எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே!
அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது.
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward!
இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்!
"புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா?
"மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை!
அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள்.
உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது.
இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது!
பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது.
ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
இந்த முறை ஒன்றரை இரண்டு வருடம் தாக்குப்பிடிக்கும், பின்னர் ஆட்சி கவிழ்ந்து விஜய் பெரும்பான்மையுடன் அடுத்து வரும் 2 தேர்களில் 12 அமோகமாக வெற்றி பெறுவார்.
விஜய் எதையுமே நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி ஒரு ஜோம்பிஸ் கூட்டம் அவர் பின்னால் நிற்கிறது. உதயநிதி ரவுடி டைம் போட்டாலே அடிக்கும் கழக அனுதாபிகள் எங்க? கரூர் திரிஷான்னு எவ்ளோ பெரிய விஷயம் ஆனாலும் கண்ணை மூடிட்டு திமுக குரல்வளையை கவ்வும் தற்குறி கூட்டம் எங்கே. இது எல்லாம் இல்லை இல்லை விஜய் சரியாக ஆட்சி செய்யவில்லை என்று சீக்கிரமே மாறும் என்று எனக்கு தோன்றவில்லை.
அதிமுக தொண்டர்கள் பலர் அதற்குள் TVK வில் இணைந்திருப்பார்கள். நிரூபித்து காட்டியதால் காங்கிரசு போன்ற அட்டை பூச்சிகள் ஓடிக்கொண்டு இருக்கும். கூட்டணியை வலுப்படுத்தும்.
எனவே மனதை திடமாக்கிக்கொள்ளுங். ஒரு நீண்ட சபிக்க பட்ட ஆட்சி, மத்தியில் பிஜேபி போல இங்க வந்து இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் அகற்ற முடியும் என்று தோன்றவில்லை. அத்தனை முன்னேறங்களையும், வளர்ச்சியையும், மாநில உரிமைகளையும், கல்வியையும், சமூக நீதியையும் 20/25 வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்லாமல் இருந்தால் சந்தோஷம்.
இதுவரை வந்த Memes Template & meme வீடியோஸ்லயே தி பெஸ்ட்
தற்குறினு இவனுங்களை ஏன் சொல்றாங்கன்னு வித் Proof
அவன் பொருளை வச்சே அவனை வதம் பன்றது இது தான் 😂😂
ஒரு ரவுன்ட் வரும் இந்த வீடியோ
Spain, Speed, and Style
A powerful and classic combination
Great to see you on the track, Thiru Ajith Kumar.
Looking forward to your next adventure…
@Akracingoffl@Velu_Mahindra
கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.
கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.
மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.
பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.
துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்!
#KarurTragedy
Indians live like cockroaches and die like cockroaches. They vote for bottom of the barrel cockroaches as rulers, who rightly treat them as cockroaches. And cockroaches find my reference to them as offensive.