விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
----------------------
'நீட்' தேர்வு: தமிழ்நாட்டில் தொடரும் தற்கொலைகள்!
நீட் தேர்விலிருந்து முற்றிலுமாக விலக்கு பெற சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
----------------------------
நீட் தேர்வு எழுதவிருந்த மாணவிகள் அண்மையில் கோவையை சார்ந்த அனு கீர்த்தனா மற்றும் சேலம் மாணவி கோபிகா ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கோவையைச் சார்ந்த மாணவி அனுகீர்த்தனா 'தேர்வு அச்சத்தால்' எழுந்த மன அழுத்தம் காரணமாக உறவினர்களுக்கு 'வாட்ஸ்ஆப்' மூலம் செய்தி அனுப்பிவிட்டு கடந்த ஜூன் 17 அன்று நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரியலூர் மாணவி அனிதா முதல் தற்போது கோபிகா வரை நீட் தேர்வால் தொடரும்
தற்கொலைகள் மிகுந்த கவலையளிக்கிறது.
நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் அச்சமடைவதற்கு மருத்துவக் கல்வி தொடர்பாக நாம் உருவாக்கி வைத்திருக்கிற 'பிரமையே' காரணமாகும். மருத்துவம் படித்தால்தான் சமூகத்தில் உயரிய மதிப்பைப் பெற முடியும் என்றும்; அடுத்து பெருமளவில் பொருளாதாரத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும் என்றும் இந்த சமூகம் கட்டமைத்துள்ள ஒரு மாயை தான், மாணவர்களை 'இந்தக் கல்வியைப் பெறமுடியாமல் போனால் எதிர்காலம் என்ன ஆகுமோ' என்கிற அதீத கற்பனைகளுக்கும் அச்சத்திற்கும் இட்டுச் செல்கிறது. எனவே, இத்தகைய மாயையைக்கும் அச்சத்துக்கும் ஆட்படாமல் துணிச்சலோடு எதனையும் எதிர்கொள்ள வேண்டுமென மாணவச் செல்வங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
கடந்த காலங்களிலும் மாநில அரசின் சார்பில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வுகள் நடந்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் இத்தகைய பிரமை மாணவர்களிடையே கட்டமைக்கப்படவில்லை.
இன்றைய சூழலில் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் நீட் தேர்வுக்குத் தரப்படும் அதீதமான முக்கியத்துவமும் அதனையொட்டி வணிகப்போட்டிகளைத் தீவிரப்படுத்தும் தனியார் பயிற்சி நிறுவனங்களால் மாணவர்களிடையே உருவாகும் 'தேர்வு அச்சமும்' தான் இவ்வாறான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'நீட் விலக்கு' மசோதாவைக் குடியரசுத் தலைவர் மறுதலித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், நீட் தேர்விலிருந்து முழு விலக்குப் பெறுவதற்கேற்ப தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்!
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி .
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் துறைசார்ந்த பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
இவ்வாய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. செஹனாஸ் இலியாஸ், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. மலையரசன், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரவிக்குமார், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
மகப்பேறு இறப்பு விகிதம் மாநில சராசரியைவிட அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி இளவயது திருமணங்கள், மாணவிகளின் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை தடுத்து, பரவலான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். மாவட்டத்தில் அமைந்துள்ள சமூக நீதித்துறை கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளை மேம்படுத்தவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 10 & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
சிங்கப் பெண்களாக ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் மாவட்டத்தில் மக்கள் நல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதிலும், பெண்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் வெற்றி பெறுவார்கள் என்று வாழ்த்தினேன்.
ஆசிய கண்டத்திலேயே மிக இளம் வயதில் சிம்பொனி இசையை படைத்து, லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவின் 92 இசைக் கலைஞர்களை கொண்டு அதனை பதிவு செய்து தாயகம் திரும்பிய இளம் இசை கலைஞர் திரு. லிடியன் நாதஸ்வரம் அவர்களை, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுடன் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றோம். இந்நிகழ்வில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ அவர்களும் லிடியன் அவர்களை வரவேற்று, பாராட்டி மகிழ்ந்தார்.
@lydian_official@imrajmohan
கோவை பகுதிக்குட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்போடு இக்கொடூரத்தை கடந்து போக முடியாது.
கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளானது. அவை ஆட்சி மாற்றத்தில் சரி செய்யப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது.
தவெக அரசு @TVKVijayHQ
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதை எல்லா விதங்களிலும் அணுகி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தமிழக அரசை @CMOTamilnadu@CollectorCbe
வலியுறுத்துகிறது.
இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்.
அரசியல் நேர்மையும்... கொள்கை உறுதியும்! ✊
மத்திய அமைச்சரவை பதவி, கோடிக்கணக்கான பணம் என எத்தனையோ வாய்ப்புகள் கதவைத் தட்டியபோதும், பதவி ஆசைக்காகவோ, பணத்திற்காகவோ என் கொள்கைகளை நான் ஒருபோதும் அடகு வைக்க மாட்டேன். சாதிய, மதவாத, சனாதன சக்திகளோடு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
தலைவர் @thirumaofficial
அடப்பாவிகளா.. இப்போ தான் புரியுது..
ஏன் இவர்.. நா மாநில அரசியலுக்கு வரேன்.. தேர்தல்ல நிக்கிறேன்னு சொன்னப்ப..திமுக தடுத்தது..
இவர பல காலமா State politics பக்கம் வராம பாத்துக்கிட்டு இருக்குன்னு..
உதயநிதிய தூக்கி சாப்பிட்டு இருப்பார் வந்திருந்தா😮
மே 5
பண்டிதர் அயோத்தி தாசர் நினைவு நாள்!
மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் செலுத்தினோம்!
VCK கட்சியில் இருந்து ஒருவர் அமைச்சராகும் போது தான் சாதிக் கொடுமைகள் ஒழிக்கப்படும்!
1. ஆணவ படுகொலைகள் தடுக்கப்படும்!
2. சாதிய வன்கொடுமைகள் முழுமையாக அழிக்கப்படும்!
3. பஞ்சமி நிலங்கள் மீட்கப்படும்!
4. தாட்கோ தன்னிச்சையாக இயக்கப்படும்!
"சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை"