"பேரு வச்சியே சோறு வச்சியா" என்ற காமெடி போல ஒன்றிய பாஜக அரசு பல நலத்திட்டங்களுக்கு பெயர் மட்டும் பிரம்மாண்டமாக வைத்துவிட்டு மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம், உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் முகத்தையும் ஸ்டிக்கரில் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் ஒன்றிய அரசை காட்டிலும் அதிகமாக தமிழ்நாடு அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசுக்கும், அவர்களுடன் கூட்டணி என்ற பெயரில் எடுபிடியாக இருக்கும் அதிமுகவுக்கும் 2026 ஆம் ஆண்டு தேரத்லில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#BJPFails #ADMKFails
பழனிச்சாமி சார் அவர்களே,
நீங்கள் தேடும் அத்தனை சார்களும் உங்கள் பொடனிக்கு பின்னாடிதான் உள்ளனர். நேற்றுதான் பொள்ளாச்சி சார்கள் தண்டிக்க்கபட்டுள்ளனர். மற்ற சார்களும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். பெண்களுக்கு அநீதி இழைக்கும் சார்களை காப்பாற்ற முட்டாள்தனமாக செயல்பட வேண்டாம்.
#AdmkFails
ஒன்றிய பாஜக அரசின் ஆஸ்தான அடிமை திரு. எடப்பாடி பழனிசாமியும் அவரது அதிமுகவும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு செய்த துரோகங்களையும், உண்மைகளையும் விளக்கும் காணொளி!
#AdmkFails#FactCheck
கழக இளைஞர் அணி நடத்திய பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 14 வயதில் கலந்துகொண்ட தம்பி @MMohanethi , கழகத் தலைவர் @mkstalin அவர்கள் முன்பு பேசும் வாய்ப்பைப் பெற்றாரே தவிர, வெற்றி பெறும் வாய்ப்பு அப்போது தவறிவிட்டது.
என்றபோதும், தம்பி மோகநிதியை அழைத்த கழகத் தலைவர் அவர்கள், வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்து வாழ்த்தி இருக்கிறார்.
தலைவர் அவர்களின் அந்த வாழ்த்தும், அரவணைப்பும் தம்பி மோகநிதியை 10 ஆண்டுகள் கழித்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு @dmk_youthwing நடத்திய #என்_உயிரினும்_மேலான பிரமாண்ட பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட 17 ஆயிரம் பேரில் முதல் பரிசு பெறும் வெற்றியாளராக மாற்றியிருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் மீதான தீராத பற்றால், ஈடுபாட்டால் மோகநிதி எனப் பெயர் பெற்ற அன்புத்தம்பியின் குரல், கலைஞர் போல், அவரின் தமிழைப்போல் தி.மு.கழக மேடைகளில் தொடர்ந்து உரக்க ஒலிக்க வாழ்த்துகள்.
#கலைஞர்100
பெண்களுக்காக களம் அமைத்துக் கொடுப்பதில், எப்போதும் முன்நிற்பது நம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆண்களுக்கு நிகராகப் போராட்டக் களங்களிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்கள் பங்குபெற்றதால்தான் நம் திராவிட இயக்கம், திசைகள் எங்கும் வளர்ந்தது.
அந்தவகையில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களின் வழிகாட்டுதலுடன் @dmk_youthwing நடத்திய #என்_உயிரினும்_மேலான கலைஞர் நூற்றாண்டுப் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றார், வேதாரண்யத்தைச் சேர்ந்த அன்புத் தங்கை சிவரஞ்சனி.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை இவர் எப்படி அறிந்துகொண்டார், எப்படி உள்வாங்கினார் என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்…
#கலைஞர்100
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக விளங்குகின்ற இயக்கம். 'காலத்திற்கும், களத்திற்கும் ஏற்ப கடமையாற்றி, கழகத்துக்கு இளைஞர் அணி துணைநிற்க வேண்டும்' என்றார், கழகத்தலைவர் @mkstalin அவர்கள்.
அந்தவகையில் #என்_உயிரினும்_மேலான பிரமாண்ட பேச்சுப் போட்டியின் மூலம் மிகச் சிறந்த இளம் பேச்சாளர் படையை கண்டறிந்து உள்ளது @dmk_youthwing .
இந்தப் பேச்சுப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த இளம் வெற்றியாளர் தம்பி ஜோ.வியானி விஷ்வா, நெற்களஞ்சியமாம் தஞ்சையின் சொற்களஞ்சியமாய் விளங்குகிறார்.
இன்னும் ஆயிரமாயிரம் வியானி விஷ்வாக்களை கழக இளைஞர் அணி உருவாக்கிக்கொண்டே இருக்கும்.
இதோ, உரக்கப் பேச வந்த உடன்பிறப்பின் கதை...
உடன்பிறப்புகளாகிய நீங்கள் இல்லாமல் கழகம் இல்லை; நீங்கள் இல்லாமல் நான் இல்லை!
- கழக பவள விழா - முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் சிறப்புரை.
#DMK75
4th South Asian Junior Athletics Championship 2024-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மாண்புமிகு அமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் தொடங்கி வைத்தார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறுகிற இப் போட்டியில் 7 நாடுகளிலிருந்து 174 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்!
பருவநிலை மாற்றம் நம் உடல்நலத்தையும் மனநலத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிப் பேசும் "Flood baby" என்ற ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
@bs_value (1/2)