அன்பும் ♥ நன்றிகளும்
@SooriyanFMlk செய்தி ஆசிரியராக 7 ஆண்டுகளாக நீடித்த எனது பயணம் 31.07.2023 அன்று நிறைவுக்கு வந்தது.
இந்தப் பயணத்தில் எனக்கு உதவிய - ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
அன்புடன் பாரதி https://t.co/IDVKQvv7GC @NewsSooriyanFM#Sooriyanfm#Media#Journalist
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகால தண்டனையின்பின் விடுவிக்கப்பட்ட சாந்தன், இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
#இலங்கை#இந்தியா#ராஜீவ்காந்தி
"குருந்திக்கு மீண்டும் பாரிய ஆபத்து. வரும் 14ம் திகதி தமிழ் அடிப்படைவாதிகள் குருந்தி விகாரை பகுதியில் பூசை நடத்தி கோவில் அமைக்க தயாராகின்றனர். பெளத்த உரிமையைப் பாதுகாக்க ஒன்றிணைவோம்".
#முல்லைத்தீவு குருந்தி விகாரை சந்தபோதி தேரர் தெரிவிப்பு
#குருந்தூர்மலை#தமிழ்#பௌத்தமயம்
“மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு” நூல் வெளியீட்டு நிகழ்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மலையகத் தமிழர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கூலிகளாக அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் நிறைவுபெறுவதை நினைவுகூறும் வகையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலனறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ், மனம்பிட்டிய கொடலீய பாலத்தில் இருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து.
9 பேர் மரணம். சுமார் 20 பேர் காயம்.
- வைத்தியசாலை தகவல்கள்
#Lka#SriLanka
சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரின் கருத்துக்களைக் கேட்டு நீங்கள் என்மீது குற்றம் சுமத்துகின்றீர்கள் என அமைச்சர் டிரான் அலஸிடம் @GGPonnambalam கேள்வி எழுப்பினார்.
@TnpfOrg@skajendren@Sugashkanu
நாடாளுமன்ற உறுப்பினர் (கஜேந்திரகுமார்), அந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவில்லை என்பது அந்தக் காணொளியைப் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. - அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு.
@GGPonnambalam@TnpfOrg@skajendren@Sugashkanu