்ப்பு, கல்வி, அறிவியல் சிந்தனை, குடிமக்கள் பங்கேற்பு போன்றவற்றை மையமாகக் கொண்டவை. சமூக மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியது அல்ல, நீண்டகால முயற்சியும் பொறுமையும் தேவைப்படுகின்றன என்ற எண்ணமே அவரது அணுகுமுறையில் வெளிப்படுகிறது.
பலர் அரசியலுக்கு வந்து சில காலத்திலேயே மறைந்து போகிறார்கள். சிலர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் எந்தத் துறையிலாக இருந்தாலும், ஒருவர் தனது நம்பிக்கைகளோடு தொடர்ந்து பயணிப்பது தனித்துவமானது. கமல்ஹாசனின் அரசியல் பயணத்தை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் குறிப்பிடுவது இதைத்தான் சவால்கள் இருந்தபோதிலும் அவர் அரசியல் களத்தை விட்டு விலகாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்பதையே.
பாரதியாரின் அந்த வரிகள் போல, "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்ற கேள்வி வெறும் எதிர்ப்பாளர்களுக்கான பதில் மட்டுமல்ல அது ஒரு மனநிலையின் வெளிப்பாடு. விமர்சனங்கள் இருந்தாலும், தடைகள் இருந்தாலும், முயற்சியை கைவிடாமல் முன்னேற வேண்டும் என்ற உறுதியின் குரல் அது.
திரு. கமல்ஹாசனின் அரசியல் பயணத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதில் காணப்படும் முக்கிய அம்சம் விடாமுயற்சிதான். வெற்றி அல்லது தோல்வி என்பது காலம் தீர்மானிக்கும் விஷயம். ஆனால் ஒரு எண்ணத்திற்காக தொடர்ந்து களத்தில் நிற்பது, தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்பது, சமூக மாற்றம் குறித்து விவாதங்களை உருவாக்குவது இவை அனைத்தும் பொதுவாழ்வில் ஒரு முக்கிய பங்களிப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.
அரசியல் என்பது நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல அது ஒரு நீண்ட தூரப் பயணம். அந்தப் பயணத்தில் வெற்றிகளும் இருக்கும், தோல்விகளும் இருக்கும். ஆனால் முக்கியமானது, ஒருவர் எத்தனை முறை விழுந்தார் என்பது அல்ல, எத்தனை முறை எழுந்து நின்றார் என்பதுதான்.
"பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"? என்ற வரிகள், ஒரு மனிதன் தன் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் நிற்கும் மனஉறுதியின் அடையாளம். அந்த மனஉறுதியை அரசியல் பயணத்தின் வழியாக வெளிப்படுத்த முயன்றவர்களில் கமல்ஹாசனும் ஒருவர் என பலர் கருதுகின்றனர். காலம் மாறலாம், அரசியல் சூழல்கள் மாறலாம், ஆனால் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் முன்னேறும் பயணங்கள் தான் வரலாற்றில் நினைவுகூரப்படுகின்றன.
நன்றி!
#KamalHaasan #MakkalNeedhiMaiam #Nevergiveup #MaiamNews
முதல் வாரம்
மின்தடை வதந்திங்க
2வது வாரம்
திமுக ஆட்கள் பன்றாங்க
3வது வாரம்
Hard Disk திருடிட்டாங்க
4வது வாரம்
பியூஸ் கேரர் எடுத்து போய்டுறாங்க
அருமையான மாற்றம் 👌👌
கடைசி வரை Current கிடையாது முடிஞ்சதை பண்ணிக்கோ என்பதே சுத்தி சுத்தி சொல்றாங்க
மாற்றம் கொடுக்க வந்தவங்க மக்களை மதிக்காம மத்த கட்சிக்காரங்களை சேத்திட்டு இருக்காங்க. அத துளி கூட கண்டுக்காத கட்சித் தலைவரா விஜய் இருக்காரு. இது ஒரு பக்கம் இருக்க, கட்சியே அழிஞ்சாலும் பரவாயில்லைனு மக்கள் பக்கம் நிக்குறாரு தலைவர் #KamalHaasan .
அப்போ யார் மக்காள் பக்கம்?
Four years of Vikram ❤️
A relentless tale of sacrifice, justice, and a man who became a force beyond fear. Packed with gripping action, unforgettable moments, and a universe that changed the landscape of Indian cinema, this blockbuster continues to leave its mark.
“என்னை வெறுக்கலாம்... ஆனால் தவிர்க்க முடியாது!”
திரையுலகின் தவிர்க்க முடியாத அடையாளம் திரு. கமல்ஹாசன்
“You can hate me, but you can't avoid me”
இந்த வரி ஒரு மனிதரின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, பல தசாப்தங்களாக தனது திறமை, உழைப்பு மற்றும் புதுமையால் ஒரு துறையை மாற்றிய கலைஞரின் பயணத்தையும் பிரதிபலிக்கிறது. அந்த மனிதர் தான் இந்திய திரையுலகின் பெருமை, உலக அரங்கில் தமிழின் முகம், கலைஞர்களின் கலைஞர் டாக்டர் கமல்ஹாசன்.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் கமல்ஹாசனைத் தவிர்த்து எந்த அத்தியாயத்தையும் முழுமையாக எழுத முடியாது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (RKFI), திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன ஆசிரியர், சமூக சிந்நதனையாளர் என பல பரிமாணங்களைக் கொண்ட கலை ஆளுமையாக அவர் திகழ்கிறார்.
1959 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது பயணம், காலப்போக்கில் இந்திய சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக வளர்ந்தது. கதாநாயகன் என்ற எல்லைக்குள் தன்னை அடைத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு படத்திலும் புதிய சவால்களைத் தேடி சென்றார். கதாபாத்திரங்களுக்காக உடல், குரல், தோற்றம் அனைத்தையும் மாற்றிக் கொண்டார். நடிப்பு என்பது வசனம் பேசுவது மட்டுமல்ல அந்த மனிதராக வாழ்வது என்பதை நிரூபித்தார்.
நாயகன்
அபூர்வ சகோதரர்கள்
குணா
தேவர் மகன்
மகாநதி
குருதிப்புனல்
இந்தியன்
ஹே ராம்
விருமாண்டி
தசாவதாரம்
விக்ரம்
போன்ற படைப்புகள் அவரது திறமையின் வெவ்வேறு முகங்களை உலகிற்கு காட்டின. ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சிந்திக்கும் படைப்பாளியாகவும் அவர் தனித்துவம் பெற்றார்.
சினிமா தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கமல்ஹாசனின் பங்களிப்பு முக்கியமானது. மேக்கப் கலை, ஒலிப்பதிவு, திரைக்கதை அமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு போன்ற பல துறைகளில் புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தினார். தமிழ் சினிமா உலகத் தரத்தில் பேசப்பட வேண்டும் என்ற அவரது கனவு, பல படைப்புகளில் வெளிப்பட்டுள்ளது.
தேசிய விருதுகள், சர்வதேச அங்கீகாரங்கள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல உயரிய விருதுகள் அவரை வந்தடைந்துள்ளன. ஆனால் அவற்றை விட பெரிய அங்கீகாரம், தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் நிலையான இடம்தான்.
கமல்ஹாசனின் பயணத்தை சிறப்பாக்குவது அவரது வெற்றிகள் மட்டுமல்ல. தோல்விகளைக் கூட கற்றலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் தான். பலருக்கு தோல்வி ஒரு முடிவாக இருக்கலாம், ஆனால் கமல்ஹாசனுக்கு அது அடுத்த முயற்சிக்கான தொடக்கமாக இருந்தது. அதனால்தான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இன்னும் பேசப்படுகிறார், கொண்டாடப்படுகிறார்.
இன்று நடிகராக வேண்டும் என்று கனவு காணும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர் ஒரு பாடப்புத்தகம். இயக்குநராக வேண்டும் என்று விரும்பும் பலருக்கு அவர் ஒரு பல்கலைக்கழகம். சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், கலை மற்றும் சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்.
அவரது கருத்துகளை அனைவரும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. சிலர் ஆதரிக்கலாம், சிலர் எதிர்க்கலாம். ஆனால் அவரது பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் சினிமா, இந்திய சினிமா, நடிப்பு கலை எதைப் பற்றிப் பேசினாலும் கமல்ஹாசனை தவிர்த்து செல்ல முடியாது.
அதனால்தான்
“என்னை வெறுக்கலாம்... ஆனால் தவிர்க்க முடியாது!” “You can hate me, but you can't avoid me”
என்ற வரி அவரது வாழ்க்கைப் பயணத்திற்கு மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது.
ஒரு நடிகராக அவர் தவிர்க்க முடியாதவர். ஒரு படைப்பாளியாக அவர் தவிர்க்க முடியாதவர். ஒரு சினிமா சிந்தனையாளராக அவர் தவிர்க்க முடியாதவர். ஒரு தலைமுறையின் ஊக்கமாக அவர் தவிர்க்க முடியாதவர்.
காலங்கள் மாறலாம். தொழில்நுட்பங்கள் மாறலாம். தலைமுறைகள் மாறலாம். ஆனால் கலை மீது தீராத காதலுடன், புதுமை மீது அணையாத ஆர்வத்துடன், சினிமாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் கமல்ஹாசன் என்ற பெயர், இந்திய திரையுலகின் வரலாற்றில் என்றும் தவிர்க்க முடியாத அத்தியாயமாகவே நிலைத்திருக்கும்.
பிடித்திருந்தால் Repost & Support பண்ணுங்க ✊🏽
நன்றி!!
#KamalHaasan #Ulaganayagan #YouCantAvoidMe #IndianTamilCinema #MaiamNews
ஒரு மாநிலத்தின் முதல்வரா விஜய் இதனை பேசிருக்க வேண்டும்..
அவருக்கு geo politcs ல என்னன்ன நடக்குது னு யாராவது சொல்லி புரிய வெச்சு
கமல் பேசியதை போல
அவரது fans க்கு விளங்கும்படி இப்டி பேச சொல்லுங்க..
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
திருச்சி கிழக்கில் மநீம போட்டியிட வேண்டும்! திமுக நின்னு தோத்தா அது நல்லா இருக்காது. ஆனா ரொம்ப நாளா தேர்தலை சந்திக்காத மநீம தோற்றால் கூட அது ஒரு நல்ல பயிற்சி தான். அப்பழுக்கற்ற மநீம-வுக்கு முறையான பிரச்சாரம் செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! சிந்தியுங்கள் @ikamalhaasan@mkstalin