திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் முடிந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்படுகிறது அந்த காட்சியை அனைவரும் கண்டு முருகனை மனமார வணங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்
யோகா, ஒரு மனிதனின் வாழ்வின் வேர். உயிரின் தன்மையை உணர முடியும் என்பதனை எடுத்துக் காட்டியிருக்கிறது.
பாரத தேசத்தில், இறைவன் முதல் - சாது சந்நியாசிகள் வரை யோகா ஆசனங்களையும், யோகா முத்திரைகளையும் முன்னிலை படுத்தியுள்ளனர்.
நம்மோடு, வாழ்வியல் ரீதியாக கலந்து, உயிரின் உன்னத நிலையை கண்டறிய, நமது தேசத்திற்கு ஒரு வேரான இந்த யோக கலையை உலகிற்கே எடுத்துக் கூறி, இந்நாளை சர்வ தேச யோகா தினமாக கொண்டுவந்தார் நமது பிரதமர் திரு @narendramodi ஐயா.
என்றும் ஆரோக்கியமாக, உயிர் தன்மையோடு அனைவரும் வாழ யோக கலையை முன்னெடுப்போம்.
#InternationalDayofYoga2025
கந்த சஷ்டி பாடல் உருவான கதை...
கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நம் உடலில் ஒருவித நேர்மறை ஆற்றல் பரவி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
அதானால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும். அப்படிப்பட்ட அந்த பாடல் வரிகளை பாடியவர் தேவராய சுவாமிகள் என்பவராவார்.
கந்த சஷ்டி பாடல் உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானதாகும்.
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தேவராயர் ஒருமுறை சென்றபோது மலையை சுற்றி கிரிவலம் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மண்டபங்களில் பலரும் பலவிதமான நோய்களால் துன்புறுவதைக் கண்டு வருந்தியுள்ளார். அவர்கள் அனைவரும் நலமடைய வேண்டும் என மனதில் உறுதி எடுத்துகொண்ட தேவராயர் முருகரை பார்த்து உருகி வேண்டியுள்ளார்.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பழனி முருகர், "உன் எண்ணம் ஈடேற அருளினோம். பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகில் உள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!'' என ஆசி வழங்கி மறைந்துள்ளார்
பழனி ஆண்டவரை கண்ட தேவராயர் பரவசத்துடன், "அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!'' என ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
முருகன் திருவருளை வியந்து போற்றி பாடல் ஒன்றை உடனடியாக பாடி வழங்கினார். அதுவே 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற மந்திரம் ஆகும்
யார் இந்த தேவராய சுவாமிகள்?
கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவராவார். அவருடைய தந்தையார் கணக்கர் வேலை செய்த வீரசாமிப்பிள்ளை எனவும் இவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனவும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.
வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைச் செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் பிறந்தவரே தேவராயராவார். நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்ட தேவராயர் தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம்.
தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது.
தற்போது அனைவராலும் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் 'பழனி மலையின் மீது கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்' (பழனிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்ற பாடல் வரியை அடிப்படையாக கொண்டு இக்கவசம் பழனியில் பாடப்பட்டது எனக் கூறப்படுகிறது
கந்த சஷ்டி கவசம் எப்போது படிக்க வேண்டும்?
விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படித்தல் நன்மை பயக்கும்.
கந்தசஷ்டி கவசம் அருளும் பலன்கள்...
முருகனின் பெயரால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்பார்கள். எதிரிகளின் மனம் மாறி தோழமை உண்டாகும். வீட்டை பிடித்திருக்கும் தரித்திரம், பீடை, செய்வினைகள் அடியோடி அழிந்துவிடும். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகளான லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி உண்டாகும்.
தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனமும், உடலும் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும்.
முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
முருகனுக்கு உகந்த நாட்கள், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தினத்திலும், முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தைப் படிப்பதாலும், முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நிறைவேறும்
ஓம் முருகா போற்றி 🙏🏻
யாராக இருந்தாலும் முன் ஜென்ம கர்ம வினையை அனுபவித்தே தீரவேண்டும்!🌹
நாம் வாழுமிடம், வாழும் மனை, வாழும் குலம், வாழ்க்கைத்துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று சாஸ்திரம் அறுதியிட்டுக் கூறுகிறது.
இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.
பகவான் ஶ்ரீ கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ‘ஸ்ரீநாராயண தீர்த்தர்’ என்ற துறவி. இவரது சீடர்கள், ஒரு நாள் ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவரது பாதங்களில் சமர்ப்பித்தனர்.
“இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன” என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள், “குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை” என்றனர்.
உடனே நாராயண தீர்த்தர், “இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம் “என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட ஶ்ரீ நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு வரகூரில் அருள் புரியும் ஶ்ரீ கிருஷ்ண பகவானை நோக்கி வலி மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதார்.
வேதசத்சங்கம்
அதன் விளைவாக, எம்பெருமான், ‘பூபதிராஜபுரம்’ எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, “நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய். அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய். நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது” என்றார்.
இதன் பின், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் வலியின் துயரம் தீர்த்துக் கொண்டார் ஶ்ரீ நாராயண தீர்த்தர்.
இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை மறு பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி….🌹
#கொரோனா தொற்று மீண்டும் தொடரும் இந்த காலங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால்
பீதி அடைய வேண்டாம்...
ஹோமியோபதி மருந்து கடையில்
#ஆஸ்பிடோஸ்பெர்மா என்ற சொட்டு மருந்து கிடைக்கும்.
தாமதமில்லாமல் வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் 20 drops மருந்து கலந்து நோயாளிக்கு கொடுங்கள்.
ஆக்ஸிஜன் அளவு உடனே
மீண்டும் Normal ஆகிவிடும்.
Corona சமயத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காத போது, இந்த சொட்டு மருந்துதான் பலர் உயிரை காப்பாற்றியது...
எப்போதும் வீட்டில் வைத்து இருங்கள். முதியவர்களுக்கு சமய சஞ்சீவியாக பயன்படும்.
#படித்தேன்_பகிர்ந்தேன்.
உலகின் முதல் சிவன் ஆலயம் - உத்தரகோசமங்கை
சிவனின் சொந்த ஊர் மற்றும் உலகின் முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில் மற்றும் நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம் இது தான்!
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம் இது.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம் இது.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம் இது.மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம் இது.
இப்படி பலப்பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு, சாந்தமாய் இருக்கும் ஆலயம் - அதுதான் - இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோவில்.
உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர்சுயம்புலிங்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம், 'தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.
இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.
பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில் சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்குஉண்டு.இந்த
ஆலயம் சிதம்பரம் கோவி
லுக்கு முன்பே தோன்றியது.
உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
ஓம் நம சிவாய 🙏
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
1971இல் நடந்தது என்ன?
உண்மையிலே இந்திரா இருப்பு மனிதர் தானா?
சிம்லா ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?
அருமையான தகவல்கள் கொண்ட காணொளி.
அவசியம் பார்க்க வேண்டும். பார்த்து பகிர்ந்தால் பலருக்கு இந்த தகவல்கள் சென்றடையும்.
*வேத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபா*
(ஸ்தாபிதம் 1942 பொயு)
*ஶ்ரீ நரஸிம்ஹ ஜயந்தி*
5127 விஶ்வாவஸு ௵ சித்திரை ௴ 28 ௳, 2025 மே 11
பகவான் நரஸிம்ஹர் பல தத்துவங்களை உணர்த்துகிறார் – இறைவன் எங்கும் இருப்பவன், பக்திக்கு இளகுபவன், துஷ்டர்களை சிக்ஷிப்பவன், கஷ்டங்களைப் போக்குபவன், உண்மையில் இரண்டற்றவன், திவ்யமான மாயா ஶக்தியினால் மட்டும் பல வடிவங்களாக காட்சியளிப்பவன், என்றிவ்வாறு.
எந்த வடிவானாலும் ஒரே இறைவன் தான் என்றாலும், நாம் எதிர்பார்க்கும் பலனுக்கேற்ற வடிவில் இறைவனை உபாஸிக்க வேண்டும் என்றும் ஶாஸ்த்ரத்தில் உள்ளது. “ப்ரஹ்லாதனின் கஷ்டத்தைப் போக்க வந்தவனே! எனக்கு கைகொடுப்பாய்!” என்று பகவத்பாதர் நரஸிம்ஹரை வேண்டுகிறார்.
ஆகவே கஷ்ட நிவ்ருத்திக்கும், துஷ்ட ஶக்திகளை அடக்கி தர்மத்தைக் காக்கவும் ப்ரார்த்தித்து நரஸிம்ஹர் ஆவிர்பவித்த ஜயந்தியான வைஶாக ஶுக்ல பக்ஷ மாலை நேர சதுர்தஶியன்று பகவான் நரஸிம்ஹரை வணங்கி பூஜித்து துதித்து அவர் அருளைப் பெறுவோம்.
ஸ்தோத்ரங்களுடன் கூடிய லகு பூஜா பத்ததி பல லிபிகளில்:
https://t.co/A18PnTpmsM #kamakoti
Thumb massage for your brain 🧠
It can reduce tension and stress in the head, provides a comfortable feeling and relives the symptoms of dizziness 💆♀️💯
திருவாரூர் கங்களாஞ்சேரி அருகில் உள்ள நாகக்குடி எனும் கிராமத்தில் உள்ள சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யும்போது போது சிவலிங்கம் நீலநிறமாகக் காட்சி அளிக்கும் அற்புதகாணொளிக் காட்சி
இது ராகு-கேது பரிகாரஸ்தலம்!!