பெண்கள் உரிமைகளுக்கு எதிரான மதவாத-வலதுசாரி முழக்கங்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.
முற்போக்கு தளமான தமிழ்நாட்டில் வெள்ளையின-ஐரோப்பிய-கிருத்துவ பெண் அடிமைத்தன கருத்தியல்களை தூக்கிச் சுமப்பது கண்டனத்திற்குரியது.
இதுவும் சங்கித்தன மத அரசியலும் வேறுபட்டதாய் இருக்க முடியாது.
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் எனும் சங்கிகளின் அரசியலும், குழந்தை சுமப்பதை தவிர்க்கும் உரிமையை பெண்களிடம் இருந்து பறிப்பதும் வலதுசாரி அரசியலே.
மதரீதியாக பெண்களை பண்டமாக, சொத்தாக, குழந்தைகளை உற்பத்தி செய்ய வேண்டியவர்களாகமாற்றற முனையும் மதவாத அரசியலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
இதை சபாநாயகர் முன்மொழிவது கண்டனத்திற்குரியது. இதைச் சொல்ல அவரைப் போன்ற ஒரு ஆணுக்கு உரிமையில்லை. இதுபோன்ற பெண் அடிமைத்தன பிற்போக்குத்தனமான மதவாத அரசியலை தவெக தலைவர்கள் தொடர்வது கண்டனத்திற்குரியது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் 'ஸ்டெர்லைட்' குறித்து ஐ.நா அவையில் பேசியதற்காக தேசதுரோக வழக்கில் கைதாகி வேலூர் சிறைக்கு அனுப்பட்ட நாள் ஆகஸ்டு-10.
அதன்பின் சுமத்தப்பட்ட 47 வழக்குகள், ரவுடிப்பட்டியல் இணைப்பு என பல பொய் வழக்குகள் அதிமுக, திமுக அரசுகளை கடந்து, தற்போது தவெக அரசிலும் தொடர்கிறது. இந்த சிறையும், வழக்கும் தாம் எம்மை உறுதியானவர்களாக மாற்றியது. இதே கைதின் பொழுது உபா (UAPA)உபா வழக்கு ஏவப்பட்டது. பொய்யாக ஜோடித்த வழக்கென நீதிமன்றத்தில் உடனடியாக நிரூபித்து அவ்வழக்கில் விடுதலை பெற்றேன்..அதாவது 07-07-2017ல் பாலஸ்தீனத்திற்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 'தேசவிரோதமாக' பேசினேன் என உபா வழக்கை தொடுத்தார்கள். குற்றம் சாட்டப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த (07-07-2017) நாளில் நான் புழல் சிறையில் 'மெரினா நினைவேந்தல்' வழக்கிற்காக குண்டர் சட்டத்தில் அடைபட்டிருந்தேன். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உரையாற்ற இயலுமென நாங்கள் எழுப்பிய கேள்வியில் அரசு வழக்கறிஞர் பதில் சொல்ல இயலாது நின்றார். நீதியரசர் விடுதலை செய்தார்.. மேலதிக வழக்குகளை குவித்து சிறப்பு CBCID வழக்குகளை ஏவினார்கள். அதிமுக அரசு ஏவிய வழக்குகளை திமுக அரசும் ரத்து செய்யவில்லை. தவெக அரசும் ரத்து செய்யப்போவதில்லை. ஆயினும் மேலதிக வழக்குகளை வாங்கிக்கொண்டே மே17 இயக்கத்தின் போராட்டம் தொடர்கிறது.
இந்த புகைப்படம் ' பெங்களூரில் இருந்து கைது செய்து வாகனத்தில் கொண்டு வந்து அதிகாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக இறங்கிய தருணத்தில் தோழர்கள் எடுத்தது.
ஃபிதெல் காஸ்த்ரோ நூற்றாண்டு விழா நிமிர் பதிப்பக நூல்கள் வெளியீடு
இன்று மாலை (ஆகஸ்ட் 9, 2026)
அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டுர்புரம், சென்னை
அனைவரும் வருக
தொடர்புக்கு
8939782116 / 9884864010
Location
https://t.co/v8XGZzjMi8
பிடல் காஸ்ட்ரோ-நவீன உலகின் சிற்பி எனும் தோழர் அமர்ந்த்தா எழுதிய நூலை தோழர் சிவக்குமார் வெளியிட பெற்றுக்கொண்டு தோழர் மஞ்சுளா உரை நிகழ்த்தினார். அடுத்ததாக 'க்யூபாவின் மருத்துவ சர்வதேசியம்' நூலை தோழர் சிவக்குமார் வெளியிட மருத்துவர் விஜய் விக்கிரமன் பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்தினார். நிகழ்வில் சிறப்புரை செய்பவர்கள், ஆசிரியர்களான தோழமைகள் அமரந்த்தா, பாலச்சந்திரன், கோச்சடை
பங்கெடுத்து சிறப்பு செய்கிறார்கள். நிகழ்வில் மரியாதைக்குரிய தோழர்கள் மூத்த ஆளுமைகளான மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கி.வெங்கட்ராமன், மூத்த பேராசிரியர் சரஸ்வதி, எழுத்தாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கெடுத்து சிறப்பித்து கொண்டிருக்கிறார்கள். இரவு 8 மணி வரை நிகழும் இந்த விழாவில் வாய்ப்புள்ள தோழமைகள் அவசியம் பங்கெடுக்க வாருங்கள்.
தமிழ்நாடு இதுவரை அறியாத லத்தீன் அமெரிக்க மார்க்சிய சிந்தனையாளர் 'ஹோசே கார்லோஸ் மரியதெகி' அவர்களது சிந்தனைகள், கட்டுரைகள், அவரது மார்க்சிய ஆய்வுலகம் குறித்த நூல்களை மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், தோழர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழ்த்தேசிய பேரியக்க தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட இந்நூல்களைக் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் விஜயசங்கர் அவர்கள் விரிவான சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலதிகமாக இன்னும் இரு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
#பிடல்காஸ்ட்ரோ_நூற்றாண்டுவிழா
நேற்று, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 8 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வரும் தோழர்களை சென்று சந்தித்தோம். இன்று 8வது நாள். கிட்டதட்ட 4 தோழமைகள் உடலை வருத்தி, கோரிக்கையை முன்னகர்த்த போராடுகிறார்கள். இளைஞர்களின் இப்போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இப்போராட்டம் விரிவடைய வேண்டும். அனைவரும் இந்த போராட்டத்தை குறித்து பேசவோ, எழுதவோ, நேரில் சென்று ஆதரிக்கவொ செய்தால் மட்டுமே இப்போராட்டம் விரிவடைந்து தமிழ்நாடு முழுமைக்கும் செல்லும். கடந்த திமுக ஆட்சியிலேயே நீட் தேர்வு விலக்கிற்கு சட்டமியற்றியும் ஆளுநர் உட்பட ஜனாத்பதி வரை பாஜக அரசால் தடை செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கான ஒப்புதலையோ, அல்லது தவெக அரசினால் மீண்டும் ஒரு சட்டசபை திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அழுத்தத்தை மீண்டும் உருவாக்கினாலோ, நீட் தேர்விற்கு விலக்கு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இயலும். திமுக அரசின் காலத்திலேயே உருவாக்கப்பட்ட சட்டவரைவிற்கு நீதிமன்றம் வாயிலாக அல்லது மீண்டும் தவெக அரசின் முயற்சி வாயிலாக அழுத்தம் வருமெனில் நாம் நீட் விலக்கு பெறலாம். ஆகவே வெற்றிக்கு மிக நெருக்கமாக இருக்கும் சூழலில் போராட்டத்தை அனைவரும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். எழும்பூர் தாயகம் (மதிமுக) அலுவலக வளாகத்திலும் 16 நாட்களாக மாணவர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. உண்ணாநிலை போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் அலுவலகமான திருவள்ளுவர் இல்லத்தில் கோயம்பேடு அருகே நடக்கிறது.. அனைவரும் இப்போராட்டங்களில் பங்கெடுங்கள். போராடும் இளையோரை ஆதரியுங்கள். தமிழ்நாட்டின் 10 ஆண்டுகால போராட்டம் வெல்லட்டும்.
நடக்க இருக்கும் தொகுதி மறுவரையில் மாற்றத்திற்குள்ளாவது தொகுதி எண்ணிக்கை மட்டுமல்ல, தொகுதியின் தன்மையும் மாற்றப்படுகிறது. அதாவது, உதாரணமாக முஸ்லீம்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் உடைக்கப்படும், முஸ்லீம்கள் இரண்டு, மூன்று தொகுதிகளுக்குள்ளாக பிரிக்கப்படுவார்கள். இதனால் பாஜக எதிர்ப்பு தொகுதிகள் அழிக்கப்பட்டு மறுநிர்மாணம் செய்யப்படும். இதை ஏற்கனவே அஸ்ஸாம், காசுமீரில் நடைமுறை செய்துள்ளார்கள். அஸ்ஸாமில் இதனால் பாஜக எளிதாக வெற்றிபெற இயலுகிறது.
இதை வைத்து பாஜக நிரந்தரமாக அதிகாரத்தில் தக்கவைக்கப்படும். குறைந்தது அடுத்த 10 ஆண்டுகள் மோடி பிரதமராக நீடிக்க வாய்ப்பு மிக மிக அதிகம். மோடி ஆட்சியில் இருக்கும் வரை, பாஜக அதிகாரத்தை கட்டுப்படுத்தும்வரை தமிழ்நாட்டுக்கோ, தமிழருக்கோ, தமிழ் மொழிக்கோ விடிவு கிடையாது.
ஆகவே 'தொகுதி மறுவரையறை' என்பதில் ஒருபகுதி 'தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம்', மறுபாதி 'பாஜகவின் நிரந்தர அதிகாரம்'... தமிழ்நாட்டிற்கான விகிதத்தை குறைக்கமாட்டோம் என சொல்லிக்கொண்டே, பாஜக தன்னை நிரந்தரமாக ஆட்சியில் அமர்த்திக்கொள்ளும் வகையில் வட இந்தியாவில் தொகுதிகளை மறுகட்டுமானம் செய்துகொள்ளும். முஸ்லீம்கள் நிரந்தரமாக தமது பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்பார்கள். வடகிழக்கு மாகாணங்கள், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில கட்சிகள் பிரதிநிதித்துவத்தை இழக்கும்.
இதைத்தான் Fair Delimitation செய்யும்.
பாஜக என்றுமே தமிழின விரோதியே. இதில் ஒருபோதும் மாற்றம் இடையாது. 'தொகுதி மறுவரையறை' என்பது 'மோடி-பாஜக' நிரந்தரமாக ஆட்சி-அதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சியே. இதில் கடந்த காலத்தைப் போல இந்தியாவிற்கே திமுக வழிகாட்டியாக நின்று, இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். Fair Delimitationஎன்பது பாஜக சார்பான நிலைப்பாடகவே சென்றுமுடியும். பாஜகவின் கனவை வெற்றிபெறச் செய்யாதீர்கள்.
ஆகவே Fair Delimitation என மே17 இயக்கத்திடம் பாடம் எடுக்கும் திமுக நண்பர்கள், தமது நிலைப்பாட்டை பரிசீலனை செய்துகொள்ளுங்கள். தமிழர் நலனை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள், கட்சி நலனையல்ல.
உங்களிடம் இருந்து நேர்மறையான முடிவு வருமென எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் பாஜக எதிர்ப்பின் தலைமைத்துவம் தமிழர்களிடமே உள்ளது. இதை எக்காலமும் கைவிடமாட்டோம் என உறுதி பூணுவோம்.
வார இறுதிக்கான குறைந்த பக்கங்கள் கொண்ட சிறந்த புத்தகங்கள்.
வாசிக்கவும் • பரிசளிக்கவும்
புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
🌊📚 #BookX #QuickRead #Weekendplan #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
பாஜக எங்கே இருக்கிறதென மாண்புமிகு அமைச்சர் கேட்கிறார்?
பாஜக எங்கும் இருக்கிறது.
நீதிபதிகளாக இருக்கிறது.
அதிகாரிகளாக இருக்கிறது.
ஆளுநராக இருக்கிறது.
காவல்துறையாக இருக்கிறது.
திருப்பரங்குன்ற தீபத்தூணாக இருக்கிறது.
நீட் தேர்வாக இருக்கிறது.
மேகேதாட்டு அணையாக இருக்கிறது.
தனியார்மயமாக இருக்கிறது.
திருப்பதிக்கு பட்ஜெட்டை எடுத்துபோவதில் இருக்கிறது.
ஜெபமாலையை பட்ஜெட்டோடு சேர்த்து தூக்கிவருவதில் இருக்கிறது.
இந்த பட்டியல் நீளமானது..
பாஜக என்பது வெறும்கட்சியாக இல்லை, பாசிசமாக, அனைத்து துறைகளிலும் பாயாசமாக அமர்ந்திருக்கிறது.
கவனமாக செயல்படவில்லையெனில்,
பாஜக பயங்கரவாதம் தலைவிரித்தாடும். திருப்பரங்குன்றத்தில் உறுதியாக இல்லையெனில் 'பாய்சன் பாயாசம்' பந்திக்கு வரும்.
காவிரி நீர்பங்கீட்டு உரிமை, மேக்கேதாட்டு அணை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டியது ஆளும்கட்சியின் தவிர்க்க இயலாத கடமை. காவிரி உரிமைக்காக கட்சிகள், இயக்கங்கள், தலைவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல தரப்பினரும் பல ஆண்டுகளாக போராடிய பங்களிப்பும், வரலாறும் உண்டு. ஆகவே காவிரி என்பது ஒரு கட்சி, ஒரு முதல்வர் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இது குறித்து நீண்ட அனுபவம் பெற்ற ஆளுமைகள் உள்ளனர். காவிரி உரிமைக்காக கடந்த 16 ஆண்டுகளாக மே17 இயக்கம் போராட்டம் நடத்தியுள்ளது. மறியல் போராட்டம், மெரினாவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், முற்றுகைப்போராட்டம் என நடத்தி வழக்கும், கைதும் செய்யபப்ட்டுள்ளது. காவிரிக்காக மிக மோசமான பிரிவுகளில் வழக்கையும் எதிர்கொண்டோம். எங்களைப் போல பல ஆளுமைகள், இயக்கங்கள் போராடி வழக்கு, சிறை பெற்றுள்ளனர். இதைப் போல பல அரசியல் கட்சிகளும் பங்களிப்பை மிக நீண்டநாட்களாக செய்து வருகின்றன. ஆகவே அனைவரது கருத்தையும் ஒருங்கிணைத்து நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய மிக முக்கியமாம கடமையும், பொறுப்பும் தவெக அரசுக்கும் முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கு உண்டு. ஆகவே எதிர்கட்சி எழுப்பிய காவிரிக்கான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்துவது குறித்து உடனடியாக தவெக அரசு அறிவிக்க வேண்டும். கடந்த காலத்தைப்போல அல்லாமல், தேர்தலுக்கு அப்பால் இயங்கும் இயக்கங்களையும், ஆளுமைகள், அறிஞர்களையும் தவெக அரசு அனைத்துகட்சி கூட்டத்தில் இணைத்திட வேண்டும்.
இதேபோல தமிழ்நாட்டிற்கான தலையாய நெருக்கடி 'தொகுதி மறுவரையறை' மசோதாவின் மூலமாக பாஜக மோடி அரசு கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மட்டுமல்லாமல், தென்னிந்திய, இந்தி பேசாத மாநிலங்களின் விகிதாச்சார பங்கை குறைக்கும் வகையில் தொகுதி மறுவரையை என்பது 1971 மக்கள் தொகை கணக்கில் கொள்ளாமல், மக்கள்தொகைக் கட்டுபாடு திட்டத்தினை நடைமுறைப்படுத்தாமல் மக்கள்தொகையை பெருக்கிக்கொண்ட இந்தி பேசும் மாநிலங்களுக்கு வசதியாகவும், சாதகமாகவும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கொண்டு மோடி அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொம்டு வந்தது. பெண்களுக்கான இடப்பஙகீடு என பசப்பு வார்த்தைகள் மூலமாக இந்த சதிகார தொகுதி மறுவரையறை சட்டத்தைக் கொண்டு வர முயல்கிறது.
தேர்தல் தொகுதிகள் பாஜகவின் வெற்றிக்கு ஏற்ப இசுலாமியர், சிறுபான்மையினர், பாஜக எதிர்ப்பாளர்களின் வாக்குகளை பலவேறு தொகுதிகளுக்குள்ளாக பிரித்து, பாஜக எதிர்ப்பு தொகுதிகளை உடைக்கின்றது. இந்த முறையை பின்பற்றி தனது வெற்றிக்கு சாதகமான வகையில் அஸ்ஸாம், காசுமீர் மாநிலஙலளில் ஏற்கனவே தொகுதி மறுவரையறையை செய்துள்ளது. இதனாலேயே அஸ்ஸாம் தேர்தல் உள்ளிட்ட இடங்களில் தமது வெற்றியை உறுதி செய்துகொள்கின்ற சதி அம்பலமானது. இந்நிலையினை கவனித்தே கடந்த திமுக அரசு, இந்த மசோதாவிற்கான எதிர்ப்பணியை உருவாக்கி ஒருமித்த கருத்தை வலுப்படுத்தியது. திமுகவின் பெருமுயற்சியால் தென்னிந்திய மாநில முதல்வர்கள் சந்தித்து உறுதியான முடிவை எடுத்தார்கள். இந்திய அளவில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பலை வலுவானது. இதனாலேயே கடந்த முறை இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
இச்சமயத்தில் இந்த மசோதாவை மீண்டும் கொண்டு வர பாஜக முயலுகிறது. இதுகுறித்து திமுகவின் உறுப்பினர் பேசும் பொழுது, 'பாஜகவின் மசோதா குறித்த முழுவிவரம் அறிந்த பின்னரே முடிவெடுப்போம்' என செய்தி வெளியானது. இது குழப்பத்திற்குரியதாகவும், கவலைக்குரியதாகவும் அமைகிறது என மே17 இயக்கம் தெரிவித்தது. அதன்பின்னர் இதுவரை தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதிர்ப்பை தெரிவிப்பதாக திமுக தரப்பிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. பாஜக கொண்டுவர இருக்கிற மசோதா எவ்வகையிலும் திருத்தபப்ட்டதாகவோ, தமிழ்நாட்டிற்கு சாதகமானதாகவோ இருக்கப் போவதில்லை. பாஜக தன்னை நிரந்தரமாக தேர்தலில் நிலைநிறுத்தி வெற்றிகொள்ளும் முயற்சிக்கான மசோதாகவே இம்முறையும் இருக்கப் போகிறது.
திமுக கூட்டணியை உடைத்த காங்கிரஸ் கட்சியை, பழிவாங்க மசோதாவை ஆதரிக்கும் முடிவிற்கோ, அல்லது மசோதாவின் போது வெளிநடப்பு செய்து ஆதரிப்பதாகவோ திமுக முடிவெடுக்கக் கூடாதென்பதே மே17 இயக்கத்தின் கவலை. பாஜக நிரந்தரமாக பதவியை கைப்பற்ற கொண்டுவரப்படும் இந்த மசோதா நிச்சயமாக தோற்கடிக்க திமுகவின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி பாராளுமன்ற உறுப்பினர்களை தமது வலைக்குள் பாஜக கொண்டு வந்துள்ளதால் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்க அதிக வாய்ப்புள்ள நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி திமுக இந்த 'தொகுதி மறுவரையறை' மசோதாவை தோற்கடிக்க வேண்டும். இதில் குழப்பமான நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வந்துவிடக்கூடாதென எமது கவலையையும், கோரிக்கையையும் கவனப்படுத்துகிறோம்.
காட்பாடியில் மே17 இயக்கம் சார்பாக நீட் எதிர்ப்பு அடையாள உண்ணாநிலை போராட்டத்திற்கான அனுமதியை இறுதிநேரத்தில் தவெக அரசின் காவல்துறை இரத்து செய்தது. தடையை மீறிய போராட்டத்திற்கு தயாரான நிலையில், ஆர்பாட்டத்திற்கான அனுமதியளிப்பதாக தெரிவித்தது காவல்துறை. போக்குவரத்துக்கு இடையூறு எனச் சொல்லி உண்ணாநிலை போராட்டத்தின் அனுமதியை மறுத்தது நகைப்பிற்குரியது. இறுதிநேர மாற்றத்திற்குட்பட்டிருந்தாலும், போராட்டத்தில் அனைத்து சனநாயக அமைப்பின் தோழர்களும் பங்கெடுத்தனர். நீட் எதிர்ப்பு, நீட் விலக்கு, நீட் ரத்து ஆகிய முழக்கங்களே நமது முழக்கங்கள். நீட் விலக்கிற்கான சட்டத்திற்கு ஒப்புதலை ஆளுநரும், பாஜக அரசும் அளிக்கின்ற வரை போராட்டம் தொடரும். நீட் விலக்கு சாத்தியமாகுமெனில் தங்கை அனிதாவின் கனவு நினைவாகும். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் போராட்டம் தொடரட்டும். தவெக அரசின் கோழைத்தனமான அடக்குமுறையை கடந்து தங்கை அனிதாவின் கனவு வெல்லட்டும்.
இதில்
மதிமுக மாவட்ட செயலாளர் தோழர் கோபி, விசிக மாவட்ட செயலாளர் தோழர் பிலீப், SDPI மாவட்ட தலைவர் தோழர் சுல்தான் பாஷா, திவிக ஒருங்கிணைந்த வேலூர் மண்டல செயலாளர் தோழர் சிவா நந்தன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தோழர் குப்பன், பாலாறு பாதுகாப்பு இயக்கம் தோழர் பரசுராமன், அம்பேத்கர் நற்பணி மன்றம் தோழர் குட்டி ஆகியோர் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் பங்கெடுத்து கண்டன உரை நிகழ்த்தினார்
சாதிய கொடுமைகள் பற்றிய கள ஆய்வுகள், அறிக்கைகள் உள்ளடக்கிய புத்தகங்கள் சில பரிந்துரைகள்.
புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
🌊📚 #BookX #OldBooks #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
அதேநேரத்தில், திரு. உதயநிதி அவர்களும் தனிநபர் அவதூறு அரசியலை கைவிட்டு, திராவிட இயக்கத்தின் அரசியல் மரபிற்கு ஏற்ற வகையில் கருத்தியல் அடிப்படையிலான விமர்சனங்களையே எதிர்காலத்தில் முன்வைக்க வேண்டும் என்பதையும் கண்டனத்துடன் பதிவு செய்கிறோம்.
தமிழ்நாட்டின் உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும், சமூக அமைப்புகளும் ஒரே கோரிக்கையின் கீழ் ஒன்றிணைய வேண்டிய காலம் இது. காவிரி, மேகேதாட்டு, தமிழ்நாட்டு உரிமைகள் ஆகியவை தனிநபர்களைக் காட்டிலும் மேலானவை. அவற்றை முன்னிறுத்தும் மக்கள் ஒற்றுமையையே வரலாறு நினைவில் வைத்திருக்கும்; அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் அல்ல.
மே பதினேழு இயக்கம் திரு. உதயநிதி அவர்களைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்து, சட்டநடவடிக்கைகளை நீதிமன்றத்தின் வாயிலாக த.வெ.க அரசு மேற்கொள்ளுவதே உரிய வழிமுறையாகும். அதேவேளையில், அரசியல் கருத்து மோதல்கள் தனிநபர் இழிவுபடுத்தலாக மாறாமல், மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டு உரிமைகளை மையப்படுத்திய ஜனநாயக அரசியலே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
04 -08-2026
தமிழ்நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி காலத்தில் கைதுகளும், அவதூறுகளும் மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்கப்போவதில்லை.
தமிழ்நாடு இன்று காவிரி நீர் உரிமை, மேகேதாட்டு அணை, ஒன்றிய அரசின் அரசியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும், அவதூறு அரசியலில் ஈடுபடுவதும், அதற்குப் பதிலாக கைது அரசியலை மேற்கொள்வதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கப்போவதில்லை. அவதூறு பேச்சும் தேவையற்றது; கைதும் தேவையற்றது. இந்த இரண்டு நிகழ்வும் மக்களின் உரிமைப் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளுபவையே.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி அவர்கள் தனது கண்டன உரையில் பயன்படுத்திய மாண்பிற்குக் குறைவான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. தனிநபர் தாக்குதல்கள் காவிரி சிக்கலுக்கோ, மேகேதாட்டு அணை பிரச்சினைக்கோ எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை. அந்த வகையில் அவரது பேச்சு கண்டனத்திற்குரியது. அதேநேரத்தில், அந்தப் பேச்சுக்காக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதும் ஜனநாயக அரசியலுக்கு ஏற்றதல்ல; அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய அடக்குமுறை செயலாகும்.
காவிரி நீர் உரிமையும், மேகேதாட்டு அணை அச்சுறுத்தலும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகளாக இருக்கும் இந்த நேரத்தில், கட்சி வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையான அரசியல் நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்த அவசியத்தை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் புறக்கணித்து வருவது மிகுந்த வருத்தத்திற்குரியது.
தமிழ்நாடு சட்டமன்றம் கூடவிருக்கும் காலகட்டத்திலும், தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் சூழலிலும், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது அரசியல் ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் தவறான முன்னுதாரணமாகும். சட்டமன்ற விவாதங்கள் நடைபெற வேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது சட்டமன்றத்தின் இயல்பான செயல்பாட்டையே பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படும்.
திரு. உதயநிதி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், சட்டமன்றக் கூட்டத்தொடரும் காவிரி தொடர்பான அரசியல் சூழலும் முடியும் வரை கைது நடவடிக்கையைத் தள்ளிவைத்திருக்க முடியும். இந்தக் கைது காவிரி பிரச்சினையையோ, மேகேதாட்டு அணை பிரச்சினையையோ தீர்க்காது. மாறாக, இது தனிநபர் விருப்பு-வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
இன்று ஆபாசமான பேச்சுகளும், அருவருப்பூட்டும் பதிவுகளும் அரசியலில் 'இயல்பாக்கப்படும்' அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. அதேநேரத்தில், விமர்சனங்களுக்கே கைது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. இந்த இரு போக்குகளுமே ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை. கருத்துக்கு எதிராக கருத்து, அவதூறுக்கு எதிராக நீதிமன்றம் என்ற ஜனநாயக வழிமுறையை விட்டுவிட்டு, கைது அரசியலை முன்னிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளும் தவெக அரசையோ, முதலமைச்சரையோ நோக்கிய அவதூறுகள் கைது நடவடிக்கைக்குரியவை எனில், அதே சட்ட அளவுகோல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து நபர்களுக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைத் தத்துவம் நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்த சமநிலை பின்பற்றப்படாதபோது, தமிழ்நாடு காவல்துறையும் அதிகாரவர்க்கமும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதிகாரம் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் வசதிக்காக பயன்படுத்தப்படுவதாக மக்கள் கருதும் சூழலை அரசு உருவாக்கக்கூடாது.
கர்நாடகத்தில் காவிரி பிரச்சினை எழும்போதெல்லாம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, முன்னாள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்கள் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒரே குரலில் பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இன்று வரை அனைத்துக் கட்சிக் கூட்டமோ, ஒருங்கிணைந்த செயல் திட்டமோ உருவாக்கப்படவில்லை. மாறாக, தனிநபர் மோதல்களும், கைது அரசியலும் காவிரி உரிமைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகின்றன. இந்தச் சூழல் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கும், பாஜக போன்ற ஆதிக்க அரசியல் சக்திகளுக்கும் சாதகமாக அமைகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளும் அரசும், பிரதான அரசியல் கட்சிகளும் இன்று வழங்கும் செய்தி என்ன? ஒற்றுமையின்மை, தனிநபர் வெறுப்பு அரசியல், பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறை மட்டுமே.
எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவரை சட்டமன்றத்தில் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அவதூறு குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறட்டும்; சட்டம் தனது கடமையை செய்யட்டும்.ஆனால் ஜனநாயக அரசியலை கைது அரசியலால் மாற்ற முடியாது...(தொடர்ச்சி..1)
கொள்கை பற்றி பேசவேண்டாம்.. வெறும் ஊழல் ஒழிப்பு மட்டும் பேசினால் போதும் என்று சொன்ன த வெ க அமைச்சருக்கு.. திருமுருகன் காந்தியின் நட்ச் பதில்
#BanNeet#TVKVijay#MAY17movement
பெரியார் திடலுக்குள் எதற்கு காவல்துறை குவிப்பு?
நீட் எதிர்ப்பு தான் முதல்வர் விஜய் அவர்களின் கொள்கையெனில், நீட் எதிர்ப்பு பரப்புரை செய்ய திராவிடர் கழகத்திற்கான அனுமதியை ஏன் மறுத்தது தவெக அரசு?
பெரியார் திடலுக்குள் காவல்துறையை அனுப்ப வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
யாரை திருப்தி செய்ய முதல்வர் விஜய் ,தனது கொள்கை தலைவரின் திடலுக்கு காவல்துறையை குவிக்கிறார்?
நடப்பது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா?..அல்லது, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அடிபணியும் ஆட்சியா?
ஐயா ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்ற இரண்டு மாதத்திற்குள் காவல்துறையை திடலுக்குள் குவிக்கிறாரே முதல்வர், கொள்கையை மறந்துவிட்டாரா? அல்லது கொள்கை தலைவரை மாற்றிக்கொண்டாரா?
பெரியார் திடல் என்பது தந்தை பெரியாரின் அரசியல் தலைமையகம். அதற்குள்ளாக காவல்துறையை அனுப்பி அடக்குமுறை ஏவுவதை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சி முதலாக அடக்குமுறையை சந்தித்த பெரியார் திடல், இந்த அடக்குமுறைக்கா அஞ்சும்!
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் காவல்துறையை ஏவுமா பாஜக? ஆனால் கொள்கை தலைவர் என பிரகடனம் செய்துவிட்டு, அடக்குமுறையை ஏவுவது ஏன் என பதில் சொல்லுமா தவெக அரசு.