உலகை வென்ற அலெக்ஸண்டரும் வீழ்ந்தான்!
கங்கை வரை புலிக்கொடி நாட்டிய சோழனும் வீழ்ந்தான்!
கல்வி கண் திறந்த காமராசர் வீழ்ந்தார்!
நாளொரு நலத்திட்டம் தந்த திராவிட நல்லாட்சியும் வீழ்ந்தது!
உழைத்தவரும், அழியா புகழ் கொண்டோருமே வீழும் போது.,
களம் காணாமல், மக்கள் வலி புரியாமல், மக்களுக்காக போராடாமல் குறைந்தபட்ச குரல் கூட கொடுக்காமல் கிடைத்த அரியாசனங்கள் எல்லாம் எம்மாத்திரம்...!
திட்டமிடப்படாத,நடைமுறைக்கு சிறி தும் ஒவ்வாத தேர்தல் வாக்குறுதி களை அள்ளித் தெளித்துவிட்டு, அரசுக்கு வந்ததும் கஜானா காலி என்று வெள்ளை அறிக்கை அளிப்ப தன்மூலம் அரசியல் கட்சிகள் சாதிப் பது மக்களை ஏமாற்ற முனையும் மந்திரஜாலமே.!
தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 3.75 லட்சம் 😎
இதெல்லாம் எப்படி வந்தது
2000 வருசம் ஆண்ட ஆரியத்துக்கு உருமி அடிச்சு
திராவிட சித்தாந்தம் தலை எடுத்து
அனைவருக்கும் கல்வி என்ற சூழ்நிலையை உருவாக்கியதால் வந்ததுடா தற்குறிகளா
திராவிடம் " Power House " 🔥
அறப்போர் இயக்கம் என்கிற பேருல ஒருத்தன் திமுக அரசுக்கு எதிரா அக்கப்போர் பண்ணிக்கிட்டு இருப்பான் . ரோட்டோரத்தில் ஒரு திமுக கொடி இருந்தாலே கொதிச்சு எழுந்துடுவான் . கொஞ்ச நாளா எங்கபோயி ஓடி ஒளிஞ்சான்னு தெரியல
மாநில உரிமை சுயாட்சி பற்றி பேசாத
மொழி உரிமை பேசாத
சுயமரியாதை சமத்துவம் சமூகநீதி பேசாத
ஏன் அரசியலே பேசாத மக்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளது விஜய் ஆட்சி.
பாஜகவுக்கு எவ்ளோ வசதி பார்த்தீங்களா
இதெல்லாம் இனி கிடைக்குமா?
சினிமா மோகத்தில் சிக்கிய தமிழ்நாடு
பேரப்பிள்ளைகள் சொன்னகால் ஒட்டுப் போட்ட பாட்டிகள்.
கவலை வேண்டாம் இதெல்லாம் மீண்டும் கிடைக்கும்.
1. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2. மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3. காலை உணவுத் திட்டம்
4. புதுமைப்பெண் திட்டம் 5.1000
45. தமிழ்ப்புதல்வன் திட்டம் 3.1000
6. நான் முதல்வன் திட்டம்
37. கல்லூரிக் கனவு திட்டம்
48. சிகரம் தொடு திட்டம்
9. உயர்வுக்குப் படி திட்டம்
10. பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11. வெற்றி நிச்சயம் திட்டம்
12. தொழி விடுதிகள்
13. மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14. சுய உதவிக் குழுக்கள்
15. பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
2015, மக்களைத் தேடி மருத்துவம்
17. அன்புச்சோலை மையங்கள்
18. கலைஞரின் கனவு இல்லம்
19. தாயுமானவர் திட்டம்
20. அன்புக் கரங்கள் திட்டம்
21. கல்லூரி கனவுத் திட்டம்
41. கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
22. சமூகநீதி விடுதிகள்
42 விசைத்தரி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
23, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24. சிறகுகள் திட்டம்
25. பாலின வள மையம்
26. இல்லம் தேடி கல்வி
27. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28, அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
28. அனைத்து சாதியினரும் அர்ச்சுகர் ஆகும் சட்டம்
30. திருக்கோயில்களில் குடமுழுக்கு (4180)
231. மதநல்லிணக்கம்
32. பெண்கள் பாதுகாப்பு
43. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44. சிறதானிய திருவிழாக்கள்
45. சிறுதானிய உணவுப் போட்டிகள்
46. மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47. தொல்குடித் திட்டம்
48. தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49. முத்தமிழ்றிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50. இன்னுயிர் காப்போம்-நம்லைக் காப்போம்
51. ஊட்டச்சத்தை உறுதி செய்
33. மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
52 மாபெரும் தமிழ்க் கனவு
34. தமிழ்நாடெங்கும் டைட்ஸ் & மினி டைட்ல் பூங்கா
35. சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36. திசைதோறும் திராவிடம் திட்டம்
53. விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55. கலைஞர் கைவினைத் திட்டம்
56. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
57. நலம் சுக்கும் ஸ்டாலின்
58. கலைஞர் நூற்றாண்டு நாலகம்
59, உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
59. முதலமைச்சர் சிறு வினபைப்ரங்கம்
60. மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61. வேர்களைத் தேடி திட்டம்
376. பொருளாதார வளர்ச்சி 11.19%
62. தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
77. முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
63. கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
54. ஒலிம்பிக் அகாடமி
விளையாட்டுத் திடல்
66. சிற்பி திட்டம்
67. முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68. பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம் 86.
78. கோவை செம்மொழி பூங்கா
79. மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80. விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81. அத்திக்கடவு-அவினாசி நீரேற்றும் திட்டம்
82. பாசன வேளாண்மை நவீளமயமாக்கல் திட்டம்
83. மாதிரிப் பள்ளிகள்
84. மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
50 85. பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
நமக்கு நாமே திட்டம்
69. ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70. அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71. பெரியார் பிறந்த நான் சமூகநீதி நாள்
72. பரவவான வளர்ச்சி
73. டைடல் & மினி டைட்ல் பூங்காக்கள்
74. முதலீடுகள் 12 இலட்சம் கோடி
75. வேலைவாய்ப்பு 36 இலட்சம் நபர்களுக்கு
87. கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88. TABCEDCO குழுக் கடன் திட்டம்
99. முதலவரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90. திவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91. நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92 பிங்க் ஆட்டோ
93. SMART வகுப்பறைகள்
94 தொல்குடி திட்டம்
95. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
95. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
297. உணவுப்பூங்கா
98. மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
199. அறிவுசார் நகாம்
100. நீங்கள் நலழர் திட்டம்
இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களும் - வளர்ச்சியும் தொய்வின்றி தொடரவேண்டும்..!!
எண்கள் மாறி மாறி இருக்கும் கீழே உள்ள படத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
பாரதிராஜா இறுதி சடங்கில் முட்டிக் கொண்ட உறவுகள்.
நமக்கு அதில் நிறைய பாடங்கள் இருக்கிறது..!!
மனோஜ் நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு மகள்கள். பாரதிராஜவின் மகள் ஜனனி திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறி உள்ளார்.
மனோஜ் மறைவிற்கு பிறகு உடைந்திருந்த பாரதிராஜா மிகவும் தளர்ந்து போனார். மனைவி தேனி போய்விட்ட நிலையில் மகளும் மலேசியாவில் மருமகளும் உடனில்லாது பாரதிராஜாவை கவனித்து கொண்டவர்கள் நியமிக்கப்பட்ட நர்சுகள்.
பாரதிராஜா மரணத்திற்கு பிறகு அவரை நல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தான் மேற்படி முட்டல் மோதல்கள் நடந்தேறி உள்ளது.
மருமகள் நந்தனாவையும் பேத்திகளையும் பாரதிராஜாவின் மகள் ஜனனி அந்த நிகழ்வில் பங்கேற்கவிடாது தகராறு செய்திருக்கிறார். சேரில் அமர்ந்திருந்த நந்தனாவின் கைகளை முறுக்கி எழுப்பி விட.. நந்தனாவின் மகள்கள் அழுதபடி நின்றிருக்கிறார்கள். ராதிகா ஓடி வந்து இரு தரப்பிடமும் கைகளை கூப்பி மன்றாடி பிரச்னை பெரிதாகாமல் தடுத்திருக்கிறார்.
ஏற்கனவே தனது பெயரில் பாரதிராஜா வாங்கியிருந்த அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் நந்தனாவை காலி செய்யுமாறு ஜனனி போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
பாரதிராஜா இறுதி சடங்கை ஒட்டி வெளியே வந்த குடும்பத் தகராறுகளை பார்த்த போது ஒரு விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றியது.
உலகத்துக்கே காதல், பெண் முன்னேற்றம், பெண் சொத்துரிமை, ஜாதி மறுப்பு என்று பாடம் எடுத்த பலரது குடும்பங்களிலும் கூட இறுதியில் வந்து நிற்பது மனித உறவுகளின் சிக்கல்கள்தான்.
இங்கே யார் சரி? யார் தவறு?
என்று நமக்கு தெரியாது,தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.
மனிதர்கள் சண்டை போடுவது பெரும்பாலும் கொள்கைகளுக்காக அல்ல.
உரிமைகளுக்காக... பாதுகாப்புக்காக.. எதிர்காலத்திற்காக.. சில நேரங்களில் பணத்திற்காக.
சில நேரங்களில் பணம் என்ற பெயரில் கிடைக்கும் அங்கீகாரத்திற்காக.
ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்க ஒரு ராஜ்ஜியத்தை கட்டியிருக்கலாம்.ஒரு தலைமுறையையே பெரிய அளவில் பாதித்திருக்கலாம். "சூப்பர்ஸ்டார்" என்று கொண்டாடப்பட்டிருக்கலாம்.
ஆனால்... அவருக்கு பிறகு அவருடைய குடும்பம் அமைதியாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை அவையெல்லாம் கொடுக்காது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... 'புகழ்' என்பது எப்போதும் தனிப்பட்ட சொத்து."நிம்மதி" என்பது குடும்ப சொத்து.
ஒன்று இருந்தால் மற்றொன்றும் இருக்கும் என்று எந்த விதியும் இல்லை.
நிறைய நேரங்களில் உலகம் அறிந்த வெற்றியாளர்கள்...வீட்டுக்குள் தோற்றவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல்...
உலகம் அறியாத சாதாரண மனிதர்கள்...
தங்களுக்கு பின்னால் சண்டையில்லாத குடும்பத்தை விட்டுச் செல்கிறார்கள்.
ஒரு மனிதன் எவ்வளவு சம்பாதித்தான் என்பது முக்கியமான கேள்வி இல்லை.
அவன் போன பிறகு... அவன் சம்பாதித்ததை வைத்து அவனுடைய பிள்ளைகள் அடித்துக் கொண்டார்களா?அல்லது ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்களா? என்பதே முக்கியமான கேள்வி.
ஏனென்றால்...ஒரு மனிதனின் உண்மையான உயில் அவன் எழுதி வைத்த பத்திரம் மட்டும் அல்ல.அவன் உயிரோடு இருக்கும்போது உருவாக்கி வைத்த குடும்ப சமநிலையும் தான். அதை சட்டத்தால் எழுத முடியாது.பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.வாழும் காலத்திலேயே கட்டமைக்க வேண்டும்.
#Bharathiraja
“நான் பண்ணைப்புரத்துக்கு சுகாதாரப் பரிசோதகரா வந்தப்ப
பாஸ்கர் தான் முதலில் ஒட்டிக்கிட்டான்
அப்புறமா கங்கை அமரன் சர்ச் இல் நடக்கும் பிரசங்கத்துக்குக் கூட்டிட்டுப் போவான்
ராஜா தன்னோட வீட்டுக் கதவில் கம்பி கட்டி வாசிப்பான், மூங்கிலைச் சுட்டுப் புல்லாங்குழல் ஆக்குவான்,
அப்புறம் ஒன்றாக நாடகம் போட்டோம்”
இப்படி பாரதிராஜா பண்ணைப்புரம் சகோதரர்களைச் சந்தித்த கதையைச் சொல்லி இருப்பார்.
“நமக்கு வாய்ப்புத் தேடி ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்குவார் அண்ணன் பாஸ்கர்”
என்று இளையராஜா தன் சகோதரர்களைப் பற்றிச் சொல்லி இருப்பார்.
பாஸ்கர் எண்பதுகளின் இறுதிவரை இளையராஜாவுக்காக இயங்கிய ஒரு நிழல் பொதுசனத் தொடர்பாளர்.
அவரைப் போல போல ஒரு இயல்பான, நட்பான மனிதரைப் பார்க்கவே முடியாது என்பார் சித்ரா லட்சுமணன்.
“என்னோட மருத்துவச்சி (அன்னக்கிளி) கதை இளையராஜா இசையில் தான் வரணும்னு இருந்தேன்”
என்பார் கதாசிரியர் செல்வராஜ்.
அவரே பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி அன்னக்கிளி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கிறார்.
“இவங்க பாவலர் சகோதரர்கள் என்னோட சகோதரர்கள் மாதிரி” என்று எஸ்பிபிக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் பாரதிராஜா. எஸ்பிபியோடு கூட்டணி போட்டுப் பாட்டுக் கச்சேரிகள் நடத்தினார்கள்.
இளையராஜா இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இடம் உதவியாளராகச் சேர்ந்த பின்னர், புட்டண்ண கனகல் இன் பெல்லி மோடா கன்னடப் படத்தைப் பார்த்த பாரதிராஜா அவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்த, ஜி.கே.வெங்கடேஷ் உதவுகிறார். அது குறித்து இன்னொரு விரிவான பகிர்வைப் பகிர்கிறேன்.
மேற்கண்ட வரலாறு எல்லாமே தானாக வந்தது. காலம் அவர்களை ஒன்று சேர்த்தது.
சாதனையாளர் ஆனார்கள்.
இதை வைத்தே அற்புதமானதொரு திரைக்கதை அமைக்கலாம்.
வெற்றியை காலமும், சந்தர்ப்பமும் தீர்மானிக்கும். அது எல்லாமே முற்கூட்டியே நம்மை அறியாமல் தீர்மானிக்கப்பட்ட கணக்கு.
கானா பிரபா
இரவு 2:13 — சில்வர் ஓக் ரெசிடென்சி
பாதுகாப்பு காவலாளியான ராம்கிஷன், பிரதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் அமர்ந்திருந்தபோது அறியாமலே ஒரு கணம் தூங்கிவிட்டார்.
அவர் பணியில் இருந்தபோது, தவறுதலாக கூட தூங்கியது இதுவே முதல் முறை.
அதுவும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே.
அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத் தலைவரின் மகன் காரில் அங்கு வந்தார்.
ராம்கிஷன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், ஏளனமாக சிரித்தபடி தனது மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
வீடியோ பதிவு செய்யும்போது அவர் கூறினார்:
“இவரைப் பாருங்கள்… நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர், நம்மிடம் இருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்!”
உடனே அந்த வீடியோவை குடியிருப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
காலை ஆகும் முன்பே கருத்துக்கள் குவியத் தொடங்கின:
❌ “இவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்.”
❌ “இது மிகப்பெரிய அலட்சியம்.”
❌ “இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வேலைக்கு தகுதி இல்லை.”
இவ்வாறு 150-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவானது.
ஆனால், அவர் ஏன் தூங்கிவிட்டார் என்று ஒருவர்கூட ராம்கிஷனிடம் கேட்கவில்லை.
காலை 6:05
ராம்கிஷன் குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேசையை கோபமாகத் தட்டியபடி தலைவர் கேட்டார்:
“உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?”
ராம்கிஷன் அமைதியாக தனது தொப்பியை கழற்றினார்.
அவரது கண்கள் கடும் சோர்வால் சிவந்திருந்தன.
பின்னர் மெதுவாக அவர் கூறினார்:
“சார், நேற்று மதியம் 2 மணிக்கே நான் பேலைக்கு வந்துவிட்டேன்.”
“மற்றொரு காவலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஷிப்டையும் நான் பார்க்கும்படி ஏஜென்சி கேட்டது. அதற்காக கூடுதலாக ₹300 தருவதாகவும் சொன்னார்கள்.”
“இரவு ஒரு மணியளவில், பின்புறச் சுவரைத் தாண்டி உள்ளே வர முயன்ற மூன்று இளைஞர்களை நான் விரட்டியடித்தேன்.”
“பிறகு 1:45 மணிக்கு, ஒரு குடியிருப்பாளர் தனது நாய் புரூனோவுக்கு பால் சூடாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார்.”
“2:10 மணிக்கு தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன்… அப்போதுதான் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.”
அவரது வார்த்தைகளைக் கேட்டதும் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
“என் மாத சம்பளம் ₹12,000.”
“அதில் ₹4,000 வீட்டு வாடகைக்கு செல்கிறது.”
“₹2,000 என் கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறேன்.”
“மீதமுள்ள தொகையில் என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”
“நான் தினமும் அவனிடம் சொல்வேன் — ‘நன்றாகப் படி மகனே… இல்லையென்றால் ஒருநாள் வாழ்க்கை உன்னையும் மற்றொருவரின் வாசலில் தூக்கமின்றி நிற்க வைக்கும்’ என்று.”
தடுமாறிய குரலில் இதைச் சொல்லிவிட்டு அவர் ஒரு கணம் நின்றார்.
பிறகு தலைநிமிர்ந்து கூறினார்:
“என் பலவீனத்தின் மூன்று நிமிடங்களை நீங்கள் பதிவு செய்தீர்கள்.”
“ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த குடியிருப்பைப் பாதுகாக்க நான் தூக்கமின்றி கழித்த ஆயிரக்கணக்கான இரவுகளை யாரும் பதிவு செய்யவில்லை.”
“மனிதர்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று கடவுள் நினைத்திருந்தால்… நம்மை இயந்திரங்களாகவே படைத்திருப்பார்.”
அவர் பேச்சை முடித்தார்.
அறையில் இருந்த யாராலும் அவரது கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை.
அன்றைய மாலை, குடியிருப்பின் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றியது:
✔️ ஒவ்வொரு ஷிப்டிற்கும் இரண்டு காவலாளிகள்
✔️ அதிகபட்சம் 8 மணி நேர பணி
✔️ சம்பளம் ₹18,000 ஆக உயர்வு
✔️ கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியம்
ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதல் செலவு: மாதம் ₹200
அறிவிப்பின் கீழே ஒரு வரி:
“பாதுகாப்புச் சேவையை நாம் வாடகைக்கு எடுக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வாங்க முடியாது.”
இரவு 10:00
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராம்கிஷன் சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வாசலருகே வந்தபோது, தலைவரின் மகன் அவரை நிறுத்தினார்.
ஹெல்மெட்டை கழற்றியபடி மெதுவாகக் கூறினார்:
“அங்கிள்… நான் அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.”
“நாளை முதல் இரவு தேநீர் என்னுடைய செலவு.”
ராம்கிஷன் புன்னகைத்தார்.
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது.
முன்கூட்டியே தீர்ப்பு வழங்கி யாரையும் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் பின்னாலும் நமக்குத் தெரியாத ஒரு பெரிய வாழ்க்கைக் கதை இருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள பழகுவோம்… ❤️
-படித்ததில் பிடித்தது
#WATCH | “தமிழ் எங்கள் மொழி.. தமிழ் எங்கள் அடையாளம்”
ஜெர்மன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்தோ - ஜெர்மன் நட்புறவு அமைப்பின் கூட்டத்தில் திமுக எம்.பி. அருண் நேரு பேச்சு
#SunNews | #Germany | #ArunNehru
மோடி சில மாதங்களுக்கு முன்பு வந்த போது அவருக்கு எதிராக கடல் என திரண்டு
ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரசார்.இவர்களால் திமுக ஜெயித்தது என்று சொல்ல காங்கிரஸ் காரன்களுக்கு வெட்கமா இல்லையா?
ஒரு திமுக ஆதரவாளராக, கட்சி தோற்றதால் எனக்குச் சிறிதளவும் வருத்தமில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் தோற்றது திமுகவோ, அதிமுகவோ, பாஜகவோ அல்லது பிற கட்சிகளோ அல்ல; தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால மக்களாட்சிப் பாரம்பரியம்தான் வீழ்ந்துள்ளது. மக்களைச் சந்திக்காத, மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்காத, தனது குறைந்தபட்ச அரசியல் செயல்திட்டம் என்னவென்றே சொல்லத் திராணியில்லாத, நிஜ உலகில் நிழல் கூடப் படிந்திராத ஒரு கூட்டத்திடம், எந்தக் கேள்வியும் இன்றி ஒரு மாபெரும் மாநிலம் தூக்கி வீசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை நேசிக்கும் எவரையும் இந்தச் சூழல் நிச்சயம் பாதிக்கும்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களே பாடி, கருத்தம்மாவில் வந்த இந்த 'காடு பொட்டக்காடு' பாடலைத்தான் நான் திரைப்படக்கல்லூரி மாணவனாக இயக்கிப் பயிற்சி பெற்றேன்.
அவர் படைப்புகளின் பாதிப்பு இல்லாமல் இயக்குநர்கள் இருக்கப்போவதில்லை. அதனால்தான் அவர் இயக்குநர் இமயம். #புகழஞ்சலிகள்! ❤️🙏🏼
ஒரு காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கு (CPI) இந்தியப் பாராளுமன்றத்தின் மக்களவையில் 30 இடங்கள் எல்லாம் இருந்ததுண்டு. கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அந்த இரண்டுமே திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் (திருப்பூர், நாகை) கிடைத்தவைதான். தேசிய அளவில் 10% வாக்கெல்லாம் ஒரு காலத்தில் வாங்கிய கட்சி, இன்று அரை சதவிகிதத்துக்கு கூட வக்கில்லாத நிலையில்தான் இருக்கிறது.
பழம்பெருமையை தவிர்த்து வாக்கு வங்கி அரசியலில் எந்தவித செல்வாக்குமில்லாத தேவையில்லாத இந்த சுமையை, திமுக ஏன்தான் சுமந்துத் திரிகிறதோ என்கிற எண்ணம் களத்தில் இவர்களை வெல்லவைத்துக் கொண்டிருந்த திமுக செயல்வீரர்களுக்கே இருந்தது. அச்சுமை இப்போது அதுவாகவே இறங்கியிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்டு உறுப்பினர்களே இல்லாத பாராளுமன்றம் இதுவரை அமையவில்லை. குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது எப்போதும் இருந்ததுண்டு. 2029ல் அதுகூட இல்லாத நிலைமை அமைய அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இ.கம்யூ-வின் தமிழ்மாநில நிர்வாகிகளுக்கு செம்மாந்த வீரவணக்கம்!