முதலமைச்சர் @TVKVijayHQ 7ம் தேதியும் சட்ட அமைச்சர் @CTR_Nirmalkumar 8ம் தேதியும் சட்டமன்றத்தில் பேசியவற்றுக்கு தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial கருத்து தெரிவிக்கவில்லை என சமூக ஊடக கூலிப்படை அவதூறுகளை அள்ளி தெளித்து கூப்பாடு போட்டது.
8ம் தேதியன்று விபத்தில் மறைந்த கட்சியின் முன்னணி பொறுப்பாளர் புதுவை பொன் சிவந்தவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பும் வழியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தலைவர் அதிகாலைதான் சென்னை திரும்பினார்.
வேறு ஆள் வைத்து அறிக்கைகளை பதிவு செய்பவர் இல்லை தலைவர் எழுச்சித் தமிழர், அவரே எழுதி, பதிவு செய்பவர்.
மக்கள் பாதிக்க கூடிய பிரச்சனைகளில் உடனடியாகவும் மற்றவற்றில் தன்மைகேற்பவும் நேரம் எடுந்துக்கொண்டு பதிவு செய்வது வழக்கம்.
அப்படி தான் 9ம் தேதி தனது இது தொடர்பான தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இது தாமதம் என்றால், தலைவர் அறிக்கைக்கு பின்பே ஆசிரியர் அய்யா கி.வீரமணி@AsiriyarKV அவர்களும் இன்று திமுக தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களும் எதிர்வினையாற்றியுள்ளது காலதாமதம் ஆகாதா?
அனைத்தையும் விட கூட்டணி கட்சிகளின் கூட்டம் துவங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு இது தொடர்பான அறிக்கையினை வெளியிட்டதே, தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் துணிவிற்கும் நேர்மைக்கும் சான்றாகும்.
தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களை மட்டும் குறி வைத்து, அவர் எதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும், எப்போது அறிக்கை தர வேண்டும், அதில் என்னென்ன சொற்கள் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்பவர்களின் மேலாதிக்க போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது.
தமிழ் தேசியம், சாதி ஒழிப்பு,பெண் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, வர்க்க விடுதலை எனும் ஐம்பெரும் முழக்கங்களுடன் சமரசம் இல்லாமல் போராடும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வணங்கி மகிழ்கிறேன்.
@thirumaofficial#HBD_DrThiruma
@austin_buvan@TamilTheHindu நாட்டின் அனைத்து வளங்களையும் பாஜக அதானி, அம்பானி மற்றும் பெரும் முதலாளியிடம் விற்று விட்டது. நாட்டை காப்பாற்ற, அனைவரும் சமத்துவத்துடன் வாழ இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்.
பம்பரம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றது தேர்தல் ஆணையம். 2-க்கு மேல் போட்டியிடும் #விசிக பானை கேட்டால் 1% வாக்கு வேண்டும் என்கிறது. அதை பெற்றுள்ளோம் என்றாலும் தர மறுக்கிறது.
பானையில் 1 MP 4 MLA உள்ளோம். குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை MP MLA உள்ளனர்?