களம் கண்ட போர்களிலெல்லாம் தோல்வியையே அறியாத மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!
தனித்துவமான வீரத்தோடு தமிழ் மொழியின் மேன்மையைக் காத்த அந்தப் பேரரசரின் வழியில் பயணித்து, சமூகநீதி தழைக்கும் இந்நிலத்தில் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக ஒன்றிணைந்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கட்டிக்காப்போம்!
#பெரும்பிடுகு_முத்தரையர்
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா - கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Perarasar Perumbidugu Mutharayar Sathya Pooja is not just a ceremony, he is our sacred pledge of courage, honor, patriotism, and protection of our Dharma.
Our ancestors safeguarded temples, culture, and the dignity of our land with bravery and sacrifice. Today, it is our duty to preserve that same spirit and pass it to future generations.
Let every us stand united for Dharma, heritage, and Bharat. Let the flame of Tamil valor and our pride never fade.
🕉️ Veeram in our blood 🚩 Dharma in our hearts 🇮🇳 Bharat is our motherland
👑 Long live the King Perumbidugu Mutharayar in our hearts forever.
#PerumbiduguMutharayar #SathyaPooja #SanatanaDharma #HinduUnity #TamilVeeram #BharatMata #ProtectDharma #MutharayarPride
தனது ஆட்சிக்காலத்தில் தன்னிச்சையாக 14 மாபெரும் போர்களில் தொடர்ந்து வெற்றிமட்டுமே கண்ட மாமன்னர்!
தமிழ் வெண்பாக்களினால் முதுதமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர்!
வீரத்திற்கும், தமிழ்மண்ணிற்கும் அடையாளமாக விளங்கி, பொற்கால ஆட்சியை வழங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351-ஆம் ஆண்டு சதய விழா தினமான இன்று, அவரின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியையும், அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகின்றேன்!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலைக்கு கழகத்தினருடன் இணைந்து இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#TrichyDMK
"பேரரசர் பெரும்பிடுகு, #முத்தரையர்"அவர்களின் 1351 வது சதய விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் , ஆனையூர் பகுதியில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று.
வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
சரித்திரம் படைத்த
சதய திருவிழா நாயகர்!
தமிழுக்கு முதல் மெய்கீர்த்தி
கண்ட தமிழ்வேந்தன்!
எதிலும், எவருக்கும்
நிகரில்லா மாவீரன்!
நின்ற போர்களிலெல்லாம்
வென்று வாகை பூ மட்டுமே
சூடிய வாள்மாறன்!
விளைந்த பெரு வீரத்தால்
நெஞ்சை நிமிர்த்தி,
தஞ்சை தரணியை ஆண்ட
பேரரசர் #பெரும்பிடுகு_முத்தரையர் அவர்களின் 1351-வது சதய திருநாளில்..
தியாகத்தை, பெரும் புகழை போற்றி
புகழ் வணக்கம் செலுத்துவோம்!
#முத்தரையர்_சதயவிழா
தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய நிலப்பரப்பை வரலாறு போற்றும் வகையில் கி.பி 705 முதல் கி.பி 745 வரை ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351-ஆம் ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தனது நீண்ட அரச வாழ்வில் 16 போர்களை சந்தித்து அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் நிகரில்லா மாவீரனாக வாழ்ந்தார் என்பது வரலாற்று உண்மை.
தமிழ் மொழியை காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து அவை காலத்திற்கும் நிலை பெறச் செய்ததிலும் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் ஆற்றிய பணி மகத்தானது.
சதய விழாவில் மாமன்னனை போற்றுகிறோம்!
#முத்தரையர்_சதயவிழா
களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் 1351-வது சதய விழாவான இன்று அவரது வீரத்தையும், புகழையும் நினைவு கூர்ந்து தலை வணங்குவோம். பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் நினைவாக மேதகு துணைக் குடியரசுத் தலைவர் @CPR_VP அவர்கள் கடந்த ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டடு தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வீரத்தை உலகறிய செய்து பெருமைப் படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தின் தொன்மையை மீட்டெடுத்தும், தொடர்ந்து தமிழ்நாட்டை உலக நாடுகளில் பெருமைப்படுத்தி வரும் @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி.
தமிழ் மொழியைக் காத்து, தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதய விழா, இன்று கொண்டாடப்படுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயப் பெருவிழா வெகுசிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர் வீர வரலாற்றின் ஒளிவிளக்காகவும், மண்ணின் மானத்தை காத்த மாமன்னராகவும் திகழ்ந்தவர் மாவீரர் பெரும்பிடுங்கு முத்தரையர். தன்னுடைய ஆட்சித் திறன், வீரத் தன்மை, தமிழர் பண்பாட்டை காத்து வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றவர்.
இன்று அவரது 1351வது சதய விழாவை முன்னிட்டு, அவரின் புகழையும், தியாகத்தையும், வீர மரபையும் நினைவுகூர்ந்து தலைவணங்குகிறோம். தலைமுறைகள் கடந்தும் அவரது பெயர் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக கடந்த ஆண்டு நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் மாவீரர் பெரும்பிடுகு முத்தையர் அவர்களுக்கு தபால் தலை வெளியிட்டு நம் தமிழரின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்தி உலகறியச் செய்ததை நினைவு கூர்ந்து மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு இந்திய துணை குடியரசுத் தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் திரு. @CPR_VP அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் வரலாற்றின் அடையாளமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்டதுடன், அவரது பெருமைகளைத் தமிழில் பதிவிட்டுப் போற்றிய பிரதமர் திரு. @narendramodi அவர்கள்!
மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுத்து, வருங்கால சந்ததிக்குக் கொண்டு செல்லும் பாஜக அரசின் முயற்சிக்கு தமிழகம் தலைவணங்குகிறது..!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, சிறப்புத் தபால் தலை வெளியீட்டு விழா இன்று குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு. @CPR_VP அவர்கள் தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களும், மத்திய இணையமைச்சர் திரு. @DrLMurugan அவர்கள், மற்றும் நமது மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்..!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலை வெளியிட முழு முதல் காரணமாக இருந்தது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் மற்றும் @BJP4Tamilnadu தலைவர்களுமே என்றால் அது மிகையில்லை..!