இதுதான் விஜய் ஆட்சியின் மாற்றம்!
சட்டமன்றத்தில் பொய் என்ற வார்த்தையை பயன்படுத்துவது மரபல்ல. உண்மைக்கு மாறான... என்றுதான் சொல்ல வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது பொய் என்று சொன்னால், உண்மைக்கு மாறான தகவல் என்று பேரவைத் தலைவர் திருத்தம் செய்வார்.
இன்றைய சட்டமன்ற கூட்டத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி சொன்ன உண்மைக்கு மாறான தகவலைப் பொறுக்க முடியாமல் பேரவைத் தலைவரே, "அமைச்சர் சொல்வது பொய்" என்று மூன்று முறை உரக்கச் சொல்லும் நிலைமை ஏற்பட்டது.
அடுத்த தலைமுறை வாக்காளர்களை உருவாக்குவதற்காக பள்ளி மாணவர்களை மூளைச்சலவை செய்து, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசமாக மாற்றி வரும் தவெக ரீல்ஸ் வெறியர்கள்.
Please share this widely and help save Tamil Nadu.
#TVKFails
தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை.
பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பத்திரிகைச் செய்தி
18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் @SDPofIndia கட்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:
சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், சமூக அமைதி - சமூகநீதி - சம வாய்ப்பு - சமத்துவம், எளிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்!
எஸ்டிபிஐ கட்சி, அரசியல் ரீதியாகப் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சிக்கும், ஆக்கரீதியான அரசியல் பங்களிப்புக்கும் பாடுபட்டு வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் திரு. எம்.கே. ஃபைஜி அவர்கள், மாநிலத் தலைவர் திரு. @nellai_mubarak அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் @sdpitnhq கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர். பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
எஸ்டிபிஐ கட்சி எளிய மக்களின் மேம்பாட்டுக்காக என்றென்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வரவும், அரசியல்ரீதியாக அதன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் நலன் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையும், ஆதரவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தோழமையுணர்வோடு இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேனி மாவட்ட முன்னாள் கழகச் செயலாளர் திரு எல்.மூக்கையா அவர்களின் மகனும், ஒன்றியக் கழகச் செயலாளர் திரு எல்.எம்.பாண்டியன் அவர்களின் சகோதரரும், கோவை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவருமான திரு எல்.எம்.மருதுபாண்டியன் அவர்களின் மறைவுக்கு கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @udhayatalinஅவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி!
Today, I had the opportunity to watch the documentary "Faceless People – The Journey of Tamil Refugees in India," directed by @RKRadhakrishn, alongside our party leader, Hon Thalaivar @mkstalin. The short film highlights the suffering of Sri Lankan Tamil refugees of Indian origin, living in Tamil Nadu for decades without proper recognition or permission to be granted citizenship by the Indian Government, yet longing to be called Indians. The CAA 2019, which amended the Citizenship Act 1955, provided a pathway to Indian citizenship for persecuted religious minorities from Afghanistan, Bangladesh, and Pakistan but excluded Sri Lankan Tamils of Indian origin who returned as refugees. However, our Hon Thalaivar @mkstalin asked me to challenge it in the Supreme Court, as it has failed to consider Sri Lankan Tamil refugees. It is high time the Union Government amended the law to include these refugees.
கல்விக் கதவை அடைக்காதீர்!
தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டம் தான் "நான் முதல்வன்".
இந்தத் திட்டத்தை முடக்குவது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சியை முடக்குவதற்குச் சமம்! இளைஞர்களின் கல்வி உரிமைக்காகவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் என்றும் #திராவிடமாடல் அரசு துணை நிற்கும்.🌅🔥
@mkstalin@udhaystalin
#ThalaivarMKStalin
#LopUdhayStalin #DravidianModel #DMKNRIWing
#கழகநிர்வாகிகள்_கூட்டம்
நாகர்கோவில் மாநகர மேற்கு பகுதி 4-வது வட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் அவர்கள் தலைமையில் பெருவிளை பகுதியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழக வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகளுக்கும் நன்றி கூறினேன். உடன் மாநகர செயலாளர் திரு.ஆனந்த், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் திரு.முகமது பஷீர்,வட்ட பிரதிநிதிகள் திரு.பீர் முகமது , அபு பக்கர்,மாமன்ற உறுப்பினர் திரு.அமல செல்வன்,மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.மோகன் ராஜ்,மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திரு.ராஜன்,மாநகர மாணவரணி அமைப்பாளர் திரு.முகமது ஷாலி,மாநகர பொறியாளரணி துணை அமைப்பாளர் திரு.பர்னபால்,கழக நிர்வாகி திருமதி.றோணிக்கம்,திரு.ரமேஷ்,திரு.பக்கர்,திரு.பஷீர்,திரு.அப்பாஸ்,திரு.ராஜன் திரு.நவாப்,அக்பர் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். @mkstalin@arivalayam
#DMK
#MKStalin
#UdhayanidhiStalin
#DMK_Kanyakumari_East
#Dmkkanyakumari
நீட் என்னும் மாய அரக்கனால் மாய்ந்து போன மாணவர்களை கணக்கில் கொண்டாலே,
அதன் கொடுமையும் தீமையும்
குலை நடுங்க வைக்கிறது..
மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கப் பார்க்கும் ஒன்றிய அரசின் "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்"
என்னும் முரட்டு பிடிவாதத்தை தமிழர்களாய் தமிழ்நாடாய் ஒன்றாய் நின்று முறியடிப்போம்!
உயிர் பலியை தடுப்போம்! 🔥
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#BanNeet
ஆளுநர் உரையாற்றும் நிகழ்வு சுமூகமாக இருந்ததாக பலரும் தங்களது தோளைத் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள்.
ஆளுநர் சொன்னதற்கு எல்லாம் விஜய் அரசு தலையாட்டி விட்டது. பின்னர் சுமூகமாகத்தானே இருக்கும்?
#முரசொலி
இன்று பத்திரிகையாளர் திரு. R.K. ராதாகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் உருவான "Faceless People – The Journey of Tamil Refugees in India" ஆவணப்படத்தை இன்று கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் பயணத்தை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ள இந்த ஆவணப்படம் மனதை நெகிழச் செய்கிறது. சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய இக்கதையை நேர்மையாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@RKRadhakrishn
அப்போது!..
திராவிடமாடல் அரசின் திட்டங்களால் மக்கள் பலன்பெற்று பயனுற்றதை பொறுக்க முடியாமல்,
'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள்;
இப்போது!..
ஒட்டுமொத்த குற்றங்களையும் குத்தகைக்கு எடுத்தவர்கள் போல், கேவலமான கேடுகெட்ட சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலிலும் சொரணையற்ற சொங்கிகளைப் போல் வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?!🔥😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TNAssmebly
#TVKFails
பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றைத் தொடக்கூட முடியாது! போலியான மாற்றத்தால் வரலாற்றைத் துளிக்கூட மாற்ற முடியாது!
#DravidianModel அரசின் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாணவர்களால் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
“நான் முதல்வன்” திட்டத்திற்கான பெயராக சுமார் ஐந்து விருப்பங்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் “நான் முதல்வன்” என்ற பெயர் இடம்பெறவில்லை. முழுத் திட்ட வடிவமைப்பையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர், “ஒவ்வொரு மாணவரும், இளைஞரும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதனால், ‘முதல்வன்’ என்ற சொல் இடம்பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ என்று பெயரிட்டால் என்ன?” என்று பரிந்துரைத்தார். அப்பெயர் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் தலைநிமிர வைத்தது.
இந்த உணர்வுகள் எல்லாம் “முதலமைச்சர்தான் ஆக வேண்டும்” எனும் அஜெண்டாவோடு மட்டுமே வந்தவர்களுக்கு தெரியப் போவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் உணரப் போவதில்லை!
அதேபோல், “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரை ஒரு கல்லூரி நிகழ்வில் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் முன்னிலையில் வாக்களித்துச் சூட்டியவர்கள் மாணவிகள்!
வரலாறாக நிலைத்து நிற்கப்போகும் #DravidianModel அரசின் சாதனைத் திட்டங்களின் பெயர்களை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய ஆட்சியாளர்கள் “நான் முதல்வன்” திட்டத்தைப்போல இன்னும் பல திட்டங்களுக்கு பெயர்களை நிச்சயம் மாற்றுவார்கள். அதற்கு காரணமாக “மக்களுக்கு புரியவில்லை“ என்கிற ரீதியில் மட்டம் தட்டிப்பேசும் கதைகளையும் கூட அருமையாக அவிழ்த்துவிடுவார்கள். நாமும் நம்புவதற்கு தயாராக இருப்போம் 😂.
ஆனால், மாணவர்களுக்கான திட்டங்களை தொட நினைத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பதற்கு தயார் ஆவோம்!
#Naan_Mudhalvan