திரு. @TVKVijayHQ அவர்களின் ஆட்சியில் தொடர்ந்து அரங்கேறும் மின்வெட்டுக்கு தீர்வு காணாமல் போலி வாக்குறுதிகளை சட்டப் பேரவையில் சொல்லி மக்களை ஏமாற்ற நினைப்பதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும்.
வினாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... 🐘
நண்பர்களே,
விநாயகர் சதுர்த்திக்கு நம்ம ஊர்ல அவல், பொரி, கனி, சிதறுகாய்லாம் ரொம்ப பக்திையோட படைப்போம். ஆனா அதுக்கு பின்னாடி இருக்கிற ஆழமான ஆன்மீகத் தத்துவம் என்ன தெரியுமா? தெரிஞ்சுப்போம் வாங்க!
1. அவல் படைப்பதன் ரகசியம்:
அவலை அரிசியில இருந்துதான் செய்றோம். உரல்ல போட்டு அது படும்பாடு இருக்கே... எந்த அளவுக்குக் கடுமையா இடிபடுதோ, அந்த அளவுக்கு சுவையான அவல் நமக்குக் கிடைக்குது. மனிதனாப் பிறந்த நாமளும் அப்படித்தான்! வாழ்க்கைல பசி, வறுமை, நோய்னு எத்தனையோ சோதனைகள்ல சிக்கி அடிபட்டுத்தான் பக்குவப்படணும். அதுக்காக ஆண்டவனைப் பார்த்து நம்ம கஷ்டத்தச் சொல்லி ஒருபோதும் வருத்தப்படக் கூடாது. நாம பண்ற கர்மாதான் இதுக்குக் காரணம். சின்ன எறும்புக்குக் கூட தீங்கு நினைக்கக் கூடாது; மீறி செஞ்சா அதுவே அடுத்த பிறவியில நம்மளத் துரத்தும்.
2. பொரி எதற்காக?
நெல்லை நிலத்துல வச்சோம்னா அது மறுபடியும் முளைச்சு வரும். ஆனா, அதே நெல்லை வறுத்து பொரியா மாத்திட்டோம்னா அதுல முளைக்கிற சக்தி போயிடும். இதான் தத்துவம்! மனிதா, நீ நெல் மாதிரி மறுபடியும் இந்த பூமிக்கு அலைஞ்சு பிறக்கக் கூடாது; பொரி போல மாறி மறுபிறவிங்கிற பேச்சையே விட்டுட்டு ஆண்டவன் திருவடியைச் சேரணும்.
3. கனி படைப்பதன் தத்துவம்:
உழைச்சுப் பணம் சேர்க்கிறதுல எந்தத் தவறும் இல்ல. பொண்டாட்டி, பிள்ளை, குடும்பம்னு சொத்து சேர்த்து வைக்கலாம். ஆனா உன்னோட குடும்பம் மட்டும் இல்லாம, இந்த உலகத்துக்கு நீ என்ன நல்லது செஞ்ச? குறைந்தபட்சம் யாராவது ஒருத்தருக்கு அன்னதானமாவது பண்ணியிருக்கியான்னு யோசிச்சுப் பார். பழுத்த கனி மரத்திலிருந்துகிட்டு ஒருநாள் கீழ உதிர்ந்து விழுந்துடும்; அதுபோல நம்ம ஆயுளும் முடிஞ்சுடும். அதனால காய் பருவத்துலயே (வாழும்போதே) நல்ல காரியங்களைச் செஞ்சிருங்க.
4. சிதறுகாய் உடைப்பது ஏன்?
எந்தவொரு சுபகாரியத்தை ஆரம்பிச்சாலும் விநாயகரை நினைச்சு சிதறுகாய் உடைக்கிறதை வழக்கமா வச்சிருக்கோம். ஏன் தெரியுமா? ஒருமுறை விநாயகர் யாகம் செய்யப் போகும்போது ஒரு அசுரன் குறுக்க வந்து வழிமறித்தானாம். அப்போ விநாயகர் தன் கையிலிருந்த தேங்காயை அந்த அசுரன் மீது வீச, அது கல்லில் பட்டு எப்படி நொறுங்கிப் போச்சோ, அதே மாதிரி அந்த அசுரனும் அழிஞ்சு போனானாம்! அதனாலதான் நம்ம வாழ்க்கையில வரக்கூடிய தடைகளும் இப்படிச் சிதறிப் போகணும்னு சிதறுகாய் உடைக்கிறோம்.
விநாயகர் அருள் நம்ம எல்லோருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்!
கஜமுக பாத நமஸ்தே.. விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி! 🙏
அன்புடன்
தேஜஸ் 🙏
ஜோதிடம் & வாழ்வியல் வழிகாட்டி
ஃபோர்ட்டலேசா பிரேசில்.