IT Companyகளில் ஊழியர்களின் சம்பளத்தை விட, AI மாடல்களை Run செய்வதற்கான Cloud Compute Costs மற்றும் Token Consumption cost எகிறி வருவது தான் தற்போதைய கசப்பான உண்மை. நிறுவனங்கள் இப்போது Cloud Infrastructure Cost-ஐக் குறைக்கக் restrictions விதிக்கத் தொடங்கியுள்ளன.
Lot of restrictions imposed for Developers Cloud AI Usage Limits மற்றும் Token Budgets.
AI வரப்பிரசாதம்தான், ஆனால் அது செலவில்லாதது அல்ல என்பதை நிறுவனங்கள் உணரத் தொடங்கிவிட்டன.
இனி வரும் நாட்களில் AI Optimisation மற்றும் Cost Efficiency தான் IT உலகின் அடுத்த சவால்! 💻
அதிமுகவில் இருந்து விலகிய வைகைச் செல்வன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்
போன வாரம் வரை தமிழ்நாட்டிற்கு விடியல் என்றால் அதை எடப்பாடியாரால் தான் கொண்டுவர முடியும் என பேசி வந்தவர் இவர்
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள முடிகிறது
திமுகவினர் லஞ்சம் வாங்கினார்கள் என அவர் தொடர்ந்து சொல்கிறார்.
ஆனால் ஒரே ஒரு கேள்விதான்! ஸ்ரீதர் வேம்பு பாஜகவின் மிக மூத்த தலைவர்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கக்கூடியவர். பிரதமர் மோடியுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பவர். மிகப் பெரிய தொழிலதிபர். அதிகார மையத்திற்கு நெருக்கமானவர்.
அவர் நினைத்திருந்தால் திமுகவினர் லஞ்சம் கேட்ட போதே அதை ஆதாரத்துடன் வெளியே சொல்லி இருக்கலாம். நீதிமன்றங்களுக்கு சென்று இருக்கலாம். சிபிஐயில் நேரடியாக புகார் கொடுத்திருக்கலாம்.
அப்படியே ஒருவேளை அவர் செய்திருந்தால் ஒருவேளை அவர் சொல்வது உண்மை என்றால் ஒருவேளை பலர் பாதுகாக்கப்பட்டிருக்கலாம்.
ஏன் அதை அவர் செய்யவில்லை? மீண்டும் நினைவு படுத்த வேண்டியது அவர் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது அப்படி எல்லாம் அவரை மிரட்டி விடவும் முடியாது இருந்தும் அவர் ஏன் இவ்வளவு நாள் மௌனம் காத்தார்!
இப்பொழுதும் கூட இன்னார் இன்னார் என்னிடம் வந்து பணம் கேட்டார்கள் என்னை தொந்தரவு செய்தார்கள் என ஆதாரத்துடன் அம்பலப்படுத்தலாமே! ஏன் அதை அவர் செய்யாமல் இருக்கிறார்?
ஆனால் வெறும் ஊடகப் பரபரப்புக்காக மட்டுமே அவர் ஏன் அதை செய்கிறார்?
லஞ்சம் யார் வாங்கினாலும் அவர்கள் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது திமுகவினரோ அதிமுகவினரோ காங்கிரஸ்காரர்கள் பாஜக காரர்களோ தமிழக வெற்றி கழகத்தினரோ கம்யூனிஸ்டுகளோ விடுதலை சிறுத்தைகளோ யாரோ? யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!
#sridharvembu #dmk #tvk
ஆமா, கேட்க மறந்துட்டேன்.... திமுக தான் உன்னை கரூர் போக விடாம தடுக்குது, நீ ஆட்சிக்கு வந்தா போய் பார்த்துடுவேன் ன்னு டயலாக் விட்டியே, இன்னுமா கரூர்க்கு உனக்கு பஸ் கிடைக்கல???
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என தொடர்ச்சியாக சொல்லி வந்த முதல்வர் விஜய் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என தேசிய அளவில் நடந்த கூட்டத்தில் கூறி இருக்கிறார்
கடந்த இரண்டு நாளாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசிடம் இருந்து இதற்கான கருத்தோ அல்லது கண்டன குரலோ வரும் என எதிர்பார்த்து இருந்தேன்
வரவில்லை!
விஷயம் இதுதான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஜி ராம்ஜி என மாற்றம் செய்ததற்கு பிறகு அது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது
கடந்த 2024-25 நிதி ஆண்டில் 7587 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 3900 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது சரிபாதியாக குறைத்து இருக்கிறார்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு
ஆனால் ஆளும் தமிழக வெற்றிக்கழகத்திடமிருந்து ஒரு சிறு அசைவு கூட இது குறித்து காணப்படவில்லை.
தமிழ்நாட்டில் பணிபுரியும் செய்தியாளர்கள் அமைச்சர்கள் யாரையாவது பார்த்தால் தயவு செய்து இது குறித்து அவர்களிடம் கேள்வி கேட்கவும்!
திருச்சியில் #நன்றி_வேண்டும் என்று விருப்பப்படும் நபர்கள்
QR code பெற்றுக்கொண்டு நன்றியினை வந்து வாங்கி செல்லவும்.
பிகு: 5000 நன்றிகள் மட்டுமே வழங்கப்படும்.
Breaking
மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்