மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
//அவிநாசி கோகிலா மணி கூட ஆளைக் காணோம்//
நான் ரீல்ஸ் போடலன்னு, களத்துல இல்லன்னு அர்த்தம் இல்லை தோழர்.
போன வாரம் கோவையில் GenYZ Meet-up நடத்தினோம்.
நேற்று, திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராக்கியம்பாளையம் கலைஞர் அறிவாலய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டேன்.
இன்று, மாணவர் அணி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வேன்.
எங்கள் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் திராவிட பெண்கள்,
அன்றும் களத்தில் இருந்தோம்.
இன்றும் களத்தில் இருக்கிறோம்.
நாளையும் களத்தில் இருப்போம். 🖤❤️
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
#WATCH | ஆட்சியில் இருந்தபோது மக்களின் அன்பைப் பெற்று, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தித் தந்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆட்சியிலும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கக் கூடிய ஒரு இயக்கம் தி.மு.க. மக்களுக்காக என்றும் பாடுபடும் இயக்கமாக தி.மு.க உள்ளது. அதனால் தான் இன்று அனைவரும் தாய்க் கழகமான தி.மு.க-வில் இணைந்து வருகிறோம்.
- மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் விழாவில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பேச்சு!
#Dmk | #MKStalin | #Kalaignarseithigal
#WATCH | தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகிழ்ச்சியோடு, உறுதியோடு, உற்சாகத்தோடு இணைய வந்திருக்கும் அனைவரையும் வருக.. வருக.. வருக.. என வரவேற்கிறேன்.
- மாற்றுக் கட்சியினர் தி.மு.க-வில் இணையும் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
#MKStain | #Dmk | #Kalaignarseithigal
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் எனது தந்தையும் V.சுப்புராஜ் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🙏🙏
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.ரெங்கசாமி அவர்களுடைய அன்புத்தாயார் ஜெயலட்சுமி அம்மாள் அவர்கள் அண்மையில் மறைந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள அவர்களது இல்லம் சென்று அம்மையாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
அண்ணன் ரெங்கசாமி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
@durai944@Anbil_Mahesh@Murasoli_tnj
தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக அயலக அணி அமைப்பாளர் அண்ணன் முத்தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்பு மகன் தம்பி மலரவன் - காவ்யாஸ் இணையரின் திருமணத்தை ஒரத்தநாட்டில் இன்று நடத்தி வைத்தோம்.
தமிழ்நாட்டில் நிலவும் நடப்பு அரசியல் போக்கை எடுத்துரைத்து உரையாற்றினோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @durai944@Govichezhian@Anbil_Mahesh@Murasoli_tnj@RVaithilingamdm
தஞ்சை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய அண்ணன் டி.இராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி டி.ஆர்.முத்து - பிரியதர்சினி இணையரின் திருமணத்தை திருவோணம் அருகே சுக்கிரன்விடுதியில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள் பெரியாரும் - பகுத்தறிவும் போல, அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் - கழகமும் போல, தலைவரும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@durai944@Anbil_Mahesh@Govichezhian@SMeyyanathan@Murasoli_tnj
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.
வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.
திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.
அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரை சேரும்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் @mkstalin அவர்கள், பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள்.
பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும். #KBhagyaraj
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
சரியான Point VSB on Fire Mode🔥🔥
Headquartersல இருந்து 18 hard disks தான் திருடப்பட்டதுனு சொன்னாங்க...
ஆனா 40 hard disks recovered ஆச்சுனு சொல்றாங்க...
அப்படின்னா, அந்த additional 22 hard disks எங்கிருந்து வந்தது CTR? 🤡
திரு @svembu
படித்தவர் நீங்கள் நிச்சயம் தமிழ்நாடு அரசின் Single Window Portal மூலமாக தான் DTCP Approval வாங்க Apply செய்து இருப்பீர்கள்
இது இந்த 2026ஆம் ஆண்டு தென்காசியில் கொடுக்கப்பட்ட Approval பட்டியல். அனைத்தும் உடனுக்குடன் கொடுத்து இருக்கிறார்கள்
உங்கள் பள்ளியின் கட்டிடத்திற்கு DTCP Approval எப்போது Apply செய்தீர்கள்? எப்போது கிடைத்தது? என்ற தகவல் கொடுக்கலாமே.
Link
https://t.co/2XqLCQy1Hu
//we applied for DTCP approval to construct the new buildings.//
//We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed.//