An epic written for the ages.
A voyage reimagined for the biggest screen.
And a voice that has lived and breathed cinema.
#KamalHaasan celebrates Christopher Nolan’s
#TheOdyssey, as his ode joins the film’s voyage across theatres in India
From Homer’s immortal journey to Nolan’s cinematic vision, the voyage continues🔥
#ChristopherNolan #MattDamon #AnneHathaway @TomHolland1996@Zendaya@RKFI@turmericmediaTM@magizhmandram
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் வெற்றி இளைஞர் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்துகிறேன். சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். வாழ்த்துகள்.
Glad to see dialogue replacing confrontation. Dissent deserves dialogue. This is democracy in action.
Pellet guns, electric shock batons and nail-studded lathis have no place in the land of Bapu.
Equally, attacks on security personnel and public property must be examined fairly. Accountability cannot be selective.
This moment and oppurtunity is bigger than paper leaks. I urge a National Commission on Education and Examination Reform, with a three-month roadmap to restore trust in examinations, reduce academic stress and modernise education, one that also hears Tamil Nadu's voice, where young Anitha's death first showed the human cost of a single high-stakes test.
The Government's willingness to engage is welcome. Now let us ensure that dialogue leads to lasting reform. The road ahead is long, but Indians must walk it together.
#DoBetterIndia #TogetherForChange
We should have listened when one child cried.
Instead, we waited until far too many of our children died.
A system where coaching replaces learning, anxiety replaces curiosity, and criminality replaces merit is rotten.
A nation has failed when its children are met with barricades and batons instead of answers.
@Wangchuk66, the nation will need your conscience for the journey ahead. Please end your fast.
To the children of India: You are the best of us. You have done your duty. It is now time for the country to do its duty by you. May your dreams forever be bigger than our failures.
@cockroachisback #CJPProtest
மறந்தாலன்றோ நினைப்பதற்கு என்ற கருத்து இருப்பினும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகள் கூடுதலாகத்தான் மனதில் வரும்.
Heartfelt congratulations to @Rajkumar_KP on winning the National Award for Best Director, a deeply deserved honour for your clarity of directorial vision and storytelling. Kudos to @gvprakash for Best Background Music and @kalaivananoffl for Best Editing. Your work elevated Amaran at every step.
To @Siva_Kartikeyan and @Sai_Pallavi92, some performances transcend awards. Thank you for bringing such truth, grace and conviction to Amaran. Your portrayal of Major Mukund Varadarajan and Indhu will endure forever in Indian cinema history. Every accolade Amaran receives further immortalises the courage and sacrifice of Major Mukund Varadarajan.
For 46 years, @RKFI has championed cinema that entertains, enlightens and endures. These national honours reaffirm our commitment to authentic Indian storytelling that spreads joy and instils pride.
@turmericmediaTM
#Amaran #NationalFilmAwards
My dear @mammukka,
Congratulations on your fourth National Award. You once promised me you would overtake me in the number of National Awards. As always, you are a man of your word! Here's to many more accolades, my friend.
Congratulations as well to all the winners of the 72nd National Film Awards. Special congratulations to @Nagashwin7@vyjayanthifilms and entire #Kalki2898AD family. Indian cinema is richer because of your excellence.
Glad Simulacra has found a home on Waves OTT. There can be no greater satisfaction than seeing a work earn its place on the strength of its conviction.
It makes me especially happy to see Akshara as part of this endeavour. There is a quiet joy in watching a sincere film find its audience, one step at a time.
RKFI has always believed that independent cinema deserves encouragement, irrespective of where it comes from or who makes it. Supporting independent voices has been one of our enduring privileges.
The rest belongs to the discerning audiences. May they discover Simulacra with the generosity and curiosity with which it was made.
https://t.co/EZnmNkrnhF
#AksharaHaasan #Simulacra
இன்று நம் பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்க அன்பு நண்பர் பாரதிராஜா நம்மிடையே இல்லையெனினும் அவர் படைப்புகள் இருக்கின்றன. அவர் பாராட்டிய நட்பை என் நெஞ்சம் நெகிழ்ந்து நினைவுகூர்கிறது.
இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பூமணியின் மறைவு வருந்தற்குரியது. ‘கருவேலம்பூக்கள்’ படத்தின் வழியாக திரைக்கும் பங்களித்த மூத்தவரை இழந்து வருந்தும் குடும்பத்தாருக்கும், தீவிர தமிழிலக்கிய வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, என் ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு.
Precious minerals are not more precious than human lives or our environment. The extraction of any mineral, however valuable, must rest on two non-negotiables: informed consent of local communities and rigorous scientific assessment of its environmental and public health impacts. Without these, development loses its legitimacy.
I stand with the people of Kanyakumari in seeking a re-examination of the IREL project and the Government Order extending its land allocation. A one-year extension on paper can leave generations with irreversible health consequences. Tamil Nadu's coasts are living ecosystems, not just mineral deposits. Listen to the people. Protect our shores.
சுற்றுச்சூழலைவிட, மனித உயிர்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட்டு, பெறப்படும் முழுமையான சம்மதம். மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூர்வமான துல்லியமான ஆய்வு. இவை இரண்டும் இல்லையென்றால் அந்தத் திட்டம் தனது தார்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆர்.இ.எல் (IREL) திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
காகிதத்தில் கொடுக்கப்படும் ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழ்நாட்டின் கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள்.
மக்களின் குரலுக்குச் செவி கொடுங்கள். நம் கடற்கரைகளைப் பாதுகாத்திடுங்கள்.
@CMOTamilnadu
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.