Suddenly changed his plan to visit Karur instead of following his regular schedule.
Bussy announced that their leader would arrive in Karur at 12 p.m but he arrived 7–8 hours late.
Failed to provide basic necessities such as water, food, and other essential to the crowd.
Even the police advised him to stop the vehicle, but he refused and drove into the middle of the crowd. (Ironically, bruh thanked the police when he began his speech).
Due to the overcrowd, people started throwing things to their leader to get his attention. Meanwhile, bruh threw water bottles into the crowd.
When things went out of control, bruh stopped his speech and left the venue.
When reporters questioned him about the issues at the airport, bruh went home and took some rest instead.
When the deaths count increased, the so called saviour bruh and the top tier leaders went to court to protect their ass.
Lottery Lavda posted a tweet and deleted it within an hour. Meanwhile, their paid groups started blaming the DMK government.
A couple of days later, bruh released the "CM Saar" video with a trimmed beard and makeup. (At that point, I don't know whether his cadres were worried about whether their leader had eaten or not)
Started playing the victim card instead of taking accountability for the Karur victims.
Completely shifted the blame to the DMK government on the last day of the election campaign.
After becoming the Chief Minister of Tamil Nadu, bruh didn't even have time to visit his own constituency Perambur to thank the voters. Instead, he went to Trichy after resigning from his MLA post.
Likewise bruh went to Karur after purchasing an MLA from the ADMK for the by-election.
He is still playing the victim card and blaming the previous government for his own mistakes.
I've never witnessed a person like this in my entire life.
Ipdi lam ungaluku sollalam / kekkalam nu thonum, aana sethuponavanga kudumbamey selfie edukum pothu namaku enna nanba..!!
- Dev Sundar
கடந்த 10 அல்லது 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் இன்றைய தலைமுறையால் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றி பெறும் திரைப்படங்கள் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகின்றன என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை . நம்மோடு தொடர்பில் இருக்கும் 10 வயது குறைந்தவர்களிடம் கேட்ட போது அண்ணே ! உங்களுக்கு வயசாயிடுச்சு என நீ ஒரு பூமர் என்பதை நாகரீகமாகச் சொன்னார்கள் .
என்றாலும் நானும் தொடர்ந்து யோசித்துப் பார்த்ததில் வன்முறை , சைக்கோத்தனம் , ஊதாரித்தனம் இவற்றை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெறுவதாக தெரிகிறது . கதாநாயகன் கொஞ்சம் அடிதடி , அலப்பறை என இருப்பது ஒன்றும் புதிதல்ல . ஆனால் தனுஷ் போன்ற நடிகர்கள் ஊதாரித்தனமாக இருப்பது , அப்பா அம்மாவை அலட்சியப்படுத்துவது , விட்டால் உதைப்பது போன்றவற்றை வில்லத்தனத்திலிருந்து கதாநாயகத் தனத்துக்கு கடத்தினார்கள் . பின்னர் வில்லன் செய்ய வேண்டியதெல்லாம் கதாநாயகன் செய்வது தான் கெத்து என்பதாக மாறியது .
உச்ச நட்சத்திரங்களே ஒரு சைக்கோதனம் கலந்த வில்லன்களாக நடிக்க ஆரம்பித்தார்கள் . இரண்டாம் கட்ட கதாநாயகர்கள் படங்களில் கதாநாயகனுக்கு பதிலாக வில்லனுக்கு விசிலடிக்க ஆரம்பித்தார்கள் . உச்சநடிகர்கள் படத்துக்கு படம் யார் அதிக குரூர வன்முறையை வடிவமைப்பார்களோ அவர்களை சூப்பர் இயக்குநர்கள் என வாய்ப்பு கொடுத்தார்கள் . KGF போன்ற படங்களின் வன்முறையை பார்த்து goosebump வருவதாக பலர் சொன்னார்கள் . மாமன்னலும் பராசக்தியிலும் வில்லன்கள் கொண்டாடப்பட்டார்கள் . எதையும் மென்மையாக கையாளுவது பூமர்தனமாகவும் , சைக்கோத்தனமான வன்முறையும் , அறிவற்ற ஊதாரித்தனமும் கதாநாயகத் தன்மையாகவும் கெத்தாகவும் மாறி விட்டதாக தெரிகிறது .
சினிமாவைத் தாண்டி சமூகத்துக்குள்ளும் இந்த மனநிலை அழுத்தமாக ஊடுருவியிருப்பதை சமீபத்திய வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன .இது ஒரு சமூக வீழ்ச்சி !
நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர்.
அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?
அன்றைய தினம் கடும்மழையால் தென்மாவட்டங்களில் பல இரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?
தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா?
நிதியமைச்சர் அவர்களே!
மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள்.
இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள்.
@nsitharaman
கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?
பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
#StopHindiImposition