பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும், 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், அன்புத்தங்கை மனிசா ராமதாஸ் மற்றும் அன்புத்தங்கை நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்ற செய்தியறிந்து பெருமிதமும், மிகுந்த மனமகிழ்வும் அடைந்தேன்.
பிறந்த தமிழ் மண்ணிற்கும், பேணி வளர்த்த பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள அன்புத்தங்கைகள் துளசிமதி முருகேசன், மனிசா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் மேலும் பல பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று சாதனை படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
ஒலிம்பிக் போட்டியில் பெற முடியாத தங்கப்பதக்கத்தை வென்றதோடு, இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று இந்தியப் பெருநாட்டினைப் பதக்கப்பட்டியலில் முன்னிலைப்படுத்திச் சாதனை புரிந்துள்ளதன் மூலம் பாரா ஒலிம்பிக் வீரர் – வீராங்கனைகள், தாங்கள் மாற்றுத்திறன் படைத்தவர்கள் அல்ல; நாங்கள்தான் உண்மையான திறன் படைத்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்!
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்-வீராங்கனைகளுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லையா?
@CMOTamilnadu@mkstalin
அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகக் கடந்த ஜூலை 1ஆம் நாள் வெளியிட்ட புதிய அரசாணை 150இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் பயிலும் இலட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் உடற்திறன் மேம்பாட்டைச் சீர்குலைக்கும் திமுக அரசின் இந்நடவடிக்கை எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997ஆம் ஆண்டு அரசாணை 525இன் படி 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250க்கு அதிகமாகும்போது ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்குப் பதிலாக, ஓர் உடற்கல்வி இயக்குநர் பணியிடமாகத் தரம் உயர்த்திடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன் பயிற்சி அளிக்க முடியாத நிலையில், தற்போது 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்று மாற்றுவது எவ்வகையில் நியாயமாகும்?
அதிலும், தற்காலத்தில் அலைபேசி மற்றும் கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் நலத்தைப் பேணவும் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைப்பதென்பது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.
இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துதான் அரசு தன்னுடைய நிதிநிலையைச் சீர் செய்ய வேண்டுமா? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 இலட்சம் கொடுக்க நிதி இருக்கும் திமுக அரசிடம், படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, கற்பிக்கும் ஆசிரியரைக் குறைத்து அவர்களின் கல்வியை நிறுத்துவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
250 கோடிகளை வாரியிறைத்து கார் பந்தயம் நடத்தப் பணம் இருக்கும் அரசிடம் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை உலகத்தரத்திற்கு வளர்த்திடும் முறையா? கார் பந்தயத்தில் எத்தனை தமிழர்கள் இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள் அதனால் பயன்பெற்றனர்? ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார் பந்தயத்தால் வாங்கித் தர இயலுமா? கார் பந்தயத்தால் அந்நிய முதலீடுகள் குவியுமென்றால், அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் என்ன?
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின் மூலம், மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் பல்லாயிரம் கோடிகள் அந்நிய முதலீடுகளைக் குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டோம் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் மார்தட்டுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பது உறுதியாகிறது.
அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையாலும், தரமான கல்வியை வழங்கத் தவறியதாலும் நிகழும் கொடுமையாகும். அதனைச் சரி செய்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்காமல், அதனையே காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களைக் குறைப்பதென்பது அரசின் அறிவார்ந்தச் செயல் ஆகாது.
ஆகவே, அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று, பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று. முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம்.
பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.”
“எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்கவேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், தமிழ் பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன், ‘மாயோன்' பெரும்புகழ் போற்றி! போற்றி!’
மது விலக்கு தமிழ்நாட்டில் சாத்தியமல்ல
மது விலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்னு அரியதொரு காரணத்தை சொன்ன உபிக எல்லாம் இப்ப லைன்ல வாங்கடா!!
🔴🔴🔴அறிவிப்பு
நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் #அபிநயா B.H.M.S., MD (முதுநிலை ஓமியோபதி மருத்துவம்) அவர்கள் வருகின்ற 20.06.2024 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வேட்புமனு பதிவு செய்யவிருக்கிறார்.
ஆதலால் உறவுகள் அனைவரும் காலை 08 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள திருமலை சாமி மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#விக்கிரவாண்டியில்_நாம்தமிழர்💪
#NTKAbinayaForVikravandi✊
#Vikravandi4NTK ✊💪
திருமணம் கடந்த உறவு என்பது இருவரின்
தனிப்பட்ட உணர்வு ,அதை இந்த சமூகம் கொச்சைப்படுத்துகிறது.. அதற்கான அங்கீகாரத்தை இந்திய அரசு தரவேண்டும்..!!
சுபவீ கோரிக்கை ..!
இவன் நம்பிக்கைக்கு உரியவன் இல்லை
......................................................................................
எப்பவும் போல...தனித்தே...
தமிழ் உணர்வாளர்கள்...தமிழர்கள் கூட்டணியில் உறுதியாக வெற்றிபெறும்வரை...
ஒரு கணமும் நிற்காமல்...சோர்வில்லாமல்...