பல வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது CM Cell மூலம் ஒரு புகார் அளித்தேன். ஊருக்கு சென்றிருந்த போது குற்றாலம் சென்றிருந்தேன். அப்பொழுதெல்லாம் அங்கே குளிக்கும் மக்கள் அங்கேயே சோப்பு போட்டு துணிகளை துவைப்பார்கள். சோப்பு பயன்படுத்த கூடாது என்று ஒரு அறிவிப்பை பலகையும் அங்கே இருக்கும். அதற்கு அருகிலேயே சோப்பு மற்றும் எண்ணெய் விற்பனை செய்யும் கடையும் வைத்திருப்பார்கள்.
இதை ஒரு படம் எடுத்து CM Cell மூலம் ஒரு புகார் அளித்தேன். அதற்கு பிறகு அதை மறந்துவிட்டேன். சிறிது நாட்களில் எனக்கு தாசில்தார் அனுப்பிய பதில் கடிதம் வீட்டுக்கு வந்தது. அதில் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பொது மக்கள் பங்களிப்பும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பிறகு என்னை தொலைபேசியில் அழைத்து விளக்கமும் கொடுத்தார்கள்.
ஆனால் அதை பெயர் மாற்றம் செய்து பல விளம்பரங்களுடன் வெளியிட்ட ஸ்டாலின் கடந்த 5 வருடங்களாக அதை குழி தோண்டி புதைத்து விட்டார். சென்னை போன்ற இடங்களில் மாநகராட்சி புகார்கள் மற்றும் ட்விட்டர் புகார்கள் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால் மற்ற மாவட்டங்களில், கிராமங்களில் புகார்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் CM Cell மிகப்பெரிய பங்கு வகித்தது. அதை காலி செய்த பெருமை திமுக அரசையே சாரும். அனால் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் 1000 ரூபாயும் இலவச பஸ்சும் இவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என்று நம்பி இன்று அழுது கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு நாள் காலை பள்ளிக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் இரண்டு மாணவர்கள் ஓடி வந்து ஏழாம் வகுப்பு சுகன் காலில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெஸ்க்கை யாரோ தள்ளிவிட்டு கால் வீங்குது சார் என்று கூறினார்கள்.சென்று பார்த்தபோது கால் சற்று வீங்க ஆரம்பித்திருந்தது. நான் அயொடெக்ஸ் எடுத்து தேய்த்து விட்டேன் நேரம் ஆக ஆக காலில் வீக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது உடனே அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு மருத்துவர் இரண்டு எமர்ஜென்சி கேசை பார்த்துக் கொண்டிருந்தார் செவிலியர், சார் ஒரு கால் மணி நேரம் ஆகும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார்.சரி அதுவரைக்கும் க்த்திருக்க வேண்டாமே என்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பைக்கில் போகும்போது இல்ல சார் வெயிட் பண்ணி இங்கேயே பார்ப்போம் சார் என்றான் சுகன். நான் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த தனியார் மருத்துவமனை சென்றவுடன் அந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க எழுதி கொடுத்தார் பக்கத்தில் எக்ஸ்ரே எடுக்க போய் அமர்ந்தோம். பணம் செலுத்த போகும் நேரத்தில் வேண்டாம் சார் நம்ம கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கே போயிடுவோம் சார் என்றான் அப்போது சற்றே கண்கலங்கி இருந்தது.ஏன் கண்கலங்குகிறாய் கால் ரொம்ப வலிக்குதா என்றேன். இல்ல சார் ஆயிரம் ரெண்டாயிரம் செலவானால் எங்க அம்மாவால கொடுக்க முடியாது சார் என்று தேம்பி அழ ஆரம்பித்தான். எங்க அப்பா வெளிநாட்டில் இருக்காங்கன்னு பொய் சொன்னேன் சார் எங்க அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு ரொம்ப நாளா பிரிஞ்சுதான் இருக்காங்க சார் என்றான்.எனக்கு வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு ,நீ ஏன் கவலைப்படுற எத்தனை ஆயிரம் செலவு வந்தாலும் நான் பாத்துக்குறேன் அம்மா கிட்ட கேட்க வேண்டாம் என்றேன் நான்... ரொம்ப நன்றி சார் என்றான் அழுது கொண்டே.. எக்ஸ்ரே எடுத்த பிறகு எலும்பில் ஒன்றும் பாதிப்பு இல்லை நரம்பில் அடிபட்டு இருக்கிறது அதனால் வீக்கம் என்றார் மருத்துவர் மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார் அனைத்தையும் வாங்கி அவர்கள் வீட்டில் கொண்டு விட்டு வந்தேன்.. உண்மையில் இளமையில் வறுமை கொடியது.. கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகளை நினைத்துக் கொண்டு வாழ்கின்ற குடும்பங்கள் இங்கே அதிகம் அதையும் தாண்டி பிரிந்து வாழும் போது அந்த குழந்தைகள் உண்மையில் மனதளவில் இது போன்ற கடினமான சவால்களை எதிர்கொள்கின்றார்கள்..மற்ற நேரங்களில் விவரம் புரியாத பையன் போல சுற்றி திரிவான்
விளையாட்டு பிள்ளையாகவே நினேத்திருந்தேன் ஆனால் அவன் குடும்ப நிலையை எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறான் என்று நினைக்கும் போது அவனைப்பற்றி பெருமையாக நினைக்க தோன்றியது.
Sanitation workers in Tirunelveli alleged that they have been served poor-quality food since Chief Minister MK Stalin inaugurated the scheme. “We experienced various health issues after consuming this food. When we demand proper wages, the government offers us poor-quality food instead. We are not slaves to food,” they said. The workers dumped the food in a dustbin in protest.
வடக்கின் சாதிய/மத ஒடுக்குமுறையின் உண்மைச் சம்பவ நிகழ்வுகளோடு, இரண்டு இளைஞர்களின் 'அரசு வேலை' எனும் கனவு நிறைவேறியதா என்பதை மிக மிக நெகிழ்ச்சியான திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். சிறுகிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் ஆழமான நட்பை அவ்வளவு நேர்த்தியாகக் காட்டிய விதம் மிக அருமை.படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
எந்த நொடியில் திரள் உடைந்து கண்ணீர் உகுக்கிறது என்பது உங்களின் மனக்கனிவைப் பொறுத்தது.
❤️
தென்காசி : தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் செயல் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
#Tenkasi#Diwali#Children
குறுக்கு வழியில் சீக்கிரம் பணக்காரன் ஆவது எப்படி?
Govt off குறிப்பாக RTO & வட்டாச்சியர் அலுவலகங்களில் பணம் கொடுக்காமல் எதுவும் நடக்காது . அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் சம்பளத்தை விட லஞ்சம் மூலம் வரும் வருவாய் அதிகம். ஆக படிச்சி எக்சாம் எழுதி அங்கு வேலைக்கு போவது முதல் ஐடியா.1/4