நான் ஆதரவுனு கேக்காமலையே ஆதரவு குடுத்துட்டு இருந்தாங்க..
இப்ப நான் ஆதரவுனு கேட்டாலும் டைம் இல்லனு நக்கல் பண்ணிட்டு இருக்கானுங்க..
எல்லாம் உன்னால தான்டா
தற்குறி ஆட்சில விலைவாசிலாம் ஏறிக்கிடக்கு.பால் கிடைக்க மாட்டுது.பண்டிகைக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்க மாட்டுது.எட்டு மணி நேரம் கரண்ட் கட் ஆகுது.தூங்க முடியல.இதுல கடைசி இடத்துக்கு முந்துன இடத்துக்கு வர்ற உன் ரேசுக்கு ஆதரவு வேணுமாடா?
எங்க நாட்டுல எத்தனையோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு!
டெல்லி எல்லையிலே 720 விவசாயிகள் செத்துப் போனாங்க இந்தியா முழுக்க கொரோனா காலத்துல கொத்து கொத்தா உயிர்கள் போச்சு இன்னிக்கும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க இது எதைப் பத்தியும் உங்களுக்கு கவலையே கிடையாது
ஏதாவது ஒரு விஷயத்துக்காவது குரல் கொடுத்து இருப்பீர்களா? இன்றைக்கு உங்களுக்கு எதற்காக மக்கள் ஆதரவு தர வேண்டும்?
நீங்கள் வாழுங்கள் மக்களை வாழ விடுங்கள்!
#BREAKING | கொடைக்கானலில் அரசு நிலத்தை அபகரித்த முதலமைச்சர் விஜய்!
பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை குறிப்பிட்ட விஜயின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்!
#TVKVijayFails | #Highcourt | #KalaignarSeithigal
த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு
சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு
குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன.
🚨 சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது.
🚨 சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
🚨 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது.
வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர்.
❓காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா?
❓ சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா?
❓ காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?
❓குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது?
⚠️ தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது. அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.
⚠️ காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' #ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!
#விளக்கம் | மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ் விளக்கம்.
#SunNews | #Madurai
SK conducting fans meet
D na conducting fans meet
Lottery Star conducting fans meet with 4 fans
RK sir giving interviews
Meanwhile Tier 1 AK saab reporting from race track saar.
பணி நிரந்தரம் - சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.
ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது - மின்சாரத்தை நிறுத்துவது - உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் - மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் - அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.
செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு.
குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?
செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
தூய சக்தியின் தூய அரசியல்..
தாராபுரம் தொகுதி
குண்டடம் மேற்கு ஒன்றியம்
மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்..
மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்..
சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
#BREAKING | 2021ல் திமுக அதிகளவில் வென்ற தொகுதிகளில் சராசரியாக 30,000 வாக்காளர்கள் SIR மூலம் நீக்கப்பட்டிருப்பதாகவும் Businessline ஆய்வில் தகவல்
#SunNews | #SIR | #DMK | #TVK | #ECI
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!