சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
செய்தியாளர்களின் மைக்கைக் கண்டாலே எதோ கொரோனா வைரஸை பார்த்தது போல ஓட்டம் பிடிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்….
#KarurRun, #VillupuramRun என்று ஓட்டம் பிடிப்பதில் தங்கள் தலைவர் வழியையே பின்பற்றுகிறார்களோ என்னவோ..?!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை
பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்லை
பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
விசில் ஊதுங்கள்… ஊதிட்டாங்க ஒரேடியா..!!
தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டும் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது.
@actorvijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்?
மக்களால முடியல..!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து - ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது.
@TVKVijayHQ@TVKPartyHQ
ரெண்டே பேருக்கு நடுல தான் போட்டியே….
ஒன்னு ஜோசப் விஜய்…
இன்னொனு த.வெ.க.
என்னை தவிர யாருமே Powercenter இல்லன்னு சொன்னீங்களே… இப்படி கட்சி முழுக்க Powercenter ஆக மாறி நிற்பதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
முன்னாள் தமிழக முதல்வர்,
எங்கள் இதயதெய்வம் ,
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் துணைவியார் திருமதி. ஜானகி இராமச்சந்திரன் அம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று,
புரட்சித் தலைவரின் தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பைப் போற்றி வணங்குகிறேன்.
திருமதி. ஜானகி அம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2024-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு, அவர்தம் முழுவுருவப் படம் நமது தலைமைக் கழகக் கூட்ட அரங்கில் நிறுவப் பெற்றிருப்பதை இத்தருணத்தில் பெருமையொடு நினைவு கூர்கிறேன்.
@AIADMKOfficial
அது எப்படி யார் ஆளும் கட்சி ஆனாலும் யார் எதிர்க்கட்சி ஆனாலும் தமிழ்நாட்டைப் பற்றி நாட்டின் வளர்ச்சி பாதுகாப்பு பற்றி விவாதிக்க மாட்டீர்கள் உங்களுக்கு தேவை அதிமுக அதிமுக அதிமுக🤦?
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலமாக பல லட்சம் மக்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த , செயல் வீரர் @EPSTamilNadu அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
நலமுடன் வாழ்க பல்லாண்டு !!