தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .
தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே
#BharathiRaja 💐
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! 📋✨
தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். 💐
இது 'Result' தான், இதுவே ‘life' கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
நமது கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், 2025-26 கல்வியாண்டில் நாம் மேற்கொண்ட சீரிய பணிகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் சாதனை படைக்கும் என நம்புகின்றோம். மாணவச் செல்வங்கள் தங்கள் முடிவுகளை https://t.co/5M2gzTjSNe மற்றும் https://t.co/pbNPKpn34B இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு
வாக்களித்த தன் தொகுதி மக்களுக்கு தோல்வி என்ற போதும் நன்றி சொல்ல வந்துள்ள ஸ்டாலின் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி சுமார் 120 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இருவருக்கும் வயது 70+.. கடுமையான உழைப்பு. மறுக்கவே முடியாது. இன்னொரு பக்கம் சீமான் 234 இடங்களுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம், அவருடைய வேட்பாளர்கள் நிலை அதுக்கும் மேல்.
ஆனால் வெற்றி பெற்ற விஜய் மொத்தமா போனதே 18 இடம் தான். சொகுசு. அதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் லீவு வேற.... வெற்றி பெற்றதும் வந்து சந்தித்த முதல் நபர் திரிஷா...
தேர்தலுக்கே உழைக்க விரும்பாத ஒரு ஆளு எப்படியா ஓடி வந்து மக்கள் பிரச்சனைக்கு இரவு பகல் பார்க்காமல் உழைப்பான்!
வரும் நாட்களில் தான் இதன் உண்மை புரியலாம். உழைத்து , நேர்மையாக ஆட்சி கொடுத்தால் , அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பாராட்டலாம்... இல்லை வாக்களித்தவர்கள் வாக்கு கேட்டவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்..
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
ஜெயித்தாலும், தோத்தாலும், மண்ணைக் கவ்வினாலும் திமுக தான்...
நாகரிக அரசியலின் விலையை திமுக கொடுத்திருக்கிறது...
75 ஆண்டு கால கட்சி, insta influencer களிடம் தோற்றுப் போய் இருக்கிறது...
இன்பநதி, வாரிசு அரசியல், குடும்பக் கட்சி இதெல்லாம் மக்களுக்கு ஒரு மேட்டரே இல்லை...
கரூர் சம்பவத்துல, திமுக மீது insta influencer பழி போட்டபோது, அமைதி காத்தீர்கள்... அமைதியாக இருக்கும் போது அது உண்மை என்றுதான் சின்ன பசங்க நம்புவாங்க... அந்த மாதிரி மடை மாற்றிய ஏராளமான கெட்ட பெயர்கள் தான் திமுகவை, திரும்பத் திரும்ப சொல்ல வைத்து மக்கள் மனதில் பதிய வைத்து திமுகவை வீழ்த்தியது என்று சொல்ல வேண்டும்.
இளைஞர்களுக்கு, பெரியார் அண்ணா, கலைஞர் அவர்களின் போராட்டங்களை திரைப்படங்கள் மூலமாகவும், வெப் சீரிஸ் மூலமாகவும் நாம் நமது மாநில போராட்டங்களை துயர்களை இளைய தலைமுறை உடன் கடத்த தவறி விட்டோம் அல்லது அலட்சியமாக இருந்து விட்டோம்... அதன் விளைவு தான் இது...
இன்னொரு முக்கியமான விஷயம் திமுக சார்பா இன்னைக்கு இருக்கிறவங்க எல்லாரும் கஷ்டப்பட்டு வரலாறு தெரிஞ்சவங்க...
கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத, இப்போதைய இளைய தலைமுறையிடம், நம் அரசியலையும் போராட்டத்தையும் கொண்டு செல்ல தவறியதின் விளைவே இது...
திரும்பத் திரும்ப ஒரு பொய்ய சொல்லிக்கொண்டே இருக்கும் போது அது உண்மையாயிடும், அது சர்க்காரியா கமிஷன் விஞ்ஞான ஊழல் உதாரணம்...
அப்படி அதை எல்லாம் பேசியவர்களை அழைத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அழகு பார்த்ததின் விளைவு.
ஒரு சீட்டு கூட வர மாட்டார் விஜய் அப்படின்னு கணித்தபோது, கூட்டணி இல்லாமல் தனித்து தவெக முன்னிலை வகிக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்... அதேபோல இலங்கைத் தமிழர்களின் சினிமா ஆசையும் நாயக பிம்பமும், திமுக எதிர்ப்பும், விஜய் காண வெற்றி வாய்ப்பை கணிசமாக உயர்த்தி இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
திமுக நாகரிக அரசியல் மற்றும் social media influencer களை கவனிக்க தவறி கோட்டை விட்ட காரணத்தினால் தமிழக அரசியலில், ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கும் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தன்னை நம்பிய தமிழக மக்களுக்கு மாநில உரிமைகளுக்கு பங்கம் வராமல் ஆட்சி நடத்தினால் மகிழ்ச்சிதான்.... பார்ப்போம்.
2026 சட்டமன்றத் தேர்தலில்
முதல் பரிசாக தமிழக நாட்டு மக்களுக்கு கிடைக்கப் போவது, தமிழ்நாட்டில் மும்மொழி கட்டாயம்... கிக்கி பிக்கிலாம் பண்ணல... பிஜேபி மெய்யாலுமே உள்ள வந்துடுச்சு 🤣
Loading 2.0
Bjp ஆட்டம் ஆரம்பம்.
நிதர்சனத்தை ஏற்றுக் கொள்வதே ஜனநாயகம்...
தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்கப் போகும் வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்......
ஜாக்கிசேகர்
4-05-2026
இந்திய நேரப்படி நான் பகல் 12:30 மணி