தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் சிறப்புரையில், கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க��கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 04 :
இளைஞர் அணிக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கு இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, நமது நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்த நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்��்த நன்றியையும், வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
#கழக_இளைஞர்_அணி
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்ன���ற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவாலங்காடு கிழக்கு ஒன்றியம் மணவூர் கிராமத்தைச் சார்ந்த ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் திரு.வசந்த குமார் அவர்களின் மறைவுற்ற தந்தை திரு.N.C.எட்டியப்பன் அவர்களின் படத்திறப்பில் கலந்துக் கொண்டு படத்தினை திறந்து வைத்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம்.
உடன் :-
திரு.எஸ்.மகாலிங்கம்
(திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர்)
மற்றும் கழக நிர்வாகிகள்.
தமிழ்நாட்டின் தலைமகன் ��ேரறிஞர் அண்ணா அவர்களின் 57ஆவது நினைவு நாள் இன்று!
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டியெழுப்பி, சாமானிய மக்களின் கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர்.
தமிழ் உணர்வு - மாநில உரிமைகள் - சமூகநீதி ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கி - ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தவர்.
இந்தித் திணிப்புக்கு எதிராக அண்ணா மூட்டிய தீ இன்றும் பரவுகிறது!
பாசிஸ்ட்டுகளை பதற வை���்கின்ற அச்சத்தின் வழியே தமிழ்நாட்டை இன்றும் அண்ணாவே ஆள்கிறார்.
பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடைபோடும், நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், மீண்டும் கழக அரசை அமைத்திடவும் - தமிழ்நாட்டை பாதுகாத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.
தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களை முடக்கி, #SIR போன்ற ஜனநாயக உரிமைப் பறிப்புகளில் ஈடுபடும் டெல்லி ஆதிக்கவாதிகளையும், வாய்மூடி - பிரச்னைகளைத் திசைதிருப்பி, அவர்களுக்குத் துணை போகும் பழைய - புதிய அடிமைகளையும் வீழ்த்தி, 2026-இல் மீண்டும் வெல்வோம்! வரலாறு படைப்போம்!
முயற்சியும் பயிற்சியும் உறுதியும் கொண்டவர்களுக்கு, அவர்கள் விரும்பும் துறைகளில் வாய்ப்புகளை வழங்கி, `வெற்றி நிச்சயம்’ என்ற நிலையை உருவாக்க, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்!
திராவிட இயக்கம் எப்போதுமே புத்தகங்களைப் படைப்பதிலும் படிப்பதிலும் முன்நிற்கும் இயக்கம்.
தந்தை பெரியார் தன் கருத்துகளைப் பரப்ப புத்தகங்களை ஓர் ஆயுதமாய் கையாண்டார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அம்பேத்கரின் ‘சாதி ஒழிப்பு’, பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அவரது தம்பிமார்களும் ஏராளமான புத்தகங்களை எழுதி திராவிட இயக்க கொள்கைகளைப் பரப்பினர். சென்னை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி அமைப்புக்கு தன் சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களு���்கு விருதுகள் வழங்க ஊக்குவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
தந்தை பெரியார், ப��ரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதிலும் எழுத்தாளர்களைப் போற்றுவதிலும் தனிக்கவனம் செலுத்திவருகிறார் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
சென்னையில் மட்டும் நடந்த புத்தகக்காட்சியை மாவட்டம் தோறும் நடத்துவது, இலக்கியத் திருவிழாக்கள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லங்கள், முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை ��ாட்டுடைமை ஆக்குவது என்று அவரது தொடர் முன்னெடுப்புகள் அனைவராலும் பாராட்டப்படுகின்றன.
இந்த பாரம்பரியத்தில் நம் @dmk_youthwing-ம் ’முரசொலி பாசறை பக்கம்’, ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’, சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம் என்று வாசிப்பை ஊக்குவித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் முக்கியமான முயற்சி ‘முற்போக்கு புத்தகக்காட்���ி’.
பொதுவாக எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் அரசியல் நூல்கள், ஆன்மீகப்புத்தகங்கள், பொழுதுபோக்குப் புத்தகங்கள், சமையல் குறிப்புகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என எல்லாமும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’ என்னும் கழக இளைஞர் அணியின் முன்னெடுப்பு, தமிழ் அறிவுச்சூழலுக்கே புதிய முயற்சி.
மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், திராவிட இயக்கம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் இந்த ‘முற்போக்க�� புத்தகக் காட்சி’யில் அரசியல் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களின் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. மேலும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சு, கலைநிகழ்ச்சிகள் தினமும் நடைபெறவுள்ளன.
அடுத்த தலைமுறைக்கும் அரசியல் புத்தகங்களைக் கொண்டுசெல்வோம்!
வாசிப்பை நேசித்து முற்போக்கு அரசியலை முன்னெடுப்போம்!
@arivalayam #DMK75 #அறிவுத்திருவிழா
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் ரயில் மூலமாக கொண்டு செல்லப்படும் இடத்தில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டோம்.
இந்தாண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் டெல்டா பகுதியில் 1825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் குடோன்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கொள்முதல் காலம் த��டங்கப்பட்ட இந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 8 லட்சம் மெட்ரிக் டன் குடோன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வேளாண் துறையிலும் நம்பர் 1 எனும் இடத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறுவது பொறுக்காமல், சிலர் பரப்பும் வதந்திகளை ஒதுக்குவோம்.
நம் உழவர் பெருமக்களுக்கு என்றும் நம் அரசு துணை நிற்கும்!
@r_sakkarapani @Anbil_Mahesh @Govichezhian @TRBRajaa #DuraiChandrasekaran @Murasoli_tnj @NeelamegamTkg @KannaduraiDMK @peraiashok @ilaiyadmk @sunramanathan_
ஈராயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், இன எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, வெற்றிகளை குவித்திருக்கும் திராவிட இயக்கம், இம்மண்ணில் இருக்கும்வரை, ஆதிக்கவாதிகளுக்கு எதிராக
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!