கிழிந்து தொங்கும் ஊழல் தவெகவின் முகமூடி! சொந்தக் கட்சிக்காரர்களிடமே பகல் கொள்ளையடிக்கும் கமிஷன் அரசு!
என் ஆட்சியில் லஞ்சம் இருக்காது, ஊழல் இருக்காது! நான்தான் இந்த ஆட்சியின் ஒற்றைப் பவர் சென்டர்! என்று கேமரா முன்னால் நின்று வீராவேசமாக ரீல்ஸ் விட்ட பொம்மை CM விஜய்யின் யோக்கியதை, இன்று உயர் நீதிமன்றப் படியேறி வீதிக்கு வந்து சந்தி சிரிக்கிறது!
அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை பகிரங்கமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு, சந்தையில் காய்கறி விற்பது போல அரசுப் பதவிகளை ஏலம் விடுவது வேறு யாருமல்ல, தவெகவின் தலைவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பொதுச் செயலாளரான அமைச்சர் ஆனந்தும், மாவட்டச் செயலாளர்களும்தானாம்!
இதைச் சொல்வது எதிர்க்கட்சிகள் அல்ல, சொந்தத் தவெக கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து முகத்திரையைக் கிழித்துள்ளார்!
மேடையில் மட்டும் தூய சக்தி நாடகம், ஆனால் திரைக்குப் பின்னால் கட்சியின் பொதுச்செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை அத்தனை பேரையும் கமிஷன் ஏஜெண்டுகளாக மாற்றி லட்சக்கணக்கில் பதவி பேரம்!
அரசுப் பதவிக்காகத் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடமே இரக்கமில்லாமல் லஞ்சம் பிடுங்கும் இந்த பித்தலாட்டக் கும்பல், எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரணப் பொதுமக்களிடம் ஒரு வேலைக்கு எவ்வளவு கமிஷன் கேட்பார்கள்?
ஊழல் வழக்குகளில் சிக்கிய பெருச்சாளிகளுக்கெல்லாம் வாஷிங் மெஷினாக மாறி அடைக்கலம் கொடுப்பதில் தொடங்கி, இன்று நேரடியாக லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பதவிகளை விற்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து நிற்கும் இந்தத் தவெகவை, இனிமேல் தமிழ்நாட்டைச் சூறையாட வந்த ஊழல் சக்தி என்றுதான் இனி அழைக்க வேண்டும்!
#TVKFails
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
ஒரே மாதத்தில் இரண்டு போதை ஊசி மரணங்கள். அதிர்ச்சி.!
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம்பெண் ஒருவர் மரணமடைந்தார்.
ஒரு மாத்திற்குள் இரண்டு போதை ஊசி மரணங்கள் நடந்துள்ளன. இளைஞர்கள் இடையே போதை ஊசி புழக்கம் இந்த ஒருமாதத்தில் அதிகரித்துள்ளதை இந்த சம்பவங்கள் உறுதி செய்கின்றன.
ஒருபக்கம் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக மராத்தான் ஓடி விளம்பரம் செய்யும் முதல்வர் விஜய் அவர்கள் , போதை பொருளை பயன்படுத்தியது போல thug life reels வெளியிட்டு போதை பொருளுக்கு Promotion செய்த அமைச்சர் சரத்குமார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்..?
திரைப்படங்களில் போதை பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பாட்டு பாடி இளைஞர்களை தவறாக வழிநடத்தியது போல இப்போது இப்படி மறைமுகமாக பொது வெளியில் போதை பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறாரா .?
இன்னும் எத்தனை இளைஞர்கள் போதை ஊசியால் மரணமடைய வேண்டும். எப்போது தான் மக்கள் பிரச்சினைகள் பற்றி வாய் திறக்க போறீங்க cm sir.?
#TVKFails
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து அதற்கு பதிலாக ‘வி பி ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது, அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து மாண்புமிகு பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு, அதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியது தி.மு.கழகம். அன்று தி.மு.கழக கூட்டணியில் இருந்த கட்சிகளும் இதனை எதிர்த்தது.
ஆனால் இன்று எந்த எதிர்ப்பும் இன்றி, பா.ஜ.க.வின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் த.வெ.க அரசு - ‘உத்தரவு எசமான்’ என நாளை முதல் தமிழ்நாட்டில் ‘வி பி ஜி ராம் ஜி’ அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில், வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலையும், உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கும், இதனை நம்பியுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கும் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என முதலமைச்சர் விஜய் அறிவாரா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது, மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் கஜானா காலியாக இருக்கு என பேசிய விஜய் இப்போது எந்த கஜானாவில் இருந்து இதற்கு செலவழிக்கப் போகிறார்? ஆட்சிக்கு வந்த உடனே பா.ஜ.க.வின் உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்தை அமல்படுத்த துடிப்பது ஏன்?
இப்போது த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் + இதர கட்சிகள் இது த.வெ.க அரசின் முடிவு என முட்டக் கொடுப்பார்களா? இல்லை கொள்கை நிலைப்பாடு எடுத்து இதனை எதிர்ப்பார்களா?
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
மகா யோக்கியரைப் போல சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், அமைச்சர் சரத்குமாரின் பதவியை பறிப்பாரா? அல்லது தனது நாற்காலியைக் காக்க சரத்குமாரைக் காப்பாற்றுவாரா?
#முரசொலி#DismissPowderMinister
இது கவனத்தை ஈர்ப்பதற்கான டிரெய்லர் மட்டுமே. அடிக்க அடிக்க ஜொலிக்கும் வைரம் போல தி.மு.கழகத்தின் படை சிறைக்கெல்லாம் அஞ்சாது. போராட்டம் இனியும் தொடரும்.
- முன்னாள் அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள்
#DismissPowderMinister
தஞ்சை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய அண்ணன் டி.இராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன் தம்பி டி.ஆர்.முத்து - பிரியதர்சினி இணையரின் திருமணத்தை திருவோணம் அருகே சுக்கிரன்விடுதியில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள் பெரியாரும் - பகுத்தறிவும் போல, அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் - கழகமும் போல, தலைவரும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@durai944@Anbil_Mahesh@Govichezhian@SMeyyanathan@Murasoli_tnj
இன்னைக்கு தமிழ்நாட்டுடைய சட்டம் ஒழுங்கு எந்த அளவுல இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு அதலபாதாளத்துல படுகுழியில இன்னைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளி இருக்காங்க.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
நம்ம ஆட்சி மேல இருந்த நம்பிக்கையிலதான் தமிழ்நாட்டை நோக்கி, பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து, உலகளவிலே மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்துச்சு நமக்கு. வந்து சேர்ந்துச்சு, தொழில் தொடங்கினாங்க.
ஆனா இப்போ, ஆட்சி மாற்றம் நடந்திருக்கு. இந்த ஆட்சி மாற்றம் வந்து, ஒரு மாசத்திலேயே தமிழ்நாடு இன்றைக்கு அதல பாதாளத்திற்குப் போகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கு.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.ரெங்கசாமி அவர்களுடைய அன்புத்தாயார் ஜெயலட்சுமி அம்மாள் அவர்கள் அண்மையில் மறைந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள அவர்களது இல்லம் சென்று அம்மையாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
அண்ணன் ரெங்கசாமி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
@durai944@Anbil_Mahesh@Murasoli_tnj