இது தான் எங்கள் சுவாசக் குழாய்களினூடாக சுவாசப்பையை சென்றடைந்தது அன்று.
நாம் வாழ்ந்த நிலம் வானுயர்ந்த மரங்கள் நிறைந்து கிடந்த முல்லை நிலம். அதனால் மிக மிக சுத்தமான ஒட்சிசன் வாயுவை மட்டுமே நாம் சுவாசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இறுதியில்…
கடந்த வருடம் துகள் அமைப்பு நடாத்திய சிறுகதைப் போட்டியில் தெரிவாகிய சிறுகதை. என்னால் ஒரு தாயின் உணர்வுகளை பதிவாக்க முடிந்ததை நினைத்து மனம்நிறைவடைகிறேன். அம்மா, நான் அன்று உங்கள் மகன் உங்கள் மடி சேர்வார் என்று நினைத்தேன். ஆனால் இல்லை என்றாகிவிட்டது.
எங்கள் வனங்களை பாதுகாக்க, எங்கள் வன உயிரினங்களை பாதுகாக்க என்று உருவாக்கப்பட்ட பிரிவு தான் “வனவளபாதுகாப்பு பிரிவு” இது இறுதி வரை எம் வனத்தின் ஒவ்வொரு மீட்டரையும் பாதுகாப்பாக வைத்திருந்தது என்றால் அது பொய்யில்லை. “காடுகளே ஒரு நாட்டுக்கு செழிப்பை தருகின்றன.”
#வன்னிக்கட்டுமானங்கள்
எமக்காக தமிழீழ அரசு கட்டமைத்த கட்டமைப்புக்களில் ஒன்று. எம் மொழி காக்கவும், வளர்க்கவும், தூயதமிழில் கதைக்கவும், எழுதவும், என்று கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த தமிழை ஐநாவில் கூட ஒலிக்க வைக்கவும் என தேசியத்தலைவரின் எண்ணத்தில் உருவாகியது இது.
#வன்னிக்கட்டமைப்புகள்
இதைப் பார்க்கும் போதெல்லாம் எமது இதயபூமி தான் நினைவுக்கு வரும். இரு மருங்கும் மரங்கள் குடை விரிக்க, கிரவல் வீதி எம் மிதிவண்டிச் சக்கரங்களில் மிதிபட்டு சரசரக்கும் சத்தம் எழ, நாம் திரிந்த குச்சொழுங்கைகளும் வீதிகளும் நினைவில் வந்து நிழலாடுகின்றன. மீண்டும் இனி கிடைக்காத உணர்வு அது.
“அயலகத் தமிழர் தினம்”
சாரு, இத கொண்டாடுறத விட்டிட்டு அயலகத்தில இருந்து உயிரை காக்க என்று தமிழகம் வந்தவர்களை அரவணைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள் சாரு.
சிறப்பு முகாம்களை மூடி ஈழத்தமிழர்களுக்கு சிறு விடியலை கொடுங்கள் சாரு.
“நிகழ்வுகளை விட செயலுக்கு முதலிடம் கொடுங்கள் சாரு.”