#பறையர்#வன்னியர் ஒற்றுமை மாநாடு
பறையர் வன்னியர் மாநாடு அழைப்பிதழை பாமக தலைவர் மருத்துவர் அண்ணன்
அன்புமணியிடம் வழங்கிய விழா குழுவினர்.
தமிழக அரசியலில் மாற்றத்திற்கான நேரம் இது.
#AnbumaniRamadoss#PMK#PMK2_0
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக பணியாற்றி மறைந்த, இசக்கி படையாட்சி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற அவரது திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சியில் மருத்துவர் அய்யா @drramadoss , தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்பி @draramadoss அவர்கள் உள்ளிட்ட தலைமை பொறுப்பாளர்கள் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் மறைந்த தெய்வத்திரு #இசக்கி_படையாட்சி அவர்களின் புகைப்படம் திறப்பு விழாவில் மருத்துவர் அய்யா @drramadoss மற்றும் பாமக தலைவர் @draramadoss வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தைலாபுரம் தோட்டத்தில்
பாமகவின் தலைமை நிலைய செயலாளர்
#இசக்கிபடையாட்சியாரின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய மருத்துவர் அய்யா
அண்ணன் அன்புமணி அவர்கள் ...
இன்னும் சற்று நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாச்சியார் அவர்களின் படத்திறப்பு மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் திறந்து வைக்க உள்ளார் 💐🇷🇴
சாதிவாரி கணக்கெடுப்பு; உடனடியாக கலந்தாய்வைத் தொடங்கி கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
“ஆதரவு பெருகுகிறது... இவரும் நன்றே சொல்லியிருக்கிறார்”
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பாரதிய ஜனதா எதிரி அல்ல.... அதேநேரத்தில் அது குறித்து விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மக்களிடையே சாதி வேறுபாட்டை அதிகரிக்கச் செய்து விடும் என்று கூறி வந்த பாரதிய ஜனதாக் கட்சி, அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் எதிர்க்கவில்லை என்று கூறும் அளவுக்கு வந்திருப்பதே வரவேற்கத்தக்க ஒன்று தான். சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
அதேநேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான இந்த நிலைப்பாடு ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டதாக இருக்கக் கூடாது. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான முதலாவது அரசில் உள்துறை அமைச்சராக இருந்த இராஜ்நாத்சிங் அவர்கள், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி வகுப்பினரின் விவரங்கள் திரட்டப்படும் என்று உறுதியளித்திருந்தார். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி பின்னாளில் காற்றில் விடப்பட்டதைப் போன்று இப்போதைய நிலைப்பாடும் மாறிவிடக் கூடாது.
2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் நடைபெறக்கூடும். அதை உண்மையாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது குறித்து ஆராயும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால், அதற்கான கலந்தாய்வுகளை இப்போதே தொடங்க வேண்டும். அதற்காக ஓர் ஆணையத்தை அமைத்து, 6 மாதங்களுக்குள் அதன் அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மத்தியில் ஆளும் கட்சி திறந்த மனதுடன் இருப்பதாக நம்ப முடியும்.
#CasteCensus #SocialJustice
காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்களுக்கு தட்டுப்பாடு; தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலுர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், அடியுரமாக இடுவதற்கான டி.ஏ.பி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட், பொட்டாஷ் ஆகிய உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தனியார் உரக்கடைகள் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களிலும் டி.ஏ.பி, மற்றும் பொட்டாஷ் உரங்கள் கிடைக்கவில்லை. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா நடவு பாதிக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பி சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்ய பெருமளவிலான உழவர்கள் முன்வரவில்லை. நிலத்தடி நீரை பயன்படுத்தும் வசதி கொண்ட உழவர்கள் மட்டும் தான் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தயாராகியுள்ளனர். அதனால் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்களின் தேவை குறைந்திருக்கும் போதிலும், அதைக் கூட தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக வினியோகிக்கப்படும் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள் இதுவரை விற்பனைக்காக சந்தைக்கு வராதது தான் இத்தகைய தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
காவிரி படுகை மாவட்டங்களில் காம்ப்ளக்ஸ் எனப்படும் கூட்டு உரங்கள் விற்பனைக்காக வந்துள்ளன. டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடியுரமாக பயன்படுத்தலாம் என்று உழவுத்துறை அதிகாரிகள் உழவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், டி.ஏ.பி. உரத்தின் சத்துகள் பயிர்களுக்கு உடனடியாக கிடைக்கும்; காம்ப்ளக்ஸ் கூட்டு உரங்களின் சத்துகள் பயிர்களுக்கு கிடைக்க நீண்ட காலம் ஆகும் என்பதால், அந்த ஆலோசனையை ஏற்பதற்கு உழவர்கள் தயாராக இல்லை. டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்களை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு ஆகும்.
நடப்பாண்டில் மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பா மற்றும் தாளடி நடவு தொடங்குவதற்கு முன்பாக டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. பொட்டாஷ் உரங்கள் முழுமையாகவும், டி.ஏ.பி. உரங்கள் பெரும்பான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவம் தொடங்கும் காலம் வேளாண் துறைக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால், மத்திய அரசிடம் பேசி சரியான நேரத்தில் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
ஏ வா வேலு ஓட வருமானவரி சோதனை செய்தியில் வரக்கூடாதுன்னு ரெண்டு நாளா இது ஒரு செய்தின்னு போட்டுக்கிட்டு இருக்கீங்க அடேய்
பத்திரிக்கை தர்மம் well done ரா 👏
#tnnews#tnmedia