"படிச்சும் எனக்கு எங்கையும் வேல கிடைக்கல.. அவர்கிட்ட மனு கொடுத்தேன் உடனே வேலை கொடுத்துட்டாரு" பொறியியல் பட்டதாரி மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்
#Pudukkottai | #TVK | #Minister | #MohamedParvez | #PolimerNews
பாப்பாவ வெச்சிட்டு மாதம் மாதம் என்னால வீடு மாற முடியல சார்..
2,3 வீட்ல எங்கள வீட்ட விட்டே வெளிய தள்ளிட்டாங்க.. 20 முறைக்கு மேல் மனு கொடுத்துட்டேன்.. பாத்திரம் கழுவி தான் பசங்கள காப்பாத்திட்டு இருக்கேன்..
இலவச வீட்டு மனை கேட்டு முதல்வரிடம் மனு வழங்க மாற்றுத்திறனாளி மகளுடன் வந்த தாய் கண்ணீர் மல்க கோரிக்கை..
தாய் அழுவதை பார்த்து கண்ணீரை துடைத்துவிட்ட மாற்றுத்திறனாளி மகள்..!
#Karur | #HousePatta | #Petition | #PolimerNews
பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரைகள் மற்றும் சாக்கடை நீரினால் சீரழிந்திருந்த பட்டுக்கோட்டை அய்யனார் ஏரியை நாம் சீரமைத்தோம்.
நமது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏரி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்❤️
" எடைக்கு 1.5 கிலோ அடிக்குறீங்க.. ? தினம் இதே வேலை தான் பண்ணுவீங்களா..?.. உங்க முன்னாடியே இப்படி நடக்குதுன்னா நீங்க என்ன பண்றீங்க.. ? "
தென்காசி கடையம் யூனியன் உட்பட்ட கீழக்கடையம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் வழங்கும் அரிசி, சீனி, கோதுமை போன்ற பொருட்களின் எடையை குறைத்து வழங்கப்படுவதாக புகார்.. கடை பொறுப்பாளர் முன்பே ஆதாரத்துடன் கேள்வி எழுப்பிய மக்கள்..
#Tenkasi | #RationShop | #Issue | #PolimerNews
47 தனியார் பள்ளிகள் புகார்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி மோசடி என குற்றச்சாட்டு. இதுவரை 47 பள்ளிகளிடம் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி புகார் வந்துள்ளதாக காவல்துறை தகவல். டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக பல கோடி பணம் பெற்றது கண்டுபிடிப்பு. மோசடி பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கியுள்ளனர் என விசாரணை. ஏமாந்தவர்களின் பட்டியலை திரட்டும் பணியில் போலீசார் தீவிரம். இப்புகாரில் தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்
#privateschools #complain #Police
கட்சி நிதி கொடுப்பது ஒழிந்தாலும் அதிகாரிகளுக்கு 5 சதவீத கமிஷன் கொடுப்பது ஓயவில்லையே..? எதிர்த்து கேள்வி கேட்டால் 4 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு போயிடுவார்.. சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் ராமாராவ் பரபரப்பு தகவல்..
#Chennai | #Corporation | #PolimerNews
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில், ஏலம் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் பணம் கேட்டு ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் மிரட்டல் விடுக்கிறார்.
பணம் தர மறுத்ததால், இத்தனை ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையறிந்து வியாபாரிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தியதால், வேறு வழியின்றி சந்தை வழக்கம்போல் செயல்படும் தற்போது அறிவித்துள்ளனர். இதுதான் தூய ஆட்சியா??
- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.P. சண்முகநாதன் அவர்கள்
"வீட்டு கடன் வாங்கவே கூடாது " என்று சொல்ல கூடிய ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது. உற்று பாருங்கள். அவர்களிடம் முந்தைய தலைமுறை தந்த வீடு இருக்கும். அல்லது அவர்கள் வீட்டை குறைந்த விலையில் எளிதில் வாங்கி, கடனை அடைத்து முடித்து இருப்பார்கள். They are the lucked out gang.
இப்போது அவர்களுக்கு வீடு என்பது ஒரு முதலீட்டு பொருள் ஆக மட்டுமே தெரிகிறது.
ஆனால், வீடு நுகர்வு சார்ந்த தேவை. நகர்வை சரியாக கையாள வேண்டுமே ஒழிய, அறவே தவிர்க்க கூடாது.
கடனை எப்போ எவ்வளவு வாங்க வேண்டும்? எப்படி அடைக்க வேண்டும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கு தான் சரியான விடை தேட வேண்டும்.
நல்ல வீடு எல்லோரும் அடைய வேண்டிய நுகர்வு பொருள்.
தள்ளி போடலாம். தவற விட கூடாது.
https://t.co/zTdnsa3J3n
https://t.co/zTdnsa3J3n
#WATCH | சீர்காழி அருகே அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கேட் கீப்பர் சந்தீப் சகர்..
#SunNews | #Train | #Mayiladuthurai
"பிரசவத்துக்குனு சிகிச்சைக்கு வந்துட்டீங்கனா 5000 ரூபாய் இல்லாம இங்க வராதீங்க?.. எதுக்கெடுத்தாலும் இங்க லஞ்சம் தான்"... தொழிலாளி வெளிட்ட வீடியோ - திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் டிஸ்மிஸ்
#Trichy | #GovtHospital | #TNGovt#PolimerNews
பத்தாம் வகுப்பில் முதல் மார்க் எடுத்த மாணவிக்கு அரசு மாதிரி பள்ளியில் கிடைக்காத சீட்.. மாணவியை விட 93 மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவனுக்கு கிடைத்துள்ளது மாற்றுத்திறனாளி தந்தை வேதனை!
@CMOTamilnadu@imrajmohan கவனத்திற்கு.. 🙏🏻
பொறுப்புக்கு வந்தவுடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் நேரில் சென்று தென்காசியில் உள்ள புளியரை போக்குவரத்து சோதனைச் சாவடியில் ஆய்வு நடத்தியிருந்தார்.
ஜூன் மாதம் இதே போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ஆய்வில் கணக்கில் வராத ரூ. 1,95,150 கைப்பற்றப்பட்டது. ஆனாலும், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய மறுநாளிலிருந்தே அங்கு மீண்டும் வசூல் வேட்டை தொடங்கியுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
தற்போது மாத்ருபூமி தொலைகாட்சியின் பிரத்யேக செய்தித் தொகுப்பும் புளியரை சோதனைச் சாவடியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை தமிழக அதிகாரிகள் அனுமதிப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
ஊழலை ஒழிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறும் த.வெ.க. அரசில் அதிகாரிகள் துணையுடன் கனிம வளக்கொள்ளை தொடர்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ் நாடு அரசு உடனடியாக தமிழ் நாட்டின் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். புளியரை சோதனைச் சாவடி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#Puliyarai #Mineral #Truck #Tenkasi @CMOTamilnadu@TVKVijayHQ@drtkprabhu_TVK
சகோதரி கீர்த்தனா அவர்களுக்கு, வணக்கம்.
அமைச்சர் என்பது பதவி அல்ல. அது ஒரு பணி. நீங்கள் செய்யும் அந்த பணிக்கு அரசு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஊதியம் வழங்குகிறது. நீங்கள் பயணிக்க மகிழுந்தும், நீங்கள் வசிக்க இலவசமாக வீடும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. உங்கள் வீட்டின் மின்செலவும் குடிநீர் செலவும் மக்களாலேயே ஏற்கப்படுகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு எனது ஒரு சிறிய வேண்டுகோள். மொழி என்பது நமது எண்ணங்களுக்கான வடிவம் தான். ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து கொண்டால் அதுவே போதுமானது. அதில் ஒருவர் புலமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
என்னுடைய குடும்பத்தையே எடுத்து கொண்டால், என் மனைவிக்கு தமிழ் பேச தெரியாது. எனக்கு தெலுங்கு மொழி பேச தெரியாது. என்னுடைய மகளுக்கு நான் என்னுடைய தாய் மொழியான தமிழையும், என்னுடைய மனைவி அவருடைய தாய் மொழியான தெலுங்கு மொழியையும் கற்றுக் கொடுத்தோம். கூடுதலாக என் மகளின் பள்ளியில் ஹிந்தி மற்றும் ஜெர்மன் மொழியை கற்றுக் கொண்டார். அடுத்த கட்டமாக டெல்லி பல்கலைக்கழகத்தின் புனித ஸ்டீபன் கல்லூரியில் பிரஞ்சு மொழி பட்டய படிப்பில் சேர்ந்து பிரஞ்சு மொழி பயின்ற அவர் பல்கலைக்கழத்தில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். இப்போது லண்டனில் அரசியல் அறிவியல் படித்து வரும் அவருக்கு கன்னட மொழியை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.
ஒரே குடும்பத்தில் பல்வேறு மொழிகள் அறிந்த நாங்கள் மூன்று பேரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை பயன்படுத்துகிறோம். இதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
ஆக, ஒரு குழந்தை ஆங்கிலத்தில் பேச முடியாமல் போய் விட்டது என்று அவரை இகழ்வது சரியல்ல. அதே குழந்தை பிற்காலத்தில் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவில் ஆளுமை மிக்கவராக வளரவும் வாய்ப்பு உள்ளது.
இனியாவது ரீல்ஸ் எடுப்பதை தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி!
@Keerthana4VNR
CC: @CMOTamilnadu@AadhavArjuna