திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகரித்து விட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கவும், நாளைய தினம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை இருக்கிறது. போதைப் பொருள்கள், நமது இளைஞர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது.
இந்த நிலையை மாற்ற தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகளின் பாதுகாப்பிற்காகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாதுகாப்பான தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
திருநெல்வேலி உடையார்பட்டி ராம் தியேட்டர் அருகில் உள்ள சாலையில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் வாகனங்கள் சென்றுவர மிகவும் கடினமாக உள்ளது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா... #திருநெல்வேலிமாநகராட்சி
Delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his visit to Coimbatore today to take part in the South India Natural Farming Summit.
#VanakkamModi
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கோவையில் இன்று நடைபெறும் மாநாட்டைத் துவக்கி வைக்க தமிழகம் வருகைபுரியும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களைத் தமிழக மக்கள் சார்பாக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அதிலும், நாடுமுழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி உதவித் திட்டத்தின் (PM-KISAN) 21-ஆவது தவணையில் ரூ.18,000 கோடியைத் தமிழக மண்ணில் வைத்து தமது பொற்கரங்களால் விடுவிக்கவிருப்பது மகிழ்ச்சியைப் பலமடங்காக்குகிறது. இவ்வாறு ஒட்டுமொத்த உழவர் பெருமக்களின் நலனை மேம்படுத்த தமிழகத்திற்கு வருகை தரும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மீண்டுமொருமுறை அன்புடன் வரவேற்கிறோம்.
#VanakkamModi