சீமான் அப்பா பேரு - செபாஸ்டியன்
தம்பி பேரு - ஜேம்ஸ்
எப்போதும் கிறிஸ்தவ குடும்பம் தான் - களஞ்சியம்
இனி உன்ன விடுறதா இல்ல சைமன் 😂 நீயே பொழப்பு நடத்த பேரையும் அப்பா பேரையும் மாத்திட்டு நடக்குற ஆளு @Seeman4TN
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்
நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டியில்,
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்
போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம்
வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த
திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி,
தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய
ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம்
வென்ற திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும்,
வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ
பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த
இரண்டு விளையாட்டு வீரர்கள்
பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில்
தங்கி பயின்று, முறையான பயிற்சி
பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின்
விளையாட்டுத் துறைக்குப் பெருமை
சேர்ப்பதாகும்.
இவர்களின் கடின உழைப்பும்,
விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும்
வெற்றியைத் தேடித்தந்ததோடு,
ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை
அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும்
தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் !
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நகை வணிகத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, கேரளா மற்றும் பெங்களூருவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் தனது முதல் கிளையை சென்னை தியாகராய நகரில் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய கிளையைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.
ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனம் தனது பாரம்பரியம், தரம் மற்றும் நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, தமிழ்நாட்டிலும் சிறப்பான வெற்றிகளைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
#JCDPrabhakar #RegalJewellers #Chennai #TNagar
News Tamil 24x7 Breaking News | வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு
சேலம்: லஞ்சம் பெற்றுக் கொண்டு 8,056 வணிக கட்டடங்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கி முறைகேடு
தமிழ்நாடு அரசுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.171.99 கோடி வருவாய் இழப்பு; தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு
Salem | 01 Aug 2026
#WaterScam #Corruption #RTI #DrinkingWater
Dear @TRBRajaa, உங்கள் படைப்பரிவாரங்கள்
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. திருமதி பல்லவி அவர்களையும், அவரது கைக்குழந்தையையும் அறிவாலயத்திலேயே வைத்து, "ட்ரோல்" என்ற பெயரில் தரம் தாழ்ந்து கேலியும் கிண்டலும் செய்தபோது, இன்று நாகரிக அரசியல் குறித்து பாடம் நடத்துபவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.
"அத்தை", "ஆண்ட்டி", "லிப்ஸ்டிக் மூஞ்சி", "ஐட்டம்", "பார்லர் பிஸ்னஸ்", "அந்தரங்க வீடியோ" என தங்களை விமர்சித்த பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் இழிவுபடுத்தி, சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்திய பரங்கிமலை இணைய கொத்தடிமைகள் செயல்களை கண்டும் காணாதது போல கடந்தவர்களும், அத்தகைய மலிவான தாக்குதல்களுக்கு மறைமுகமாக ஊக்கம் அளித்தவர்களும் யார் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
அது சரி, ஆபசமாக பேசுவதையே கால காலமாக அரசியல் அடையாளமாக கொண்ட கட்சிக்கு, நாகரிக அரசியல் பாடம் எடுத்து என்ன புண்ணியம் ?
இன்று (01.08.2026) திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற 19வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
பட்டம் என்பது கல்விப் பயணத்தின் நிறைவு மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வுடன் புதிய பயணத்தைத் தொடங்கும் முக்கியமான மைல்கல்லும் ஆகும். இன்று பட்டம் பெற்ற ஒவ்வொரு மாணவியும் தங்களது திறமை, உழைப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் உயரங்களை அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடனும், பொறுப்புடனும் எதிர்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்க அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
எடுத்தேன் பாரு ஓட்டம்... சோதனைச் சாவடியில் அதிகாரி போல நடித்து பணம் வசூல்... போனில் வீடியோ எடுப்பதை பார்த்ததும் எஸ்கேப்... விடாமல் துரத்திய லாரி ஓட்டுநர்.. பணத்தை போட்டுவிட்டு விட்டால் போது என தெறித்து ஓடிய நபர்... கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
#Tiruvallur | #LorryDriver | #Bribe | #TollPlaza | #PolimerNews
கும்மிடிப்பூண்டி அருகே லாரி டிரைவரிடம் லஞ்சம்... அதிகாரி போல பணம் வசூலித்த நபரை துரத்தி துரத்தி வீடியோ எடுத்த டிரைவர்! வைரலாகும் பரபரப்பு காட்சி!
#Tiruvallur | #Driver | #Bribe | #Lorry | #PolimerNews
ஆயிரம் விளக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்! 💜
சென்னை மாநகராட்சியின் தசைச்சிதைவு குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் "விழுதுகள்" – மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சமூக சேவை மையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்று, திறமைகளை வளர்த்து, சமூகத்தில் சம வாய்ப்புகளுடன் முன்னேற தேவையான அனைத்து ஆதரவுகளும் கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.
ஆயிரம் விளக்கு தொகுதியை அனைவரையும் உள்ளடக்கிய, மனிதநேயமும் சமத்துவமும் நிறைந்த தொகுதியாக உருவாக்கும் பணியில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.
#JCDPrabhakar #ThousandLights #InclusiveSociety #MuscularDystrophy #Chennai #DifferentlyAbled
முதல்வர் விஜய் யாரு காசு கேட்டாலும் கொடுக்காதீங்கன்னு சொன்ன வார்த்தையின் வீரியம்.. இன்னைக்கு எவன் காசு கேட்டாலும் உடனே போன்ல வீடியோ எடுத்து எக்ஸ்போஸ் பண்ணிடறாங்க இதனாலே லஞ்சம் வாங்க பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க... இதான் மாற்றம்🔥
நன்றி அண்ணா @TVKVijayHQ@CMOTamilnadu 🫡