காங்கிரசு தவேகவுடன் பேசுரோமுன்னு சொல்லியும் தொங்குசதை திமுக அமைதி. அதிமுக கூட்டணி தலைவரிடம் வராத பாசக ஆனால் எடப்பாடி தலைநகருக்கு ஓட்டம். இரண்டுமே தேசிய கட்சிகளின் தொங்குசதை என்ற அண்ணன் சீமான் கருத்து சரியே.
@NaamTamilarOrg@_ITWingNTK@arivalayam
மீனவப்பெருமக்கள் சாகும்வரை பட்டினிப்போராட்டம் முன்னெடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் உடனடியாக மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவ மக்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
இராதாபுரம் அடுத்துள்ள தோமையார்புரம் கடற்கரை கிராமத்தில் ஏறத்தாழ 160க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மீனவச் சொந்தங்கள் நாட்டுப் படகின் மூலம் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தோமையார்புரத்தில் முறையான தூண்டில் வளைவு இல்லாத காரணத்தால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அவலநிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு சுவர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகள் காரணமாக தோமையார்புரத்தில் கடல் அரிப்பு அதிகமாகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்திக் கடந்த 15 ஆண்டுகளாக மீனவச்சொந்தங்கள் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தம், பட்டினிப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாகப் போராடி வரும் தோமையார்புரம் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆளும் திமுக அரசு நிறைவேற்ற முன்வராதது, மீனவ மக்கள் மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது.
மாண்புமிகு தமிழ்நாட்டின் சபாநாயகர் ஐயா அப்பாவு அவர்களின் சொந்த தொகுதியான இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவ மக்களையே வாழ்வாதாரக் கோரிக்கைக்காக இத்தனை ஆண்டுகள் அலைக்கழிப்பது ஏன்? கடந்தமுறை போராட்டம் நடத்தியபோது முதலமைச்சர்வரை அழைத்துச்சென்று அலைக்கழித்து, மீன்பிடி தூண்டில் அமைக்கப்படும் என்று மாண்புமிகு சபாநாயகர் அப்பாவு அவர்கள் அளித்த வாக்குறுதி என்னானது? மீனவ மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் திமுக அரசிற்கு இத்தனை அலட்சியம் ஏன்? இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? எளிய மக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? பெருங்கொடுமை!
ஆகவே, திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரம் மீனவச் சொந்தங்களின் 15 ஆண்டுகாலக் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் நாம் தமிழர் கட்சி மீனவச்சொந்தங்களுக்கு ஆதரவாக மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை விரைவில் முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
தங்களின் வாழ்வாதார கோரிக்கைக்காக மீனவ மக்கள் நடத்தும் அறப்போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து, உரிமை வென்றிட துணைநிற்கும். எனினும் தற்போது கல்லூரி மாணவிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட எம்மீனவச் சொந்தங்கள் சாகும்வரை பட்டினிப்போராட்டங்களை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல. உரிமைக்கான போராட்டம் அனைத்தும் உங்களின் நலமிக்க வாழ்விற்கு எனும்போது, உயிரை இழந்து உரிமையை பெற போராட்டம் நடத்தும் கடுமையான போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டுமென உங்கள் மீதான அக்கறையுடனும், அன்புடனும் கோருகிறேன். நாம் அனைவரும் இணைந்து போராடி தூண்டில் வளைவினை உறுதியாகப் பெறுவோம்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
1000 ஆண்டுகள் ஜெர்மனியை ஆளுவேன்,1000 ஆண்டுகள் என் புகழ் இருக்கும் என்றெல்லாம் பேசிய எத்தனையோ ஆட்சியாளர்களை, சர்வாதிகாரிகளையும் உலகம் பார்த்து விட்டது.அவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதையும் வரலாறு அறியும். எனவே அதிகார திமிரில் ஆடும் இந்த திராவிட பாசிசவாதி ஸ்டாலினும் வீழ்வார்