We at Neelam Cultural Centre extend our deepest condolences to the victims and families affected by the Ahmedabad plane crash. Our thoughts and prayers are with all those grieving during this tragic time. 🕊️ #AhmedabadCrash#InMemoriam#planecrash@beemji
இவன்! வேடன்! குரலற்றவர்களின் குரலாய்!
அவனின் முதல் குரல் மக்களின் மீது அதிகார வர்க்கத்தின் எதிரான முதல் குரல் 2021 அன்று ஒளிர்ந்தது!
அவர்களுக்கு எதிராக!
அன்றும்! இன்றும்! ஒரே குரல்! ஒலிக்கும் குரல்!
வேடனுடன் துணை நிற்போம்!
வர்க்க ��ரசியலுக்கு எதிராக!
@beemji @Neelam_Culture
Wishing the new Chief Justice of India the strength to uphold the Constitution in its true spirit — one that
Dr. Babasaheb Ambedkar envisioned: rooted in justice, liberty, equality, and fraternity. May justice finally reach those long denied. #JaiBhim@beemji
#சமூகசமத்துவத்தை போதித்து நால்வருண முறையை அடியோடு ஒழித்து புன்மையான சமயச் சடங்குகளை வன்மையாக கண்டித்த மனிதகுலப் போராளி,
உலக மக்களின் ம���தல் தலைவர்
கெளதம புத்தர் பிறந்தநாள் இன்று!
அனைவருக்கும் புத்த பூர்ணிமா நல்வாழ்த்துகள்!🌸💐🌸
#SocialEquality
#buddhapurnima2025
#BuddhaJayanti
#JaiBhim💙🔥
#DalitHistoryMonth
We are delighted to share
that Vaanam Arts Festival 2025✨🎭 Organized by the
#NeelamCulturalCenter will begin with great enthusiasm on April 1st,at Neelam Books. Let us all begin the month of Unity together.
We extend an invitation to all💙
#IndianBuddhist demands Justice. Mahabodhi Mahavihara should be in the hands of Buddhist people.
Non Buddhist should leave Mahabodhi Mahavihara control. Mahabodhi Mahavihara is a Buddhist most sacred Place.
#Repealbtact1949#mahabodhitemple
- Dhammachakara
வன்மையான கண்டனங்கள்!
#தூத்துக்குடி_ஸ்ரீவைகுண்டம்
அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின பள்ளி மாணவர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற காரணத்திற்காக அவர் மீது கொலைவெறித் ���ாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
#தூத்துக்குடிமாவட்டம் #ஸ்ரீவைகுண்டம்
அரியநாயகிபுரம் செங்கல் சூலையில் வேலை செய்யும் தங்க கணேஷ்- மாலதி தம்பதியின் மூத்த மகனான தேவேந்திரராஜா பாளையங்கோட்டை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தேவேந்திரராஜா கபடி விளையாட்டில் தேர்ந்த திறமை கொண்டவர் என்பது அங்குள்ளவர்கள் அ��ிந்த ஒன்று. விடுமுறை நாட்களில் கபடி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள மாணவர்கள் கடந்த மாதம் அரியநாயகிபுரம் அருகிலுள்ள கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள கபடிக் குழுவோடு இறுதிப் போட்டி விளையாடி இருக்கிறார்கள். இதில் அரியநாயகிபுரம் கபடி அணி வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்றவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது கொண்டாட்டத்தை தோல்வியடைந்தவர்களால் ஏற்ற��க் கொள்ள் முடியாமல் இன்று காலை 8 மணியளவில் அரியநாயகிபுரம் பேருந்தில் ஏறி பாளையங்கோட்டை பள்ளிக்கு தேர்வு எழுத வந்த தேவேந்திரராஜாவை கெட்டியம்மாள்புரம் பேருந்து நிறுத்தத்தில் ‘பேருந்து விட்டு இறக்கி பறப்பயலே, எங்களை எதிர்த்து விளையாடியதோடு, ஜெயிச்சுட்டு கொண்டாடுவியா?’ என்று கெட்டியம்மாள் புரத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் (மறவர்) சராமாரியாக வெட்டி இருக்கிறார்கள். இதில் தே��ேந்திர ராஜாவின் தலையில் பலமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. முதுகுப் பகுதியில் ஆங்காங்கே வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இடது கையில் மூன்று விரல்களை துண்டாக வெட்டி இருக்கிறார்கள்.வலது கையில் மணிக்கட்டு முழுவதும் வெட்டப்பட்ட���ள்ளது.மிகவும் ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவேந்திர ராஜா மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மூன்று பேரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள். காவல்துறையிடம் கொலையாளிகள் மூன்று பேரையும் நிர்பயா கமிட்டி பரிந்துரையின்படி உடல் திறன், மனோ நிலையை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
பாதி��்கப்பட்ட பட்டியலின மாணவருக்கு உரிய நீதி வழங்கிடவும், அவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.
தென் மாவட்டங்களில் பட்டியலின பள்ளி மாணவர்கள் மீது தொடரும் சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் சமூகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி மாணவர்கள் சாதியத் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் இருக��கும் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவது குறித்து அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது?
இனியாவது தமிழக அரசும்,
காவல்துறையும் இது போன்ற நிகழ்வுக���ை தடுத்த நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.திமுக அரசு,
காவல்துறை,பள்ளிக்கல்வித்துறை தமக்கிருக்கும் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்பட வேண்டும் என
#நீலம்பண்பாட்டுமையம் கோருகிறது.
@beemji @mkstalin @CMOTamilnadu @Anbil_Mahesh @Collectortnv @CityTirunelveli
#பட்டியல்_சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷின் மரணத்திற்கு #நீதி_வேண்டும்!
‘எறும்பு கடித்து இறந்ததா��� போலீஸார் கூறுவதை ஏற்க முடியாது’ எனக்கூறி போராடும் பெற்றோருக்கும் துணை நிற்போம்.
#திருநெல்வேலிமாவட்டம்
அண்ணாநகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் விக்னேஷ் (21),#தேனிமாவட்டம் போடியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த பிப்ரவரி (13.02.2025)வியாழன் அன்று தேர்வு எழுதிவிட்டு வந்தவர் நீண்ட நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை.இதனால் சகமாணவர்கள் கல்லூரி முழுவதும் தேடியுள்ள நிலையில் இரவு சும���ர் 10.45 மணியளவில் கல்லூரி விடுதியின் கழிவறை ஒன்று உள் பக்கம் பூட்டிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், உடனடியாக விடுதிக் காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது விக்னேஷ் உடலில் பல்வேறு இடங்களில் இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.பின்னர் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். அதன்பேரில�� காவல்துறை உடலை மீட்டுப் பிரேதப்பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறது.
மேலும், மாணவர் விக்னேஷின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது. காரணம், காவல்துறையே முதலில் வலிப்பு வந்து இறந்துவிட்டார் என்றும் பின்னர் எறும்பு கடித்து இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுகிறார்கள். அதோடு விடுதிக்காப்பாளரான பாண்டியராஜனும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையை போன்றே முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே வழங்கி வருவதாகவும் விக்னேஷின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் @Tnicollector
அலுவலகத்த��க்கு உயிரிழந்த விக்னேஷின் பெற்றோர் உள்ளிட்ட அவரது உறவினர்கள், விக்னேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் போலீஸார் விசாரிக்காமல் வழக்கை முடிக்க முயற்சி செய்கின்றனர் எனவும் குற்றம்சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எங்களது மகன் இறப்பில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வந்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலை முற்றுகையிட்டும��� போராடி இருக்கின்றனர். வெறும் காவல்துறையின் விசாரணைப் போக்கு ஒருதலைப் பட்சமாக இருப்பதால் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனு அளித்திருக்கின்றனர்.
தேனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷின் உடலைப் பார்ப்பதற்கு அவரது பெற்றோரைக்கூட காவல்துறை முதலில் அனுமதிக்கவில்லை. பல்வேறு கட்ட போராட்டத்திற்கு இடையே அனுமதிக்கப்பட்டனர். மகனின் உடலைப் பார்த்த விக்னேஷின் தந்தை ‘என் மகனின் உடலில் காயங்கள் இருந்தன. காதுக்குள் இருந்து ரத்தம் வடிந்திருக்கிறது. சகமாணவர்களிடம் விசாரித்தபோது கழிப்பறையில் இருந்து மகனின் உடலை எடுத்தபோது ஆசனவாய் பகுதியில் இருந்தும் இரத்தம் இருந்ததாகக் கூறினர்’என்கிறார். ஆனால், சாதிய உடை அணிந்த க��வல்துறையோ எறும்பு கடித்து இறந்திருக்காலம், மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம், வலிப்பு வந்திருக்கலாம், தற்கொலை செய்திருக்கலாம் என வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர். என் மகன் அடித்து துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்கிறது. மேலும் பிரேதப்பரிசோதனை அறிக்கையை எங்களிடம் காட்ட மறுக்கின்றனர். பிரேதப்பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்ற எங்கள���ு கோரிக்கையை நிராகரித்தனர் என்றும் கூறுகின்றனர். போடிநாயக்கனூர் சாதிய உடை அணிந்த காவல்துறையும் இந்தக் கொடூரமான மரணத்தை முறையாக விசாரிக்காமல் மெத்தனப் போக்கில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மாணவனின் பெற்றோரையும் காவல்துறையின் கல்லூரி நிர்வாகமும் அலைக்கழிப்பு செய்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி உடலை வாங்கிச்செல்லுமாறு மிரட்டி வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரி���தாகும். சமீப காலமாகத் தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதும், மாணவர்கள், இளைஞர்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தங்கு தடையின்றி நடந்தேறி வருவது வேதனையளிக்கிறது. காவல்துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரும் இது குறித்துப் பேசாமல் எளிதாகக் கடந்து செல்வது விவாதத்திற்குரியது. இது குறித்து இன்று விக்னேஷின் ��ரணத்திற்கு நீதி வழங்கிட கோரி
பெற்றோர்,உறவினர்கள் திருநெல்வேலி ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்,
@Collectortnv மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே, மாணவர் விக்னேஷின் உடலை மூன்று தலைமை மருத்துவர்களைக் கொண்டு வீடியோ பதிவுடன் உடற்கூறாய்வு செய்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசை
#நீலம்பண்பாட்டுமை���ம் வலியுறுத்துகிறது!! #JusticeForVignesh
@beemji @CMOTamilnadu
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை மகா சங்காதிபதி வண.பிக்கு தம்மசீலர் தலைமையில் எதிர்வரும் 18.02.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காஞ்சிபுரத்தில் பௌத்த பண்பாட்டு எழுச்சி மற்றும் உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக திரிபிடகம் ஓதும் மாநாட்டை நடத்தவுள்ளது.
அனைவரும் வருக! #JaiBhim @CMOTamilnadu
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்ப��ி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் @mkstalin அவர்களே!! தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!
@beemji @Neelam_Culture
#MKStalin | #PaRanjith | #DalitLivesMatter | #neelamsocial
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மா���்புமிகு முதல்வர் @mkstalin அவர்களே!! தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!
மதுரை அலங்காநல்லூரிலிருந்து வரும் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் 35 கலைஞர்களை கொண்டுள்ள சமர் இசைக்குழுவை வழிநடத்துபவர். மாற்று சிந்தனை இசைக்காக பெரியாரிய விருது, மக்கள் கலைஞன் விருது என பல விருதுகளை பெற்று, பல தமிழ்த் திரைப்படங்களில் பறை இசைக்கலைஞராக தோன்றி பிரபலமடைந்த வேலு ஆசான், நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு பங்கேற்பவர். கடந்த 2022ஆம் ஆண்டின் ‘மக்களிசை மாமணி’ விருது வழங்கி ‘நீலம் பண்பாட்டு மையம்’ கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. கலைஞர் வேலு ஆசான் அவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அளித்திருப்பது வரவேற்கக்கூடியது. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.