வன்னியர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கொடுக்கப்பட்ட தானம் தான் அந்த இடம் ஆனால் அந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் வன்னியர்களுக்கு எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது
வன்னியர் அறக்கட்டளை
வன்னியருக்கே
தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே
நடத்தக் கோரி பா.ம.க நடத்திய அனைத்துக் கட்சி மற்றும்
சமூகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு
நன்றி!
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக மாநில அரசே சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசு அதன் இலக்குகள் பட்டியலிலும் சேர்த்திருக்கிறது. இது சமூகநீதி சர்வேயை சாத்தியமாக்குவதில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் என்ற முறையில் எனது அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சி மற்றும் சமூகத் தலலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட
ஆளும் த.வெ.க.வின் திரு. வீர. விக்னேஷ்வரன் அவர்கள்,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திரு. இராமச்சந்திரன் அவர்கள்,
காங்கிரஸ் கட்சியின் திரு. எம்.ஏ.முத்தழகன் அவர்கள்,
பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், துணைத் தலைவர் திரு. கரு.நாகராஜன் அவர்கள்,
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இயக்குனர் திரு.சோழன் மு. களஞ்சியம் அவர்கள்,
அ.ம.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திரு.செந்தமிழன் அவர்கள், திருமிகு. சி.ஆர். சரஸ்வதி அவர்கள்,
தே.மு.தி.க.வின் திரு. வி.சி. ஆனந்தன் அவர்கள்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள்,
கொ.ம.தே.க பொதுச்செயலாளர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள்,
த.மா.கவின் திரு.விடியல் சேகர், திரு.முனவர் பாஷா அவர்கள்,
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு.பூவை. ஜெகன் முர்த்தி அவர்கள்,
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திரு. என்.ஆர். தனபாலன் அவர்கள்,
மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் டாக்டர் இராஜா அவர்கள்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திரு. கே.சி. திருமாறன்ஜி அவர்கள்,
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனர் திரு. கே.கே.செல்வக்குமார் அவர்கள்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் திரு. சண்முகம் அவர்கள்,
புதிய தமிழகம் கட்சியின் திரு. சங்கர் குரு அவர்கள்,
இந்திய தேசிய லீக் கட்சியின் திரு. தடா ரஹீம் அவர்கள்,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ.தனியரசு அவர்கள்,
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.அண்ணா சரவணன் அவர்கள்,
பறையர் பேரவைத் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள்,
தமிழ்நாடு யாதவ மகாசபை இணைப் பொதுச் செயலாளர் திரு. என்.எஸ்.சேதுமாதவன் அவர்கள்,
நாடார் மகாஜன சங்கத்தின் திரு. ஏ.வி.எஸ். மாரிமுத்து அவர்கள்,
விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டம்மைப்பின் திரு. சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் அவர்கள்,
குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த திரு. கே.செல்வராசன் அவர்கள் ,
மிழலை நாடு மக்கள் கட்சியின் திரு. விவேகானந்தன் அவர்கள்,
கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் திரு. சி.ஆறுமுகம் அவர்கள்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திரு.சிரஞ்சீவி அவர்கள்,
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் திரு.முத்து கிருஷ்ணன் அவர்கள்,
ஆதித்தமிழர் பேரவையின் திரு.கோவை ரவிக்குமார் அவர்கள்,
வீரபத்திர ராஜகுல பேரவையின் திரு.தா. வசந்தன் அவர்கள்,
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் திரு. சௌந்திரகுமார் நாடார் அவர்கள்
ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைக்கும் முழு ஆதரவு தெரிவிப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கூட்டத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக இந்த அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் தொடரும் என்பதையும் இந்தத் தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#SocialJustice
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து
தொடர வேண்டும்: நூறாண்டுகள் வாழ வேண்டும்!
எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 84-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானியின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான். இளையராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான்.
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும்.
@ilaiyaraaja
கோவிலுக்கு எதுக்கு செலவு செய்றீங்க..?
உண்டியலில் எதற்காக காசு போடுங்கன்னு சொன்னவங்களே இன்றைக்கு கோவில் படிக்கட்டில் நின்று வேண்டுதலை நிறைவேற்றுவதை பார்க்கும் போது..... கடவுள் இருக்கான் 🙏
கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள்: வீர வரலாற்றை பாடமாக கற்பிக்க வேண்டும்!
தென்னாட்டு ஜான்சிராணி மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை அஞ்சலை அம்மாள் அவர்களை புறக்கணித்து விட்டு எழுத முடியாது. அவரது போராட்டங்களைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார்.
அவருடைய வீரமும், தியாகமும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். எனவே, தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் வரலாற்று பாடநூலில் கடலூர் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக சேர்க்க வேண்டும்.
1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை;
20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி - பள்ளிக்
கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும்!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது.
திமுக ஆட்சி செய்த கடந்த ஐந்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமித்து, அவற்றின் கட்டமைப்பையும், மனிதவளத்தையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
கல்வியாண்டு முடிவுக்கு வந்த மே 31-ஆம் நாளான நேற்று மட்டும் 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை உயர்நிலைப்பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்த்து 800 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை மன்னிக்கவே முடியாது. மாணவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலம் இந்தப் பள்ளிகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவது இந்தப் பள்ளிகள் தான். இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அவற்றின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதையும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதையும் தடுக்க முடியாது.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நேற்றோ, இன்றோ உருவானவை அல்ல. பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் ஒற்றை அரசாணை மூலம் இந்த பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப முடியும் ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் காலியாக இருப்பதைக் காரணம் காட்டியே தலைமை ஆசிரியர்களை நியமிப்பதை அரசு தவிர்த்து வந்திருக்கிறது.
இதில் வேதனையான உண்மை என்னவென்றால், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை அரசாலோ அல்லது அரசின் தூண்டுதலால் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாலோ கடந்த காலங்களில் தொடரப்பட்டவை தான். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இந்த அவலத்தை பாட்டாளி மக்கள் கட்சி பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனாலும் முந்தைய திமுக ஆட்சியில் இந்தக் குறையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை சொல்லித் தர வேண்டிய பள்ளிகளில், சுவர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட தலைமை ஆசிரியர்கள் இல்லாதது எவ்வளவு கொடுமையான முரண்பாடு?
அந்த சுவர்கள் இல்லாமல் கல்வி எனும் சித்திரத்தை எவ்வாறு வரையமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்தும் பள்ளிக்கல்வித்துறையின் அவலத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அனைத்துக் கல்வி மாவட்டங்களுக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
திருவாரூர் மாவட்டத்தில் மகள் கண் முன்பே தந்தை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
குற்றவாளிகளை உடனே கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
தமிழக த.வெ.க அரசு பொது மக்களுக்கான பதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"717 மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் கூடாது: முதலமைச்சரின் ஆணையை அதிகாரிகள் உடனே செயல்படுத்த வேண்டும்!"
- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மதுக்கடைகளை மூட கடந்த 12-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருந்த நிலையில், இதுவரை 150 மதுக்கடைகள் மட்டும் தான் மூடப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள மதுக்கடைகளை மூடும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் ஏமாற்றமளிக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித்தலைவரான முதலமைச்சரே ஆணையிட்ட பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி மதுக்கடைகளை மூடுவதை நிறுத்தி வைப்பதையோ, தாமதப்படுத்துவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய் அவர்கள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூடும்படி கடந்த 12-ஆம் தேதி ஆணையிட்டார். முதலமைச்சரின் ஆணைப்படி 717 மதுக்கடைகளும் அடுத்த இரு வாரங்களில், அதாவது வரும் 26-ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும்.
ஆனால், முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து 150 மதுக்கடைகள் வேகமாக மூடப்பட்ட நிலையில், மீதமுள்ள 500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் மூடப்படவில்லை. அவற்றை மூடுவதில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், அவை தீரும் வரை மதுக்கடைகளை மூடும் பணி நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர மீதமுள்ள மதுக்கடைகள் அனைத்தும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளனவா? என்பதை அளந்து தீர்மானிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தான் அந்தக் கடைகளை மூடுவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுக்கடைகளை மூடுவதற்காக இது போன்ற இல்லாத காரணங்களை அதிகாரிகள் கூறுவது முதலமைச்சரின் நோக்கத்திற்கு எதிரானது.
தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அவர்கள் தன்னிச்சையாக வெளியிடவில்லை. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய இடங்களில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள மதுக்கடைகளை அடையாளம் காணும்படி முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டதாகவும், அதன்படி தான் 717 மதுக்கடைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவ்வாறு இருக்கும் போது, மூடப்பட்ட 150 மதுக்கடைகள் தவிர மீதமுள்ள மதுக்கடைகள் 500 மீட்டர் சுற்றளவுக்குள் வருகின்றனவா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என டாஸ்மாக் தரப்பில் கூறப்படுவது நியாயமல்ல. அப்படியானால், 717 மதுக்கடைகளை மூடலாம் என முதலமைச்சருக்கு பரிந்துரை செய்தவர்கள் யார்? அவர்கள் தவறான தகவல்களை அளித்தார்களா? என்பதை டாஸ்மாக் நிர்வாகம் விளக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் கடந்து, மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கமே தவிர, அவை எவ்வளவு தொலைவில் அமைந்திருக்கின்றன என்பது அல்ல. 500 மீட்டர் தொலைவு என்பது மூடப்படும் மதுக்கடைகளை அடையாளம் காண்பதற்கான காரணி மட்டும் தான் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். 717 மதுக்கடைகளும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் தான் உள்ளன என்பதை உறுதி செய்த பிறகு தான் அவற்றை மூடுவதற்கு அரசு ஆணையிட்டிருக்கிறது. ஒருவேளை அந்தக் கடைகளில் ஏதேனும் சில 500 மீட்டருக்கு அப்பால் சிறிது தூரம் தள்ளி இருந்தாலும் அவற்றை மூடுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மாறாக மக்களுக்கு நன்மை தான் ஏற்படும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.
717 மதுக்கடைகளை மூடும் அரசின் முடிவுக்கு எதிராக மது லாபி அதன் முழு வலிமையையும் பயன்படுத்தி வருகிறது. மதுக்கடைகளை மூட தடை விதிக்க வேண்டும் என்று அந்த லாபியின் தூண்டுதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 717 மதுக்கடைகளை மூடும் அரசின் முடிவை பாராட்டியது. முதலமைச்சரின் நோக்கத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் டாஸ்மாக் அதிகாரிகள் செயல்படக் கூடாது.
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை ஒரே நேரத்திலோ, படிப்படியாகவோ மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் இதை வலியுறுத்தி மதுக்கடைகளை மூடச் செய்து வருகிறோம். முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற மே 10-ஆம் தேதியே முதலமைச்சரின் முதல் 3 அறிவிப்புகளை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நான், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பின் மே 12-ஆம் தேதி 717 மதுக்கடைகளை மூடும் ஆணையை முதலமைச்சர் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சந்துக்கடைகள் என்ற பெயரில் சட்டவிரோத மதுக்கடைகள் செயல்பட்டு வருவதை கடந்த 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் உரையாற்றிய பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் சுட்டிக்காட்டியவுடன் கணிசமான சந்துக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்; சட்டவிரோத மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அவரது நல்ல நோக்கத்தை நிறைவேற்ற அதிகாரிகள் துணை நிற்க வேண்டுமே தவிர, குறுக்கே நிற்கக் கூடாது. முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டவாறு, 717 மதுக்கடைகளையும் வரும் 26-ஆம் தேதிக்குள் மூடி, மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதை டாஸ்மாக் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
#AnbumaniRamadoss #PMK #TASMAC #cmvijay
திரைப்படத் தயாரிப்பாளர் கே.இராஜன் மறைவுக்கு இரங்கல்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகில் சிறிய முதலீட்டில் திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கப் போராடியவர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமூகநீதிப் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவளித்தவர்.
தயாரிப்பாளர் இராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
|| #IndiaNetherlands🇮🇳🇳🇱 ||
The 𝟏𝟏𝐭𝐡-𝐜𝐞𝐧𝐭𝐮𝐫𝐲 𝐀𝐧𝐚𝐢𝐦𝐚𝐧𝐠𝐚𝐥𝐚𝐦 𝐜𝐨𝐩𝐩𝐞𝐫 𝐩𝐥𝐚𝐭𝐞𝐬 bearing the royal seal of Emperor Rajendra Chola have finally returned home from the Netherlands during Prime Minister @narendramodi’s visit..: Union Minister of Culture and Tourism @gssjodhpur
#PMModiInNetherlands | @IndinNederlands | @MEAIndia | @PMOIndia
விஞ்ஞான ஊழல் செய்வதில் திமுக வைப் போல கில்லாடிகள் தமிழ்நாட்டில் யாருமே கிடையாது!
திருச்சி பொதுக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆவேசம்