இந்த உலகில்
மிகவும் வலியுடைய ஏமாற்றம் என்பது
எதிரியால் வருவது அல்ல;
ஒரு காலத்தில்
"நீங்கள் எங்களுடையவர்"
என்று சொன்னவர்கள்,
ஒருநாள்
"நீங்கள் யார்?" என்று கேட்பதுதான்.
நான் தோற்றுப் போனது
மனிதர்களிடம் அல்ல;
அவர்களைப் பற்றிய
என் நல்ல எண்ணங்களிடம்தான்.
எல்லோரும் இதயத்தால் பேசுவார்கள்
எ���்று நினைத்தேன்;
பிறகுதான் தெரிந்தது,
சிலர் தேவையால் பேசுகிறார்கள் என்று.
நாம் எல்லோரும்
ஒரு நாளை நம்பித்தான் வாழ்கிறோம்.
“நாளை சரியாகிவிடும்”
என்று சொல்லியே
இன்றை தள்ளிப்போடுகிறோம்.
ஆனால்,
யதார்த்தம் எப்போதும்
நாளைக்காக காத்திருக்காது.
வாடகை இன்று கேட்கும்,
பசி இன்று கேட்கும்,
தேவைகள் இன்று கேட்கும்.
சமயங்களில்
நாளை என்பது நாம் இல்லாமலும் மலரும்!
யாரையும் குற்றம் சொல்ல முடியாது;
ஏனெனில்
வாழ்க்கை என்பது
நிமிர்ந்து நிற்பவர்களை விட,
உடையாமல் இருக்க
தேவையான அளவு வளைந்து கொள்பவர்களையே
அதிகமாக உயிரோடு வைத்திருக்கிறது.
"வேடிக்கைகளில் இருக்கும் அழகை ரசித்தபடி கடந்துவிட பாருங்கள், எதாா்த்தங்களில் நுழைய முனையாதீர்கள், அது வேடிக்கை போல் இராது"...!!!
#இயல்பு_அப்டிதான் 🚶🏼♂️