தமிழக மக்களுக்கு அதீத ஞாபக மறதி :-
மக்களே! பொதுவாக நமக்கொரு பழக்கம் உண்டு.. ஒரு புதிய பிரச்சனை வரும்போது, அதற்கு முந்தைய பிரச்சனையை அப்படியே மறந்துவிடுகிறோம்.
திரு. விஜய் அவர்கள், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் இலவச மின்சாரம் என்றும், அதுவும் 500 யூனிட் வரம்பிற்குள் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்றும் அறிவித்தது பெரும் ஏமாற்றமே!
தற்போது மக்கள் அரசு தங்களை ஏமாற்றியதை மறந்துவிட்டு, அடுத்த பிரச்சனையான ₹2,500 உதவித்தொகை வரவில்லை என்பது குறித்துப் பேசத் தொடங்கிவிட்டனர். இதையும் மறந்துவிட்டு அடுத்து வரப்போகும் வாக்குறுதிகளான 6 சிலிண்டர்கள், தாய்மாமன் சீர், பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம், முதியோர்களுக்கு ₹3,000, மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹15,000, குடும்பத்திற்கு ஒரு இலவச பைக் மற்றும் ₹25 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு போன்ற அனைத்தையும் மக்கள் ஒருநாள் மறந்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
இப்படியொரு மனநிலையில் மக்கள் இருக்கும் வரை, நம்மை ஆளத் தகுதியற்றவர்கள் தான் நம்மை ஆளுவார்கள். அதுதான் நம் தலைவிதி.
-Psk ✍🏻
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #DMK #udhayanithistalin #DravidaModel #Assembly #TVK #FakePromise
TVK's organised SCAM...!
ஆட்டோ ஓட்டுநர் டூ எம்.எல்.ஏ-வா? அல்லது வெறும் புத்திசாலித்தனமான பி.ஆர் (PR) வேலையா? கே.வி. விஜய் தாமு (தமிழக வெற்றிக் கழகம் - ராயபுரம்), தான் அடித்தட்டு மக்களிடமிருந்து வந்த ஒரு சாதாரண "ஆட்டோ ஓட்டுநர்" என்று கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
முக்கிய புள்ளிகளை வீழ்த்தி 59 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனால், அவருடைய அதிகாரப்பூர்வ தேர்தல் சத்தியப்பிரமாணப் பத்திரத்தைப் (Affidavit) பாருங்கள்: அவரது சொத்துப் பட்டியலில் எங்குமே ஒரு ஆட்டோ ரிக்ஷா கூட குறிப்பிடப்படவில்லை.
**அதற்கு பதிலாக:**
* ஜனவரி 2025-ல் வாங்கிய **₹20 லட்சம்** மதிப்புள்ள புத்தம் புதிய **டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா** (TN 07 DM 2224).
* இரண்டு ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள்/ஸ்கூட்டர்கள் (2023 & 2022).
* மொத்த சொத்து மதிப்பு: **₹28.9 லட்சம்.**
**கடன்கள் (Liabilities): ₹0**
**அறிவிக்கப்பட்ட ஆண்டு வருமானம்: ₹0** (வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை).
அறிவிக்கப்பட்ட வருமானம் ஏதுமில்லாமல், கடன்களும் இல்லாமல், ஒரு "ஆட்டோ ஓட்டுநர்" ஜனவரி 2025-ல் ₹20 லட்சம் மதிப்புள்ள இன்னோவா காரை எப்படி வாங்கினார்?
"ஆட்டோ கன்சல்டிங் பிசினஸ்" என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது... ஆனால் ஆட்டோ எங்கே? இது மக்களின் சக்தியா அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பமா?
#VijayDamu #Royapuram #TVK #AutoDriverToMLA #TamilNaduElections2026 #AffidavitExposed #தமிழகவெற்றிக்கழகம் #ராயபுரம் #விஜய்தாமு
- @ThamizhTharmar
“எதிர்க்கட்சியில் இருக்கும்போது பொருளாதாரம், அதிகாரத்தில் வந்தவுடன் காரணங்களும் சமாதானங்களும் -
இதுதான் - பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.”
——-
இந்த நபருக்கு உண்மையிலேயே பொருளாதாரம் பற்றிய அறிவு இருக்கிறதா⁉️
முழுக்க முழுக்க பொறுப்பற்ற, அறிவில்லாத பதில்தான் இது.
2018ஆம் ஆண்டு, அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் இவர் பேசிய முதல் காணொளியில், ஒரு நிபுணர் போல, “ஒரு மாநிலம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 25%-ஐ தாண்டி கடன் வாங்கக் கூடாது” என்று கணக்கு சொல்கிறார்.
ஆனால், தற்போது திமுக ஆட்சியில் திட்டக்குழு துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவர், இரண்டாவது காணொளியில், “கடன் ஏன் குறைய வேண்டும்? கடனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இவர் தானே முன்பு கூறிய கணக்கைப் பயன்படுத்திப் பார்த்தால்கூட -
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) டிசம்பர் 2025: ₹35.67 லட்சம் கோடி
தமிழ்நாட்டின் மொத்த கடன் டிசம்பர் 2025: ₹9.25 லட்சம் கோடி
இதன்படி, கடன் விகிதம் சுமார் 26% ஆகிறது. இவர் சொன்ன 25% எல்லையைத் தெளிவாகத் தாண்டியிருக்கிறது.
இதற்கெல்லாம் உங்களுக்குச் சிறிதளவாவது பொறுப்பு உணர்ச்சி இல்லையா?
இந்தக் கடன் இறுதியில் யார் மீது விழப் போகிறது?
எந்தவொரு பொருளாதாரப் புரிதலுமின்றி, நியாயமான கேள்வி கேட்கும் நெறியாளரிடம், “இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று சொல்லுவது தான் இங்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
தமிழ்நாடு மாநில திட்டக்குழு நிர்வாக துணைத் தலைவர் திரு. ஜெயரஞ்சன் அவர்களுக்கு, (திமுக உறுப்பினர்)
நம் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதை நாம் மறக்கக் கூடாது:
“கடன் என்பது வெறும் நிதிச் சுமை மட்டுமல்ல; அது பலவீனமான மக்களைச் சுரண்டும், அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு கருவியாகவும் மாறுகிறது.”
இன்று திமுக ஆட்சியில்,
அதே கடன் கொள்கைகளால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், பலவீனமான மக்கள் சுமை சுமக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது சுரண்டலா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். ஆனால், இந்த நிலைமை நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
#DMKfailsTN
——
“Economics when in opposition, excuses when in power – that’s Jeyaranjan - So Called Economist .” - #DMKFailsTN #JeyaranjanLier
Does this person really have any understanding of economics⁉️
This is nothing but an irresponsible and ignorant response.
In 2018, during the AIADMK regime, in his first video, he speaks like an expert and claims that “a state should not borrow more than 25% of its Gross State Domestic Product.”
However, now, while serving as the Vice Chairman of the State Planning Commission under the DMK government, in a second video he asks, “Why should debt be reduced? What does debt have to do with you?”
Even if we evaluate the situation using the very calculation he himself earlier advocated -
Gross State Domestic Product (GSDP) December 2025: ₹35.67 lakh crore
Total debt of Tamil Nadu
December 2025: ₹9.25 lakh crore
This puts the debt ratio at approximately 26%, clearly exceeding the 25% threshold he once insisted upon.
Do you not feel even a little sense of responsibility for this?
Ultimately, on whose shoulders will this debt fall?
Dismissing a legitimate question by saying “this has nothing to do with me”, without any real economic understanding, is the real problem here.
Mr. Jeyaraman, Exective Vice Chairman, Tamil Nadu State Planning Commission - DMK Member
Let’s not forget our Leader Arignar Anna said “Debt doesn't merely represent a financial liability but embodies exploitation and domination, particularly of vulnerable populations”
Exploiting & making vulnerable population suffer is happening now in DMK Govt.
Hope you understand this Mr. Jeyaranjan
#DMKFailsTN
@TN_Plan@TVKVijayHQ@TVKHQITWingOffl@TVKPartyHQ@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam@imrajmohan
கேள்வி மிக சிம்பிள் தமிழகம் அதிமுக ஆட்சியில் பத்து வருடத்தில் 2011-2021 வரை வாங்கிய கடன் மூன்றே முக்கால் லட்சம் கோடி கடன் அதாவது வருடத்திற்கு 37000 கோடி தோராயமாக கடைசி வருடம் கொரோனா கால கட்டத்தையும் சேர்த்து தான் இந்த முழு கடன் தொகை.
அதே திமுக ஆட்சிக்கு வந்த 2021 முதல் 2026 வரை, இன்னும் நான்கு மாதம் முடிய இருக்கும் காலம் வரை முதலிலேயே வாங்கிய மற்றும் இனி நான்கு மாதங்களுக்கும் சேர்த்து வாங்கப்போகும் கடன் ஐந்து லட்சம் கோடி ஐந்து வருடத்தில் அதாவது அதிமுக கட்சியை விட வருடம் அறுபதாயிரம் கோடி ரூபாய் வருடம்தோறும் திமுக ஆளும் அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது.
மறுபுறம் முந்தைய அதிமுக கட்சியை விட திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தியதால், சொத்து வரி உயர்த்தியதால்,பத்திரத்துறை வரிகளை உயர்த்தியதால் ,மாநில ஜி.எஸ்.டி வரி வசூல் உயர்வு என தமிழக அரசு,ஏழை நடுநிலை மக்கள் மீது வரிகளை,கட்டண உயர்வுகளை தலையில் சுமத்தியதால் வரும் வருமானம் வருடம் ஒரு லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதாவது முந்தைய அதிமுக ஆட்சியை விட ஒரு லட்சம் கோடி பணம் தமிழக மக்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கப்பட்டு தமிழக அரசிடம் சேர்கிறது.
சரி இப்பொழுது தமிழக கடன் தொகை வருடம் ஒரு லட்சம் கோடி அதிகம் வாங்குவது ஒரு பக்கம் மற்றும் மக்கள் மீது வரிகளை கட்டணங்களை சுமத்தி வசூலித்த ஒரு லட்சம் கோடி ஆக மொத்தம் வருடம்தோறும் இரண்டு லட்சம் கோடி என நான்கு வருடங்களில் எட்டு லட்சம் கோடி மற்றும் முதல்வருடத்தில் அதாவது 2021 ஆம் வருடம் ஒரு லட்சம் கோடி என ஒன்பது லட்சம் கோடிக்கு தமிழக அரசு செலவு செய்துள்ளதிற்கு அதிமுக கட்சி தலைமை கேட்பது நியாயமான கேள்வி என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள்??? என திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய கேட்டதை இது வரை திமுக தலைமை பதில் அளிக்கவில்லை அதை விட மாநில அரசாங்கம் வாங்கும் கடனுக்கும் பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார் ஆகப்பெரும் அறிவாளி பொருளாதார வல்லுநர் முனைவர் ஜெயரஞ்சன்.
மாநில கடனை இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினோ, உதயநிதி ஸ்டாலினோ திமுக அமைச்சர்களோ தங்களது சொந்தப்பணத்தில் இருந்தோ சொத்தை விற்றோ தமிழக கடனை அடைக்கப்போவதில்லை.அதன் முழு பொறுப்பும் தமிழக மக்களின் தலையில் தான் மீண்டும் வரிகளாக கட்டண உயர்வுகளாக வந்து விடியப்போகிறது.இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதிகம் கடன் வாங்கி அங்குள்ள கட்சி தலைவர்கள் ஊழல் செய்ததால் தான் மக்களுக்கு உணவு கூட வாங்க முடியாத நிலை வந்தது என ஜெயரஞ்சனுக்கு யாராவது எடுத்து சொன்னால் சரி.
திமுக அரசுக்கு ஆட்சி நிர்வாகமும் தெரியவில்லை கடன் அதிகரிப்பை எப்படி கையாள்வீர்கள் என்று கேட்டால் நீங்களா கடன்தொகையை கட்டப்போகிறீர்களா என்று எகத்தாளமாக பொருளாதார வல்லுநர் முனைவர் ஜெயரஞ்சன் கேட்பது இவர்கள் எந்த அளவிற்கு நிர்வாகத்தை மூடி மறைத்து சீரழித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தமாக தெரிகிறது.ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு சீரழிந்து மாணவர்கள் போதையின் பாதையில் செல்வதை தடுக்க முடியாமல் திணறும் தமிழக அரசு மறுபக்கம் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக மக்கள் மீது வரிகளை சுமத்தி வருவாய் அதிகரித்தும், அதிகபட்சம் கடன்தொகை வாங்கி வரும் பணத்தில் தோராயமாக எத்தனை லட்சம் கோடி திமுக ஊழல் செய்துள்ளது என்பது குறைந்தது இரண்டு லட்சம் கோடி இருக்கும் என்பது கணிப்பு.அதில் ஒரு லட்சம் கோடி பணம் முந்தைய திமுக நிதியமைச்சர பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே ஒரு ஆடியோவில் சொன்னது போல் அது திமுக மாப்பிள்ளை மகன் குடும்பம் வெளிநாட்டில் முதலீடு செய்திருக்கும், அடுத்தது திமுக அமைச்சர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை கடந்த நான்கு வருடத்தில் இன்னொரு ஒரு லட்சம் கோடியை தங்களுக்குள் பங்கு போட்டிருப்பார்கள் என்பது கற்பனையான வாதமோ இல்லை பொய்யான செய்தியோ இல்லை.இதை உங்கள் சாதாரண அறிவை கொண்டு யோசித்தாலே உண்மை என்று புரியும்.